மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்பு மகளுக்கு
        அம்மாவின் ஆசை முத்தங்களுடன் கடிதம். நலமாக இருக்கிறாயா? இங்கு அனைவரும் நலம். ஊரில் மற்றவர்கள் அனைவரும் நலமா? அங்கு உனக்கு எப்படி உள்ளது?. உனக்கு என் மேல் கோபம் என்று நினைக்கிறேன். அழுத விழிகளுடன் நீ சென்றது எனக்கு இன்றைக்கும் விழித்திரையில் காட்சியாக படிந்துள்ளது. கண்ணை மூடினால் என் கண்மணி என்ன செய்கிறாளோ என்று கலங்குகிறேன். எதற்கும் கெடுபிடி செய்யும், அப்பாவின் சலுகைகளை தடை செய்யும், விருப்பமானதை வாங்கித்தர கணக்கு பார்க்கும் அம்மாவா இப்படி பேசுவது என்று நினைக்கிறாயா? ஆம், உன் அம்மாதான். நித்தம் உன்னுடன் சண்டை பிடித்து, உன் அண்ணன் போல் , உன்னை இயல்பாக இருக்கவிடாதவள்தான். வீட்டு வேலைகளை பார்க்க வேலையாட்கள் இருந்தாலும் உனக்கென்று சில வேலைகளை ஒதுக்கியதன் காரணம் புரியாது. உனக்கு உன் நிறுவனத்தில் தரப்பட்ட பயிற்சி உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அது போல ஒரு வீட்டின் மகாராணியாய் நீ வாழ உனக்கு சில புரிந்து கொள்ளல்கள் வேண்டும்.

நாம் ஒருவரை புரிந்து கொள்ள முகம் பார்க்க வேண்டியதில்லை. செயல்களை வைத்து எடை போட வேண்டாம். நம்மை அவர்கள் ஒரு திசைக்கு திருப்ப முயற்சிப்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் நல்லவரா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
முகம் மறைக்கும் உணர்வுகள், செயல்கள் தாண்டிய எண்ணங்கள் இவற்றை நாம் புரிந்து கொண்டால், அடுத்தவரை எடை போட முடியும். அப்படி பார்க்கும்போது கெட்டவர்கள் நல்லது செய்வதும், நல்லவர்கள் கெட்டது செய்திருப்பதும் புரியும். அந்த ஏழாம் அறிவுதான் பெண்ணிற்கு தேவை.

      நீ அருமையாக சமைப்பதாக சொன்னார்கள். அத்தனையும் புது வகைகளாமே. நீ கற்றுத்தந்ததை செய்யவில்லை என்கிறாயா. அடுப்பு பற்ற வைக்க நான்தானே உந்தித்தள்ளினேன். ஒரு தெரிந்த விசயத்தை கொண்டு புதிதாக ஒன்றை உருவாக்கும் நுட்பமான திறமை பெண்ணுக்கு உண்டு. இந்த திறமை அதீத கற்பனைகளுக்கும் வழி வகுக்கும். அவற்றின் பிடியிலிருந்து வெளிவர உனக்குத் தெரியும். ஏனெனில், கனவுலக தேவதையாக நித்தம் வானத்தில் சஞ்சரிக்க நான் விட்டதில்லை.
யதார்த்தம்தான் சிறகுகளை மறைத்து பாதங்களை பதிய வைக்கும். உன் வாழ்க்கையிலும் ஊன்றி நிற்பாய்.
    புதிய இடத்திற்கு செல்லும் போது வழிகாட்டிப்பலகைகள் உதவுவதுபோல், வாழ்க்கையிலும் சில அடையாளங்கள் கிட்டும். அவற்றின் விளக்கம் அகராதியில் இல்லை. குறித்து வைத்துக்கொள். தனிமையில் அவற்றை பாடமாக்கிப்பார். புதிய உறவினர்களின் பார்வைகளை புரிந்து கொள். வார்த்தைகளை அளந்து சொல். சில சமயம் உனக்கு விருப்பமில்லாதவை நடக்கலாம். உன்னுடைய வெளிப்பாடு, பின்னர் யோசிக்கும் போது உனக்கே பிடிக்காததாக இருக்கக்கூடாது. தப்பும் தவறுமாக செய்துவிட்டு , என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று உளறுவது தன்னை வெற்றி கொள்ள முடியாத கோழைத்தனம். அது குழந்தை மனம். அதிலிருந்து உன்னை வெளிக்கொணரவே இத்தனை செய்தேன். வேண்டியது கிடைக்கும்போது நிதானம் ஏற்படும், கிடைக்காதபோது புறந்தள்ளிவிட சொல்லும், இதுதான் மங்கையின் மனது.

