மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பலவீனமான முதியவர்களுக்கு சத்துணவுக் குறைபாட்டினால் பசியின்மை, குறைந்த  அளவு உணவு உட்கொள்வது,   தானாகவே எடை குறைவது போன்றவை ஏற்படலாம்.
   
ஊட்டச்சத்துள்ள எளிய உணவு வகைகள் உட்கொள்ளவும்.  
பழங்கள், காய்கறிகள், முழுமையான உணவு தானிய வகைகள், பருப்பு வகைகள், கொழுப்புக் குறைவாக உள்ள பால் கடலை வகைகள், சோயாபீன் வகைகள், மீன் ஆகியவற்றை உண்ணலாம்.  

பதப்படுத்தப்பட்ட உண்வு வகைகளான ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்கவும் பூண்டு, வெங்காயம், மற்றும் நார் சத்து மிக்க காய்கறிகள், தக்காளி, சோயா, மற்ற பருப்பு வகைகள், சிட்ரஸ் வகைப்பழங்கள், திராட்சைகள் பச்சைத் தேயிலை ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

இறைச்சி, பால்பண்ணைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட சிலவகை உணவு வகைகள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கோக்/பிஸ்கட்டுகள் ஆகியவற்றை தவிர்த்தோ அல்லது குறைத்தோ உட்கொள்ள வேண்டும்.  

இதய நோயாளிகள் நார்ச்சத்து வகைகளை - முழுத்தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை - அதிகரிக்கவும். கொழுப்பு அதிகமுள்ள சிவப்பு இறைச்சி, நெய், வெண்ணெய், க்ரீம், தேங்காய் எண்ணெய் - ஆகியவற்றைக் குறைக்கவும்..

ஹைப்பர்டென்ஷன் இருந்தால் உப்பின் அளவைக் குறைக்கவும். கால்சியம் உள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினமும் உட்கொள்வதை ஆதிகரிக்கவும்.

பொதுவாகவே சரியான இடைவெளி (3 மணி நேரம்) விட்டு குறைந்த அளவு உணவை அடிக்கடி உண்ணலாம். காலை உணவை கண்டிப்பாக உண்ணவும்.

   
அதேபோல், இரவு உணவை முடிந்தவரை சீக்கிரம் சாப்பிட வேண்டும். வறுக்கப்பட்ட உணவை விட கொதிக்க வைத்த ஆவியில் வேகவைக்கப்ப்ட்ட உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிட வேண்டும் .

குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து ஒரு வேளையாவது உண்ணுதல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். 

 

1 comments:

அன்பின் சாகம்பரி - முதியோர் நலம் பேணுதல் நல்ல செயல் - நல்லதொரு கட்டுரை. இறுதி வரிகள் - குடும்ப உறுப்பினர்களூடன் அமர்ந்து ஒரு வேளையாவது உண்ணுதல் அனைவரின் ஆரோக்கியத்தையும் வளர்க்கும். முத்தான வரிகள். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா