மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

கிராமத்துக் கோயிலும்
அய்யனார் சாமியும்
தரிசனம் தருவது
வருசம் முழுக்க

திருவிழாவில் மட்டும்
சாமிக்கு கவனிப்பு
மற்ற நாட்களில்
சூட தீபாராதனைதான்
சாமியும் இருக்கும்
சாமானியனின் தனிமையில்

 தேர்தல் முடிந்தவுடன்
நம்மை மறந்துவிடுவார்கள்
திருவிழா முடிந்தவுடன்
நாம் மறந்துவிடுவோம்
நமக்குத்தான் என்னவொரு
நியாய புத்தி ......?


 

3 comments:

மறதி இந்தியனின் பரம்பரை வியாதி..

கவிதை அருமை தொடருங்கள்..

வணக்கம் திரு.கவிதை வீதி சௌந்தர். கருத்துரையிட்டதற்கு நன்றி