மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


     ஒரே விசயம் மூளைக்குள் உட்கார்ந்து கொண்டு ஆட்டி வைக்கிறது. அந்த சமயத்தில் வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியாது. வெறுமையின் உச்சியில் நிற்போம். எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாடு இருக்காது. எதையாவது செய்து மனதிலிருந்து அந்த நினைவை வெளியேற்ற நினைப்போம். சந்தோசம், துக்கம், கோபம் போன்றவை கண்ணீர் விடுதலின் மூலமும், மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதலிலும் குறைந்துவிடும். நான் சொல்வது வேறுவகை உணர்வுகள். இவற்றை பகிர்ந்து கொண்டாலும் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று ஒரு பார்வைதான் கிட்டும். உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு இருப்பது ஒரு வடிகாலாக இருக்கும் - (ஒரு வேளை இது பெண்மை உணர்வாகக்கூட இருக்கலாம்). . நம்மேல் நமக்கு நம்பிக்கை குறையும் நிலை இது.

      உதாரணமாக, யாருக்காவது நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு மொக்கையாகி நிற்பது, சில செயல்களை செய்துவிட்டு embarrassing ஆக உணர்வது, அசடு வழிவது, எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். குறுகிய நாட்களில் மறைந்துவிடும். அதற்குள், நம்மை மேற்சொன்ன விதத்தில் ஆட்டி வைக்கும். ஆரம்பத்தில் அடிக்கடி மனம் பேசினாலும், நாளைடைவில் பழகிபோய் ஊமையாகிவிடும். அது மிக ஆபத்தானது. ஏனெனில் ஆழ்மனதில் படிந்துவிடும். சமயம் பார்த்து நம்மை ஆட்டி வைகும்.

     மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. நான் சொன்ன உணர்வுகள் இப்படித்தான், சட்டென அதிகபட்ச அதிர்வுகளை உண்டாக்கும்.

     ஆழ்கடலில் மிதக்கும் பனிப்பாறைகள் வெளியே சிறிய ஐஸ்கட்டிகளாகத் தெரியும். ஆனால் ஒரு கப்பலையே உடைக்கும் பலம் கொண்டதாக இருக்கும். இந்த உணர்வுகளும் அப்படித்தான், நிறைய சமயத்தில் பழைய நினைவுகளை நினைவூட்டி தயங்க வைக்கும். அந்த தயக்கம் தோல்விக்கு வழி வகுக்கும். இதை எப்படி கடப்பது?                                                                                                      -இன்னும் தெளிவாக நாளை
மலரினும் மெல்லிய மனம் -2

9 comments:

நாளைக்கும் சேர்த்து இன்னைக்கே துண்டு போட்டு வச்சிட்டேன்.....நல்ல அலசல்....

ஒரு விஷயத்தை அதன் ஆழம் வரை சென்று
அலசிப் பார்ப்பது எல்லாராலும் முடியாது சாகம்பரி.ஆனால் அந்த கலை
உங்களுக்கு அனாயாசமா வருது.

உங்க எழுத்துக்களைப் படிக்கும் பொழுது எனக்கு சில சமயங்கள்ல 'ஜேகே' வை
படிக்கற ஃபீலிங் வருது

முன் பதிவு செய்து கொண்டதற்கு நன்றி. திரு.மனோ

ரொம்ப பயமுறுத்தாதீங்க ராஜி. ஜே.கேவை கையில் வைத்துக் கொண்டு நாலைந்து தடவை வாசித்து , நான் புரிந்து கொண்டது சரிதானா என்று discuss செய்யக்கூட ஆளில்லாமல் தவித்திருக்கிறேன், வாசிப்பாளர்கள் குறைவு என்பதால். மற்றபடி என் அனுபவங்களைத்தான் நான் எழுதுகிறேன். தோல்வியிலிருந்து மீண்ட முறையை பதிவு செய்ய விரும்புகிறேன். நன்றி ராஜி.

ஒரு சில சமயங்களில் அந்த உணர்வு ல்லோருக்கும் வந்து போய் இருக்கும். ஆனால் அதை உணர்பவர்கள் எத்தனை பேர் ? எதனால் இப்படி என்று ஆராய்பவர்கள் எத்தனை பேர் ? எதாவது செய்து அதிலிருந்து வெளியில் வர பார்பவர்கள் அதிகம் . ஆனால் அத்தகைய நிலைக்கு என்ன மூலக் காரணம் என்று ஆராய்பவர்கள் எத்தனை பேர் ?

உங்கள் பதிவுகள் எல்லாமே சிந்தனையை தூண்டுபவையாக உள்ளன . தொடருங்கள். கமெண்ட்ஸ் கம்மியாக வருகிறது என்று என்ன வேண்டாம். கமென்ட் போடாமல் படித்துக் கொண்டிருப்பவர்கள் நெறைய பேர்

நான் கமெண்ட்ஸ் எண்ணிக்கை பற்றி கவலைப்படுவதில்லை. இந்த ஊடகம் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். ஒருவர் படித்தாலும் என்னுடைய கருத்துக்கள் சரியானபடி சேர வேண்டும்தான் என்று விரும்புகிறேன். என்னை ஊக்குவிக்கும் கருத்துரைகள் இன்னும் கவனத்தை தருகிறது. உங்கள் கருத்துரைகள் உரைகல் எனக் கொள்கிறேன். நன்றி.திரு.எல்.கே

/
நான் புரிந்து கொண்டது சரிதானா என்று discuss செய்யக்கூட ஆளில்லாமல் தவித்திருக்கிறேன், வாசிப்பாளர்கள் குறைவு என்பதால். //

ithanaalthan appadi comment potten

புரிந்து கொண்டேன். நன்றி. திரு.எல்.கே.

நாளைக்கும் சேர்த்து இன்னைக்கே துண்டு போட்டு வச்சிட்டேன்.....நல்ல அலசல்....
..nanum nanum..