மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 
சற்றே காத்திருக்க மாட்டாயா....
     இறுதி உரையெழுத
அப்படியென்ன அவசரம்......

சில காலம் காத்திரு.......
- கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாகும்
மனிதர்களின் மாற்றம் தெரியும்


சில நாள் காத்திரு ......
- மொட்டு அழகிய பூவாக மாறும்
காரியம் கை கூடும்.

சில மணி நேரம் காத்திரு
- இருளின் கறுப்பு விடியலின் வெள்ளியாகும்
வெளிச்சத்தில் வழி கிட்டும்.

சில நிமிடம் காத்திரு
- இறுகிய பனி உருகி நீராகும்
உனக்கான சந்தர்ப்பம் வரும்


சில நொடி காத்திரு
- காற்றுக்கும் மூச்சுக்கும் வேறுபாடு தெரியும்
வாழ்வின் அர்த்தம் புரியும்
முடிவை நீயே மாற்றி எழுதுவாய்.


6 comments:

அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

கருத்துரையிட்டதற்கு நன்றி திரு. VELU

காத்திருந்தால் முடிவு மாறும்.உண்மை.

வாழ்க்கையில் பொறுமை அவசியம்

இப்போதெல்லாம் " நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்" எதிர்பார்ப்புகள்தான். நன்றி திரு. சண்முகவேல்.

ஆமாம்.காத்திருக்கவோ கலந்தாலோசிக்கவோ பொறுமை இல்லை இப்போதைய தலைமுறையிடம். நன்றி திரு. எல்.கே