மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

     
     மலரினும் மெல்லிய மனம் -2 

    இனி அடுத்த விசயங்களை பார்க்கலாம். எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை, நமக்குள் இருக்கும் தலைமைப் பண்பின் தூண்டுதல். ஏதேதோ காரணத்திற்காக நம்முடைய நியாயங்கள் அடிமையாக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று உள் மனது உறுத்தும். அந்த சூழ்நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாது போகும். இந்த குற்ற உணர்வுகளை நாம் ஜெயித்தாக வேண்டும். உண்மையை சொல்லவேண்டுமெனில்  ,  ஆரம்பத்தில்   நம்முடைய   நிலைமையே 
உறுதியற்றதாக இருக்கும். அந்த நிலையில் போராடினால் நம் மேல் உள்ள நம்பிக்கையையும் சேர்த்து பலி கொடுப்பது போலாகிவிடும். நாம் அப்படியே இருந்தால் இது போன்ற நிகழ்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் காண வேண்டியிருக்கும். எனவே, வேறு வழியில் இதனை ஈடு செய்ய முயற்சியுங்கள். ஏதாவது ஒரு வழியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். ஒரேயடியாக போராடக்கூடாது. நீங்கள் நல்லது செய்ய நினைப்பதுகூட சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பாகிவிடும். இந்த விசயத்தை பொறுத்தவரை குற்ற உணர்விலிருந்து வெளி வருவது மட்டுமே முக்கியம். கூடிய விரைவிலேயே உங்கள் மனம் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு, இது போன்ற சிக்கல்களை சரியாக கையாளும். கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் பொறுமை வேண்டும்.


அடுத்தது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குற்ற உணர்விலிருந்து எப்படி வெளி வருவது. இது போன்ற சூழ்நிலையில் இரண்டுவித மனநிலைக்கு ஆட்பட்டிருப்போம். ஒன்று நாம் உணர்ந்து கொண்ட உண்மையின் உணர்ச்சிபூர்வ பாதிப்பு, மற்றொன்று இதுவரை நாம் நமக்கு பழக்கி வைத்திருக்கும் தர்ம நெறிகளின் ஆளுமை. முன்னதை விடுப்பதுதான் நியாயம். தவறை உணர்ந்து உடனேயே நம் மனதின் ஓட்டத்தை மாற்றியிருப்போம். ஒரு உதாரணம் பார்க்கலாம். ஒரு வேளை இதுமட்டும்தான் வெளிப்படையாக உரையாடக்கூடியது என்பதால், இதனை உதாரணமாக கொள்கிறேன். ஒருவருக்கு தீங்கிழைக்கப்பட்ட கடும்கோபத்தில், " இவர்களெல்லாம் உயிருடன் இருந்து என்ன செய்யப்போகிறார்களாம்?" என்று தோன்றியிருக்கும். ஒருவருடைய மரணத்தில் நமக்கு  
மகிழ்ச்சி என்று   எண்ணும்போது    மனித்தத்துவத்தை     இழந்து  விடுகிறோம் அல்லவா? நம்முடைய தரம் தாழ்ந்து போனதைப்போல உணர்வோம்.