     எதற்காக இத்தனை முன் ஏற்பாடுகள் என்கிறாயா?. இது வாழ்க்கைப்பாடம் மகளே.
தண்ணீரில் விழுமுன் நீச்சல் தெரிய வேண்டும் அல்லது விழுந்தால் காப்பாற்றக்கூடியவர்களை சூழ வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது நம்பிக்கையானது. மனிதர் மனதை படித்தால் கிட்டும். உன்னை நெருப்பில் நடக்க விட்டேன், நெருப்பை என் நெஞ்சிற்குள் புதைத்துக் கொண்டேன். இனி முழு நிலவில் உன் முகம் தெரியும். அது புன்னகை தவழும் முகமாக இருக்கும்.

மீண்டும் அடுத்த கடிதத்தில்
ஒரு மகளின் மகளான அன்னை.


ஒரு மகளின் மகளான அன்னை.-2 

18 comments:

//இது வாழ்க்கைப்பாடம் மகளே. தண்ணீரில் விழுமுன் நீச்சல் தெரிய வேண்டும் அல்லது விழுந்தால் காப்பாற்றக்கூடியவர்களை சூழ வைத்துக்கொள்ள வேண்டும்.///

மிகவும் சத்தியமான வார்த்தைங்க....

சரியாக புரிந்து கொண்டீர்கள் திரு.மனோ. இது தெரியாமல்தான் வாழ்க்கை தடுமாறுகிறது. முதல் வருகைக்கு நன்றி.

மிக மிக அருமை
படித்து முடித்தவுடன் என் பெண்ணுக்கு
இந்தப் பதிவைப் படிக்குமாறு ஒரு
குறுஞ்செய்தி அனுப்பினேன்
அடுத்த கடிதத்தை ஆவலுடன்
எதிர்பார்த்து உள்ளேன்
வேறு ஏதேனும் பாராட்டிச் சொன்னால்
அது சம்பிரதாயம் போலாகிவிடுமோ என
அச்சமாக உள்ளதால் பாராட்டாது முடிக்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

இது போன்ற பதிவுகள் வாசிக்கப்படுவதே என்னை மகிழ்விக்கிறது. நன்றி ரமணி சார்.

//நம்மை அவர்கள் ஒரு திசைக்கு திருப்ப முயற்சிப்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் நல்லவரா என்று புரிந்து கொள்ள வேண்டும். முகம் மறைக்கும் உணர்வுகள், செயல்கள் தாண்டிய எண்ணங்கள் இவற்றை நாம் புரிந்து கொண்டால், அடுத்தவரை எடை போட முடியும்.//

//அந்த ஏழாம் அறிவுதான் பெண்ணிற்கு தேவை. //

நல்ல ஒரு தாயின் அருமையான அறிவுரைகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

//வை.கோபாலகிருஷ்ணன் said...
நல்ல ஒரு தாயின் அருமையான அறிவுரைகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//
பாராட்டிற்கு நன்றி ஐயா.

ஏழாம் அறிவுதான் பெண்ணிற்கு தேவை. //
தாயின் அருமையான அறிவுரைகள்.
பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்

பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்
//பாராட்டிற்கு நன்றி ராஜேஸ்வரி.

தொடருங்கள்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

நண்பரே,,,மிக மிக அருமையான பதிவு

நன்றி திரு.சண்முகவேல்.

நன்றி திரு.பிரகாஷ்

கடிதம் மிக அருமை.அதில்லுள்ள கருத்துக்கள் மிக மிக அருமை.. வாழ்த்துக்கள் தொடரட்டும். கடித்ததின் தொடர்ச்சி..

வணக்கம் வருகைக்கும் பாரட்டிற்கும் நன்றி மலிக்கா.

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.பதிவை படித்தவுடன் ஒரு மன திருப்தி கிடைத்தது. இன்று முதல் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்க போகிறேன். வாழ்க வளமுடன்

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தங்கள் என்னை ஊக்கப்படுத்துகிறது.

மிக அருமையான கடிதம். சத்தியமான இன்றைக்குத் தேவையான வார்த்தைகள்

வணக்கம் திரு.எல்.கே. கருத்துரைக்கு நன்றி