மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

" சாப்பிட்டு விட்டீர்களா? "  
  கையில் மருந்துடன் வெள்ளுடையின் கேள்வி 
            சாதாரண கேட்டலில் கண்ணில் நீர் .
 ஆம்...   இந்தமுறை வேதாவின் சரிதைதான்..
           காவேரி     ஆற்றங்கரையில் 
  கடவுளுக்கு வாழ்க்கைபட்ட பூமியில் 
          அவளுக்கு மட்டுமான வீடு 
சொல்லப்போனால் ,
         குறை ஒன்றுமில்லை அவளுக்கு 
வளத்திலும் நலத்திலும்  
         வேண்டாதது தவிர்த்து 
வேண்டிய அத்தனையும் உண்டு 
        வெளிநாட்டு வேலையில்
வேதாவின் மகன் அருளியது.
        அருளுவதுகூட கடமைதான் 
பின் ஏன் கண்ணீராம் .....?
           மகன்  கேட்க வேண்டிய கேள்வி  
 என்னவோ தெரியவில்லை 
         அதை மட்டும் கேட்பதில்லை 
வழமையான விசாரிப்பு இல்லாமல் 
        என்ன பேச்சு அது ....!
நேற்றுகூட  அவன் பேசினான் 
      பேசியதை பெட்டி செய்தியில் காண்க 
மற்றபடி வேதாவின் விருப்பம்  
      அன்றும் நிரலில் இல்லை 
தொலை பேசியின் குரல் 
       நேயர் விருப்பம் இல்லாத 
வானொலி நிகழ்ச்சி போலானது ..
      அப்புறம் என்னவாயிற்று  ?

ஒருநாள் குட்டி பேரன்  கேட்டான்
       ' பாத்தி மம்மம் சாப்ட்டியா?'
 தொலைபேசி புண்ணியம்தான்
       வேதா அதன் பிறகு பேசவேயில்லை!

பதிமூனாம் நாள் முடித்தபின் 
      கவலையாய் மகன் கேட்டான் 
' அங்கெல்லாம் காக்கா  இல்லை 
      அம்மா எப்படி சாப்பிடுவாங்க ?'

           சில சமயம் நாம் சாதாரணமாக நினைப்பதுகூட அசாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது . சொல்லியது மட்டுமல்ல  சொல்லப்படாத வார்த்தைகள் கூட மதிப்பானவையாவது  காதலில் மட்டுமல்ல கடைசி காலத்திலும்தான்.

10 comments:

வெளிநாட்டு வாழ் மக்களின் வலி உங்கள் கவிதையில் தெரிகிறது... எளிமையான வார்த்தைக்ள்... தெளிவான கருத்துகளுட் கவிதை அருமை.....
தொடர்ந்து சந்திப்பொம்...

வெளிநாட்டு வாழ் மக்களின் வலி உங்கள் கவிதையில் தெரிகிறது... எளிமையான வார்த்தைக்ள்... தெளிவான கருத்துகளுடன் கவிதை அருமை.....
தொடர்ந்து சந்திப்பொம்...
வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி..

இது தமிழ் மணத்தில் இணைவதற்கு முன் பதிவு செய்யப்பட்டது. அதனால்தான் மீள் பதிவு. கருத்துரைக்கு நன்றி. திரு. சௌந்தர்.

உண்மையில் வருத்ததுடன் எழுதிய கவிதை. கருத்துரைக்கு நன்றி திரு.கருன்

மகனும் மகளும் வெளி நாட்டில் இருக்க தனித்திருக்கும் பெற்றோரின் உணர்வுகள். பாசதிற்காய் எங்கும் நெஞ்சங்கள். நல்ல பகிர்வு சாகம்பரி

நல்ல பகிர்வு சாகம்பரி.
சில சமயம் நாம் சாதாரணமாக நினைப்பதுகூட அசாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது

இராமாநுசம் said...

உள்ளம் தொட்ட கவிதை-என்
உள்மனதில் போட்ட விதை
வெள்ளம் போன்ற வேகம்-என்று
வடியும இந்த சோகம்

புலவர் சா இரமாநுசம்
சென்னை 24

கருத்துரைக்கு நன்றி திரு.எல்.கே.

கருத்துரைக்கு மிக்க நன்றி ராஜேஸ்வரி

மற்றவர்களுக்காக யோசிக்கும்போது அவர்களுக்கான பார்வையும் நம்மிடம் இருந்தால் இதெல்லாம் தவிர்க்கப்படும். கவிதைக்கு நன்றி புலவர் அவர்களே