மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

            மகிழம்பூச்சரத்தில் 100வது பதிவு. பெருமைபட்டுக்கொள்ள இந்த பதிவு அல்ல. பதிவுலகத்திற்கு   நான்   வந்த  நோக்கம் , வழியெங்கும் நான் கண்ட உண்மைகள் கை குலுக்கிக் கொண்ட உன்னத நண்பர்கள் இவற்றை பற்றியெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன். 

         பொதுவாகவே நம் சமுதாயத்தில் குறைந்து வருகின்ற மனிதாபிமானத்தினால் பாதிக்கப்படுபவர்கள் முதியோரும், குழந்தைகளும்தான். அனாதரவான குழந்தைகள் மீது செலுத்தும் கனிவு பார்வைகள் முதியோரிடம் இல்லை என்ற கவலை எனக்குண்டு. எப்படி ஒரு உயிரை வரவேற்று வாழவைக்கிறோமோ அது போலவே ஒரு உயிரையும் கடைசி நாள் வரை காப்பாற்றி நல்லபடியாக அனுப்பி வைப்பது மனித சமுதாயத்தின் கடமை என்று நினைத்தேன். அப்படியில்லாத முதியோருடைய வாழ்வியல் சிக்கல்களிடம் சமுதாயத்தின் பார்வையை திருப்ப விரும்பினேன். சில சமயம் personality development வகுப்பில் என் மாணவர்களிடம் எடுத்து சொல்வேன். இன்னும் பரவலாக செய்ய வேண்டும் என்று விரும்பி ஆரம்பித்தது இந்த வலைப்பூ. இந்த ஆரம்பத்திற்காக என் மகன் அன்னை பூமி பதிவர் ராகவிற்கு நன்றி. என் எழுத்துக்களின் முதல் ரசிகர் என் கணவர், அழகிய தமிழ் சொற்களை தெரிந்து கொண்டதாக சொல்லும் என் இரண்டாவது மகன் சிவாவிற்கும் நன்றி. மற்ற அன்னை பூமி ப்ளாக்கர் ப்ரணவன் ஆச்சரியமான மகிழ்ச்சி கலந்த பார்வைகளுக்கு "எப்படிம்மா எழுதுறீங்க?" நன்றிகள்.

என்னுடைய முதல் கவிதைக்கு வெளி உலக ஆதரவாக முதல் பாராட்டு தந்த திரு.முல்லை அமுதன்.-  ஒரு வாழ்த்து இன்று நூற்றுக்கணக்கில் பெருகியிருக்கிறது. அப்போது சொல்லாத நன்றி இப்போது தெரிவிக்கிறேன். நன்றி சார்.

வலைப்பதிவர்களில் ஆரம்பத்தில் முதல் முறையாக வாழ்த்துக்கள் தெரிவித்த சென்னை பித்தன் , மதுரை சரவணன்  ஆகியோருக்கு என் நன்றிகள். தொடர் பதிவை வாழ்த்தி கட்டுரை எழுத ஊக்குவித்த பதிவர் ஆர்.கே. சதீஷ்குமார்.  அவர்களுக்கு நன்றி.

கவிதைகளுக்கு பாரட்டு தெரிவித்து ஊக்குவித்த கவிதை வீதி சௌந்தருக்கும், , பதிவர் வேடந்தாங்கல் கருனுக்கும  , பதிவர் நாஞ்சில் மனோ  அவர்களுக்கும்    நன்றிகள்.

என்னுடைய மதிப்பிற்குரிய சக பதிவர்  திரு.எல்.கே ,  இவரின் கவனமான கருத்துரைகள் உலகத்தின் பார்வையில் என்னுடைய கட்டுரைகளை படிக்கவைத்தன . நிறைய P.V வந்ததும் இதன பிறகே. நன்றி சார்.

ரொம்ப சென்சிடிவான கட்டுரைகள் எழுதி , என்னுடைய நோக்கத்தை -இனிய இல்லறம்- வேறு வகையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் (வயதில் சிறிய) சகோதரர் திரு. சண்முகவேல , அவர்களுக்கு நன்றிகள்

ஃபாலோவர் ஆன நாள் முதல் கிட்டதட்ட எல்லா பதிவுகளுக்கும் கருத்துரையிட்டு ஊக்குவித்துக்கொண்டிருக்கும் சக பெண் பதிவர். இராஜராஜேஸ்வரி, அவர்களுக்கும், நல்ல கருத்துரைகளை பதிவு செய்யும் கீத மஞ்சரி  கீதாவிற்கு ,  கீதா6 ,  திருமதி.ஸ்ரீதர் க்கும்     என் நன்றிகள்

தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் ஆர்வமாக சொல்லும் அருமை மகளாக நான் கருதும் ராஜிக்கு என் நன்றிகள்.

மிக ஆர்வமாக தங்களுடைய  பங்களிப்பினை செலுத்தி உற்சாகப்படுத்து சக மதுரை பதிவர்கள் தமிழ் வாசி பிரகாஷ் ,  ரமணி சார் அவர்களுக்கும்
 நன்றிகள். 

