மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பிரச்சினை என்பது
      1. நமக்குள்ளேயே இருக்கும் உள் மனப்போராட்டமாக இருக்கலாம். - படிப்பு, திருமணம், வேலை போன்ற முக்கியமான பிரச்சினைகள்.
      2. நமக்கும் மற்றவருக்கும் இடையே நடைபெறலாம் - உறவுகள் தொடர்பானவை
      3. நமக்கும் சூழ்நிலைக்கும் இடையே ஏற்படலாம்.- பொருளாதார சிக்கல், தவறாகிப் போன செயல்களின் விளைவுகள், தடங்கல்கள்.
      4. சமுதாய கோட்பாடுகள் தொடர்பான சிக்கலாக இருக்கலாம் - கோவில் திருவிழா போன்றவை.
      5. சந்தர்ப்பவசத்தால் ஏற்படலாம் - (விதிவசம் என்று சொல்லலாமோ?) - அப்போதே தோன்றியது இது சிக்கல்தான் என்று சொல்லப்படும் அனைத்தும்.
                                                                        தவிர்க்க நினைத்தும் மாட்டிக் கொள்வது

ஒரளவிற்கு அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். இவற்றை உதாரணமாக கொண்டால் விளக்குவது எளிது என்று கொள்கிறேன்.

முதல் பிரிவு நல்ல நண்பர்கள், பெற்றோர், நம் நலனில் கவனம் கொள்ளும் உறவுகள் இவர்களிடம் மனம் விட்டு பேசி தீர்வு தேடலாம். ஆலோசனை தருபவர்கள், முக்கியமாக பிரச்சினைக்கு சம்பந்தமில்லாதவர்களாக இருக்கு வேண்டும்.  அவ்வாறு இல்லையெனில் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

இரண்டாவது பிரிவு ரிலேசன்ஷிப் மேனேஜ்மெண்ட் - பேசித் தீர்த்துக்கொள்வது, இது ஒரு கலை. இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.


மூன்றாவது பிரிவில் சாணக்கிய தந்திரத்தை பயன்படுத்தலாம். .  நாம்தான் ஏற்கனவே 360 டிகிரி அலசல் செய்துள்ளோமே. பலவீனமான பக்கம் எது என்று தெரியுமல்லவா? அதனை பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒரு சிக்கலை தீர்க்க முடியவில்லை என்றால் அங்கு 360 டிகிரி அலசல் நடைபெறவில்லை என்று அர்த்தம். இந்த வகையில் கண்டிப்பாக மற்றவர்களின் உதவியும் தேவை. சில சமயம் இதிலேயே ஆழ்ந்து போய் சரியானபடி யோசிக்ககூட முடியாமல் போய்விடும்.

பிரச்சினை:   ஒருவரால் ஒரு காரியம் ஆக வேண்டும். பலவீனம் - நமக்குத் தெரிந்தவர் இல்லை. அவர் நேர்மையானவராம். வெளியாட்களிடம் பிடி கொடுத்துப் பேச மாட்டாராம். இதெல்லாம் அந்த விசயம் வெற்றி பெறாது என்பதாற்கான காரணங்கள். இவைதான் பலமான தடுப்புச்சுவர்களும்கூட. நிறைய சமயம் சுவரை உடைக்க முயற்சி செய்வோம். அது தவறு. சுவர் என்று இருந்தால் வாயில் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதைத் தேடுவோம். நமக்குத் தெரிந்தவர் இல்லை என்றால் அவருக்குத் தெரிந்தவர்களை கண்டுபிடிப்போம், நேர்மையானவர் என்றால் நேர்மையாகவே அணுகுவோம், ஒரு வித ஒளிவு மறைவில்லாத அணுகு முறை தேவை. இதுதான் என் பிரச்சினை தீர்க்க முடியுமா என்று பேசலாம். நாம் வேறு ஒருவர் மூலமாக அணுகும்போது, அந்த ஒருவரின் குண நலங்களும் கவனிக்கப்பட வேண்டும். சரியான நபர் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
    