இதைவிட மோசமானவைகூட இருக்கலாம். நம்மை அறிந்து கொண்ட குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்லாம். இரண்டுவித மன நிலையிலிருந்து நம்மை பிரிக்க வேண்டும். குற்றம் செய்தவர், நீதிபதி என பிரிய வேண்டும். எப்படி? தனிமையில் ஒரு வெள்ளத்தாளில், உங்களுடைய பெயருக்கு நீங்களே ஒரு கடிதம் எழுத வேண்டும். இது பழைய முறை. இதற்கு பதிலாக ஒரு ஈ-மெயில் தயாரித்து உங்களுடைய மெயில் ஐடிக்கு அதனை அனுப்பிவிடுங்கள். உங்களுடைய தரப்பு நியாயம் அத்தனையும் அதில் இருக்கட்டும். உடனேயே மெயிலை திறந்து பார்க்க வேண்டாம். இந்த வேலையை செய்தபின் உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். மறு நாள் மெயில் பார்க்கவும். புதிதாக ஒரு விசயத்தை வாசிப்பதுபோல உணர்வீர்கள். ஆனால், வாசிப்பது நம்முடைய ஆழ்மனம் . இங்குதான் பழைய நினைவுகள் பதுக்கிவைக்கப்பட்டு, அரக்ககுணத்துடன் காத்திருக்கும். பெரிய மீசைமேல் ஏதோ ஒரு பழைய வெறுப்பு நிற்க மீசை வைதிருந்தவரை திருடன் என்று திட்டியவரை கண்டிருக்கிறேன். நன்றாக உடையணியும் பெண்களின் மேல் தவறான எண்ண வீச்சல்கள்.... இதெல்லாம் பெரிய குற்றமில்லை மனதளவில் நினைப்பதுதான். அதை திருத்த வேண்டும்.நாம் மெயிலை படிக்கும்போது நம்முடைய மனதிற்கு தெரிந்துவிடும், இது தவறான செயல் என்று. இரண்டு மூன்று முறை வாசித்தபின் அதனை அழித்து விடுங்கள். தவறான எண்ணங்களும் அழிந்து விடும். இணைய வசதியில்லையெனில் கடிதம் எழுதி கவரில் போட்டு மூடிவிடுங்கள். யார் கையிலும் கிட்டக்கூடாது. படித்தவுடன் எரித்து விடவேண்டும். இந்த செயல்கள் முழுக்க தனிமையில் நடக்க வேண்டும்.

குற்ற உணர்விற்கு மட்டுமல்ல, மனதை அரித்துக் கொண்டிருக்கும் எந்த விசயத்தையும் இவ்வாறு செய்து மாற்றமுடியும். எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நம்முடைய மனதின் மென்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான், மனித்தத்துவத்தை மகத்தானதாக்கும்.

18 comments:

வடை எனக்கே...

உளவியல் சம்பந்தமா சூப்பரா எழுதுறீங்க உபயோகமா இருக்கு...

இரண்டு நாள் மிஸ் பண்ணீட்டிங்க இன்னைக்கு வாங்கிட்டீங்க . பதின் வயதில் இருக்கும் என்னுடைய மாணவர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதற்காக இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நன்றி திரு.மனோ.

அலுவலங்களில் இடைநிலையில்(middle level managers) இருப்பவர்களுக்கு உபயோகம் ஆகும் கண்டிப்பா .

சரிதான். நான் இதனை வேறுவிதமாக பயன்படுத்தினேன். இன்று புதிதாய் பிற்ந்தோம் என்று திருந்தி வாழும் மன நிலையை, பாதை தவறிய இளையவர்களிடம் உருவாக்க இது பயன்பட்டது. நன்றி. திரு.எல்கே.

நான் 2,3 பத்தியை சொல்கிறேன். சரிதானே.

கலக்கல் பதிவு....

சில விஷயங்களை எடுத்துக்காட்டுகளோடு கூறீனீர்களானால் உங்கள் கருத்துக்கள் இன்னும் பலரை
சென்றடையும் எனபது என் கருத்து சாகம்பரி

உங்கள் எழுத்து மிகுந்த வலிமையுடன் கூடியதாக உள்ளது.நெகிழ வேண்டிய நேரத்தில் நெகிழ்கிறது.
குழைய வேண்டிய சமயத்தில் குழைகிறது.சில நேரத்தில் போர் முனை கருவி போல் வீரம் பாய்ந்ததாக இருக்கிறது.
amazing.

படிக்க நேரமில்லா சமயங்களிலும் இரவு படுக்கும் முன்பாவது படித்து விட தோன்றுகிறது.