 கருத்துரைகள் மூலம் இந்த வலைப்பூவை மதிப்பு மிக்கதாக ஆக்கும் மதிப்பிற்குரிய ஐயா வை. கோபால கிருஷ்ணன், வலைச்சரம் ஆசிரியர் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள். 

தமிழ்தோட்ட நண்பர்கள் யூஜின், சிசு , அரசன், ரஜெப்டீன், அரொனி, ப்ரஷா, நிலாமதி, திரு.ராமனாதன், கவிக்காதலன், கவிதைகள் அனைவருக்கும் நன்றிகள். 

மேலும் பதிவர்கள் நா. மணிவண்ணன, VELU.G  ராஜராஜராஜன்,, ஆரூர்.மூணா. செந்திலு, நையாண்டி மேளம் , பாட்டு ரசிகன்  ,ஜீவன் சிவம்  , ரங்கன், உழவன் , ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி  , அவர்கள் உண்மைகள்   சக பெண்பதிவர்கள் முத்து லெட்சுமி ,  லட்சுமி மேடம் , மாலதி , விஜி மேடம்  அனைவருக்கும் நன்றிகள்.
 
மற்றும் மனசே மனசே, தனிக்காட்டு ராஜா, திரு.சங்கவி, திரு.பாரத் பாரதி, திரு.திகழ், திரு.விஷ்ணு, திரு.அல்ஃபோன்ஸ் செல்வராஜ், திரு.மனோ,திரு அசோக் ஆகியவர்களுக்கும் என் நன்றிகள்.

இன்றுடன் நூறு இனி எத்தனை என்று தெரியாது, ஆனால் அத்தனையிலும் மகிழம்பூச்சரத்தின் நோக்கம் மாறாது , இன்னும் தெளிவான கருத்துக்களுடன் உங்களுடன் பதிவுலகில் என் காலடித்தடங்களும் தொடரும். நன்றி.



22 comments:

"ஒரு மைல் கல் சிந்தனைகள்" பகுதியில், அடியேன் கடைசியாக வந்து தொத்திக்கொண்டுள்ள போதிலும், என்னையும், கெளரவித்து சுட்டிக்காட்டியுள்ள தங்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம். வாழ்க! வளர்க!!

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் பல நல்ல பதிவுகள் தாருங்கள். நாங்களும் தொடர்ந்து வருகிறோம். அன்புடன் vgk

நூறுக்கு வாழ்த்துக்கள். நான் படிக்கும் பதிவுகளில் உங்களுடைய வலைப்பூ சிறந்த வலைபூக்களில் ஒன்று என்றுக் கூறுவேன். மென்மேலும் பல நல்ல ஆக்கங்களை வழங்குங்கள்.

பல நூறு பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

எல்.கே அவர்கள் தங்களை அவர் பதிவில் அறிமுகப்படுத்திய பிறகுதான் முதன் முதலில் தங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.

படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் சென்றுவிடுவேன்.ஏனெனில் தங்களின் எழுத்து நடை,சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் கண்டு வியப்படைவேன்.பிறகு பின்னூட்டமிட தைரியம் வந்துவிட்டது.

தாங்களும் ஆசிரியரா?

நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்னையும் குறிப்பிட்டு மைல்கல்லில் குறித்த தங்களின் மணம் வீசும் மகிழம்பூ மனத்திற்கு நன்றி.

நூறு ஆயிரத்தைத்தொட மனமார்ந்த வாழ்த்துகள்.

மனமார்ந்த வாழ்த்துகள்!
என்னையும் குறிப்பிட்டு மைல்கல்லில் குறித்த தங்களின் மணம் வீசும் மகிழம்பூவிற்கு நன்றி.

டிசம்பரில் ஆரம்பித்து அதற்குள் நூறு பதிவுகள் எனில்
உண்மையில் இமாலய சாதனைதான்
அதற்கு உறுதுணையாக இருக்கும் தங்கள் கணவர்
மற்றும் தங்கள் அன்பு மகன் சிவா அவர்களுக்கும்
பதிவர்கள் சார்பாக நன்றி
தங்களின் உயரிய நோக்கமும் விரைவில் நிறைவேற
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்
ஐம்பது நூறாக ஆயிரமாக வளர வாழ்த்துக்கள்

உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் என்னுடைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலம் உங்கள் ப்ளாக்கின் அறிமுகம் கிடைத்தது.உங்களின் முதல் கடிதம் வாசிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அதில் முதலில் நீங்கள் எழுதிய வரிகள் என் அம்மா எழுதுவது போலிருந்தது. அம்மாவை பல வருடங்களுக்கு முன் இழந்த எனக்கு என் அம்மா மீண்டுவந்து கடிதம் எழுதிய போல ஒரு உணர்வு. அது எனக்கு மிகவும் ஆறுதல் தந்தது. நன்றி.அதுமட்டுமில்லாமல் நீங்கள் உங்கள் உள்ளத்தை வார்த்தைகளால் அந்த கடிதத்தில் கொட்டியிருந்தீர்கள் . படிக்கும் எவருக்கும் பிடிக்கும் உங்கள் எழுத்து.

வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன். உங்களுக்கு ஆதரவு தரும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

என்றும் உங்கள் வழிப்பாதையில்,
நான் பின் தொடர்ந்தாலும்
இன்றும் என்றும் எனக்கு
வியப்பையும் ஆச்சர்யத்தையும்
அளிக்கும் உங்கள்
வரிகளும் எண்ணங்களும் தான்
என் வாழ்க்கை பயணத்திற்கு
முன்னோடிகள். . .நன்றி அம்மா. . .

உங்களையும் .....? என் வணக்கத்திற்குரிய பதிவர் நீங்கள். நகைசுவை இழையோடும் பதிவுகள், ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையை நீங்கள் அழகாக கையாளும் விதத்தினையும் updated ஆக இருப்பதையும் எனக்கு புரிய வைத்தன. You are a role model sir. Thank you VGK sir.

வாழ்த்திற்கு நன்றி எல்.கே சார். இந்த வாழ்த்துக்கள் என் வலைப்பூவின் ஆயுளை அதிகரிக்கும்.

கேள்வியிலேயே தெரிகிறது நீங்களூம் ஆசிரியர்தானே. நான் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளேன். பேசி பழகியதை எழுதிப் பழகுகிறேன். எனக்கு ஏன் பெண் பதிவர்கள் வருகை எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று புரிந்து விட்டது. சினேகிதமான எழுத்துக்கள் இனி வரும். நன்றி திருமதி. ஸ்ரீதர்.

உங்களையும் என்றெல்லாம் சந்தேகப்படவேண்டாம் இராஜராஜேஸ்வரி. மகிழம்பூச்சரத்திற்கு வருகை தந்த முதல் பெண் பதிவர் நீங்கள்தான். உங்களை சொல்லாமல் 100வது பதிவு சிறக்குமா? வாழ்த்திற்கு நன்றி.

//அமைதிச்சாரல் said...

நூறு ஆயிரத்தைத்தொட மனமார்ந்த வாழ்த்துகள்.//
வணக்கம். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

//உழவன்" "Uzhavan" said...

மனமார்ந்த வாழ்த்துகள்!// மகிழம்பூச்சரத்தில் உங்கள் கருத்தும் உரைகல் போல் வந்திருக்கிறதே. நினைவு கூற வேண்டுமல்லவா?
வாழ்த்திற்கு நன்றி சார்.

நல்லோர் வாழ்த்து வாழும் காலம் முழுவதும் துணைவரும் என்பார்கள். தங்களுடைய வாழ்த்திற்கு நன்றி திரு.ரமணி சார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சண்முகவேல்.

வாழ்த்திற்கு நன்றி. நான் உள்ளத்திலிருந்து எழுதுவதாக பாராட்டி இருப்பதற்கும் நன்றி. இறைவனின் பரிசாக நான் கருதும் உறவுகள் , இனிமையானதாக உணரப்படவேண்டும் என்று விரும்புகிறேன். முழு மனதுடன் எழுதுவதன் பலன் இதுதான் போலும். அம்மா இல்லை என்று நினைக்க வேண்டாம், உங்கள் அருகிலேயேதான் நின்று உங்களை வாழ்த்திக்கொண்டிருக்கும் தாய் மனம். வேறு ஒரு transmissionl இருப்பதால் நம்மால்தான் உணரமுடியவில்லை

நன்றி பிரணவன். உன்னுடைய எழுத்திலும் அருமையான சிந்தனைகள் தெரிகிறது. இனிய எதிகாலம் அமைய வாழ்த்துக்கள்.

//கேள்வியிலேயே தெரிகிறது நீங்களூம் ஆசிரியர்தானே//

இதற்கு என்ன அர்த்தம் மேடம் என்னையும் ஆசிரியராக நினைச்சுடீங்களோனு ஐயப்படுகிறேன்.

ஹோம் மேக்கராகத்தானிருக்கேன்.உங்கள் பதிவை படிக்கும் முன் இராஜராஜேஸ்வரி அவர்களின் தளத்தில் பிப்லீஸ் பற்றி படித்தபோது அவருடைய பதிவு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்,எனவே அவரும் ஆசிரியரானு பின்னூட்டமிட்டு விட்டு இந்த பதிவிற்கு வந்தேன்,அப்போதுதான் தங்கள் புரொஃபைலை பார்த்தேன்,எனவேதான் நீங்களும் ஆசிரியரானு கேள்வியிட்டேன்.

ஆசிரியர் என்றாலே எனக்கு மரியாதை கலந்த பயம் வந்திடும்.

தெளிவான வார்த்தைகளுடைய உங்கள் பதிவுகளைப் பார்த்து நானும் அப்படி நினைத்து விட்டேன். ஆசிரியர்னா சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. நீங்கள் சொல்லுகின்ற அந்த 'பயம்' இருக்கிறதே , அது என் மாணவர்களிடமே கிடையாது. இனி நமக்குள்ளும் தேவையில்லை. சரிதானே.