மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நீண்ட கிளையின்
நெடிய வீசலுக்கு
சில்லிட்ட காற்றலை
தன்னிச்சையாய் கிளம்பி
வானத்தை வளைக்க
சற்றே சோம்பல் முறித்து
நீர்குட மேகம் உருள
வள்ளல் பெருந்தகையென
விண்ணிருந்து இறங்கியது
கோடைக்கால மழை!

அழையாத விருந்தாளியால்
தலைக்கு கைக்குடை பிடித்து
யாவரும் எதையோ தேடி ஓட
எதுவோ துரத்தும் பாவனையில்
வாகனங்கள் வழி கேட்டுஅலறி
மழையினை தொலைத்து ஓட
கைவண்டி கட்டவண்டி
அத்தனயும் நிமிடத்தில்
தடம் மறைத்து நகர்ந்திட
காலை குளித்து முடித்து
விரிந்த கூந்தல் பெண்ணாக,
அழுக்கு தொலைத்து
அழகாய் தனித்து நீண்டது
மழை நேரத்து சாலை!

18 comments:

நேற்று இங்கு ஒரே மழை .என் அனுபவம் கவிதையில் வந்தது மாதிரி இருக்கிறது.நன்று.

கோடை மழையை பற்றி கவிதை எழுத வேண்டும் என்று ஆவல். அனுபவ கவிதைதான். நன்றி திரு.சண்முகவேல்.

//காலை குளித்து முடித்து
விரிந்த கூந்தல் பெண்ணாக,
அழுக்கு தொலைத்து
அழகாய் தனித்து நீண்டது
மழை நேரத்து சாலை! //

ஆஹா வெகு அருமையான கற்பனை.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கோடை மழையை ரசிக்க மறந்தவர்களில், ரசனையான உங்கள் வரிகள் அருமை, அம்மா. . .

அழகான கவிதை

//ஆஹா வெகு அருமையான கற்பனை.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//
பாராட்டிற்கு நன்றி சார்.

நல்லாயிருக்குல்ல. ஆனால் மழையை உணர்ந்த அளவிற்கு வர்ணிக்க முடியவில்லை. நன்றி பிரணவன்.

வாருங்கள் திருமதி.ஸ்ரீதர். ரசனைக்கு நன்றி. அக்னி ஆரம்பித்தாயிற்று இனி மழை வருமாஆ என்று தெரியவில்லை.

வித்யாசமான உவமை கொடுத்துள்ளீர்கள்..மழை வந்தா சென்னைக்கு அனுப்பி விடுங்க

நீர் குட மேகம் உருள...
புதிய சிந்தனை
வெம்மை தொலைய
சாலை குளித்ததை
அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

மழையை கண்டால் சந்தோசப்படும் சிறுவன் போல உங்கள் கவிதையை படித்ததும் மழையில் நனைந்த சிறுவன் போல ஒரு சந்தோஷம். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. வாழ்க வளமுடன்

வந்தால் .... என் மகனுக்கும் சேர்த்து அனுப்பிவிடுகிறேன், நன்றி எல்.கே.சார்.

குடம் கவிழ்ந்தார்போல ஒரே இடத்தில் கொட்டி தீர்த்துவிடுகிறதே. அண்ணா நகரில் நனைந்து புதூர் சென்றால் சுற்றிலும் வெயில் கொளுத்த நாம் மட்டுமே ஈரமாய் தனித்து நிற்போம். நன்றி சார்.

@அவர்கள் உண்மைகள்

மழையில் நனைந்தால் அனைவரும் சிறு வயதிற்கு சென்று விடுவோம். என்ன , நனைவதற்கு இடம், பொருள் பார்ப்போம். பாராட்டிற்கு நன்றி.

வள்ளல் பெருந்தகையென
விண்ணிருந்து இறங்கியது
கோடைக்கால மழை!
கோடைமழை மேகத்திற்கு வாழ்த்துக்கள்.
மேகத்தைக்கண்டு ஆடும் மயில்போல் கவிதை கண்டு மனம் மகிழ்கிறது

மேகம் கண்டு ஆடும் மயில் போல் .... // கவிதைக்கு கவிதையா? நன்றி இராஜராஜேஸ்வரி.

ஃஃஃஃஅழையாத விருந்தாளியால்
தலைக்கு கைக்குடை பிடித்து
யாவரும் எதையோ தேடி ஓடஃஃஃஃ

என்ன ஒரு ஒப்பீடு ரொம்ப ரொம்ப அருமைங்க...

வணக்கம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. திரு.ம.தி.சுதா