மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 மலரினும் மெல்லிய மனம் -1

     எதனால் இது போன்ற சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறோம்? இது போன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்ததாக உணர்ந்தால், நீங்கள் உதவும் குணமும், தலைமைப்பண்புகளும் உடைய நல்ல மனிதர். அனைவரையும் நம்மைப்போலவே நினைத்து விடுவோம். முன்பின் தெரியாதவருக்குக்கூட வெகு இயல்பாக உதவி செய்ய முற்படுவோம். அப்படி எல்லோரிடமும் நட்புணர்வுடன் பழகும் சூழலில் , ஒன்றிரண்டு பேர், நம்மை புரிந்து கொள்ளாமல் பேசுவது, நடந்து கொள்வது அந்த இடத்தில் நம்மை அன்னியப்படுத்திவிடும். அதுதான் கூசவும் வைக்கும். தெரிந்தவர்கள் முகத்தை பார்க்கக்கூட தடுத்துவிடும். ஒரு வேகமான இரத்த ஓட்டம் காலிலிருந்து தலை வரை பாயும்.

     அது போன்ற ஒரு தருணத்தில் சிவந்து போன முகத்துடன், உணர்ச்சியை துடைத்த பார்வை பார்த்த என் சக ஆசிரியையை நான் பார்த்ததுண்டு. யாருக்கும் தெரியாமல் , சிறிதாக புன்னகைத்து தோளில் நான் கை வைத்தபோது அவர் கொஞ்சம் சரியாகிவிட்டதாக உணர்ந்தாராம். அதை என்னால் எப்படி சரிவர செய்ய முடிந்தது என்று பிறகு யோசித்தேன். அது போன்ற சூழ்நிலையில் நான் சிக்கியிருந்த போது என் உள் மனது ஆறுதல் தேடியிருக்கிறது என்று புரிந்து போனது. இதுதான் நான் சொல்ல வந்தது , இது போன்ற சம்பவங்களில் பார்வையாளரான நம் பங்கும் மிக முக்கியம். ஒரே ஒருவரின் ஆறுதலான , அந்த நிமிடத்து செய்கைகூட நிலைமையை சீர் செய்யும்.

     அவ்வாறு இல்லாமல் போனால், இரவு உறக்கத்தை அபகரித்துவிடும். தனியாக இருப்பதை தவிர்த்து, அம்மா/அப்பாவின் மடியில் தலைவைத்துப் படுத்து ஆறுதல் தேடலாம். இல்லையெனில் துணைவர்/ துணைவியிடம் கையை பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிடலாம். விசயம் என்னவென்றால் நம்மை நன்றாக புரிந்து கொண்டவர்கள், அந்த நேரத்தில் கேள்வி கேட்காமல் நம்முடைய தனிமையை அனுமதிப்பார்கள். அது எப்படி தனிமையென்று சொல்லமுடியும் என்று கேட்பீர்கள், நான்தான் சொன்னேனே வெறுமையின் உச்சி என்று, உடலிற்கும் மனதிற்கும் சம்பந்தமில்லாத நிலை, மனம் தனித்துதான் இருக்கும். எதுவுமே இல்லையெனில் மொட்டை மாடியில் நின்று கொண்டு குளிர்ந்த காற்றை நன்றாக உள்ளிழுத்து மன அழுத்ததை வெளியேற்றலாம். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை தேடலாம். தொடு வானத்தின் பால் வீதியை ரசிக்கலாம். உலகத்தின் சற்று உயரத்திலிருக்கும் சௌகாரியமான கற்பனை நம் இறுக்கத்தை குறைத்துவிடும்.  

                                                                                                            - மற்ற விசயங்கள் நாளை

மலரினும் மெல்லிய மனம் -3 

9 comments:

நல்லதொரு கட்டுரை. மன அழுத்தத்திலிருந்து விடுபட இதுபோன்ற யுக்திகள் நிச்சயம் உதவும்.

நல்ல வழிமுறை

//உலகத்தின் சற்று உயரத்திலிருக்கும் சௌகரியமான கற்பனை நம் இறுக்கத்தை குறைத்துவிடும்//

fantatistic.

sorry for the spell mistake in fantastic while typing

நல்ல ஆலோசனை....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா. உங்கள் பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி திரு. எல்.கே

ராஜி. நான் புரிந்து கொண்டேன். பாராட்டிற்கு நன்றி

வணக்கம். நன்றி திரு.மனோ