எனக்கு தங்களிடம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உளளது சாகம்பரி.
"அன்னை பூமி" என்ற தலைப்பில் நீங்கள் பின்பற்றும் அந்த வலைப்பதிவிற்கு யார் உரிமையாளர்?
அதில் சாகம்பரி,அரியாசனம் மற்றும் அனபைத்தேடி என்று மூன்று ப்ளாக்ரோல்கள் உள்ளன.
நீங்கள் அதில் கவிதைகள் எழுதி உள்ளீர்கள் என்று அறிந்தேன்.ஆனால் ஏன் யாரையும் சென்றடையவில்லை.
இதற்கு தாங்கள் அளிக்கும் பதிலை என்னால் இனி செவ்வாய்க்கிழமை அன்றுதான் படிக்க இயலும்.மேற்கொண்டு தாங்கள் எழுதுபவற்றையும் அன்றே படிக்க இயலும்.till then bye

முடிந்து வரை எடுத்துக்காட்டு தர முயற்சிக்கிறேன். எடுத்துக்காட்டுடன் நின்றுவிடக் கூடும் என்று நினைத்து தருவதில்லை. நன்றி ராஜி.

//கலக்கல் பதிவ// நன்றி கருன்

அன்னை பூமி'எனனுடைய மகன் ராகவ் மற்றும் நண்பர்களுடையது. அனைவரும் Bio-tech ஆராய்ச்சி மாணவர்கள். என் ப்ளாகிற்கு புகைப்பட உதவி அங்கிருந்து வாங்கினால், பதிலுக்கு ஒரு கவிதை தந்துவிடுவேன். வித்தியாசமான கண்ணோட்டத்தில் புகைப்படம் எடுப்பது என் மகனின் சிறப்பு. மேலும் ஆரய்ச்சி விசயமாக அவர்கள் வெளியூர் சென்று விட்டால் நான்தான் பார்த்துக் கொள்வேன். அரியாசனம் இன்னும் கருவிலிருக்கும் குழந்தைதான். என் கணவர் என்னுடைய விசிறி (வேறு வழியில்லை), என் இரண்டாவது மகன் அண்ணனை தொடர்கிறான்.

மன்னிக்க வேண்டுகிறேன்.தங்களின் வயது தெரியாத
காரணத்தால் இத்தனை நாள் பெயர் சொல்லி அழைத்து பெருந்தவறு
செய்து விட்டேன்.இனி தங்களை மேடம் என்று அழைக்க விரும்புகிறேன்.
அனுமதி உண்டா?ஏனோ வயதில் பெரியவராக இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு
உதிக்கவே இல்லை.மன்னித்து விடுங்கள்

நான் தவறாக நினைக்க மாட்டேன். ஜே.கேவை படித்த யாரும் குறைவானவர்கள் இல்லை. எது வேண்டுமானாலும் கேட்கலாம். எனக்கு வயது 45. மூத்த மருமகள், பெரிய அண்ணி, பிரியமான அத்தை, சித்தி, எல்லாவிதத்திலும் என்னை சுற்றி மையம் கொண்டுள்ள இனிய உறவுகளினால் ,எழுத்துக்களில் இளமை இருக்கலாம். என்னுடைய எழுத்துக்களையும் , கருத்துக்களையும் பதிவு செய்ய என் மகன் விரும்பியதால், இந்த ப்ளாக். அவனை மட்டுமே ஃப்லோ செய்ய வேண்டும் என்ற சிறு பிள்ளை வேண்டுதலினால் ' அன்னை பூமி' மட்டும் ப்ளாக் ரோலில் நிற்கிறது.

thank u madam.ll c u on tuesday.bye

. அவனை மட்டுமே ஃப்லோ செய்ய வேண்டும் என்ற சிறு பிள்ளை வேண்டுதலினால் '//

possessiveness :))

கலக்கல் பதிவு

நன்றி ராஜி. செவ்வாய் அன்று பார்க்கலாம்.

may be. but they are lovable kids. Thank you L.K