பிரச்சினை :  ஒரு பரிட்சையில் வெற்றிபெற - நம்முடைய பலவீனமான பக்கங்கள் என்று சொல்லப்படுவது. படிக்கவே பிடிக்கவில்லை. மறந்து போய்விடுகிறது. என்னத்தை எழுதறாங்க படித்தாலே தூக்கம் வருகிறது. ஒரு விசயமும் பதியவில்லை. அடுத்த முறை பார்த்துக்கலாமா? இதெல்லாம் பிரச்சினையின் பலமான பக்கங்கள். நம்முடைய புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ற புத்தங்களை தேடி வேண்டும் - கணிதம் தொடர்பான பாடங்களுக்கு ராஜாராம் எழுதியவை நன்று என்போம். அடிப்படை புரிந்து கொண்டால், ஆர்வம் வந்துவிடும், மறதி வராது. சாதாரண நாட்களில் பதட்டம் இல்லாமல் வாசித்து  புத்தகத்துடன் நட்பு கொள்ளவேண்டும், உறக்கம் வராது. பரிட்சைக்காக படிக்கும்போது தடங்கல்  இன்றி பதியப்படும்.

நான்காவது பிரிவு: ஊர்கூடி தேர் இழுப்பது. இதனால் அந்த அளவிற்கு மன உளைச்சல் சாதாரணமானவர்களுக்குத் தோன்றாது. முயற்சி செய்வோம் எது வந்தாலும்  ஏற்றுக் கொள்வோம் என்ற மனப்பான்மைதான் இருக்கும்.



ஐந்தாவது பிரிவில் தீர்த்தே ஆக வேண்டுமா என்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு பிரச்சினையின் மையம் கண்டு மேலே குறிப்பட்ட வழிகளில் எதையாவது முயற்சி செய்யுங்கள்.

 பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே முன்னோடியாக செயல்பட்டு வெற்றியை அடைய வைக்கும்.  எண்ணத்தின் வலிமை மிக முக்கியம். கடவுள் போல கூடவே வரும்.  எதிர்பாராத வழியிலிருந்தெல்லாம் நமக்கு தீர்வு கிடைக்கும். அடுத்த பகுதியில் பேசி தீர்க்கும் கலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

18 comments:

அற்புதம்....

சரியான விளக்கங்கள்...

பிரச்சினை வந்தாலே உணர்வுகள் மிகுந்து மனம் சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறது .இது சுய பிரச்சினை.நல்ல அலசல் .நன்றி.

நல்ல பதிவு. தீர்வுக்கு நல்ல யோசனைகள்.

//பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே முன்னோடியாக செயல்பட்டு வெற்றியை அடைய வைக்கும். எண்ணத்தின் வலிமை மிக முக்கியம். கடவுள் போல கூடவே வரும். எதிர்பாராத வழியிலிருந்தெல்லாம் நமக்கு தீர்வு கிடைக்கும். //

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.

பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே முன்னோடியாக செயல்பட்டு வெற்றியை அடைய வைக்கும்.>>>>

அருமையான பகிர்வு.

பிரச்சனைகளை வகைப்படுத்தி அதற்குரிய தீர்வுகளை அலசும் இந்தப் பதிவு மிகத் தேவையான ஒன்று. சுய அலசலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக் கூடிய பதிவுகள். தொடர்ந்து கற்றுக்கொள்ளக் காத்திருக்கிறேன்.

அருமையான விளக்கங்கள்..

வார்த்தைகள் இல்லை பாரட்ட
வாசிக்க சந்தோசமா இருக்கு டீச்சர் அடுத்த பதிவிருக்கு காத்து இருக்கிறோம்

உங்கள் மாணவர்கள் நிறைய கொடுத்து வைத்தவர்கள் பாடம் யாரு வேண்டுமானாலும் நடத்தலாம் ஆனால் நீங்கள் இங்கு சொல்லித்தரும் அனுபவ படிப்பு சில பேர்களால் மட்டும் சொல்லிக் கொடுக்க முடியும். உங்கள் மாணவர்கள் சிறந்த மாணவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எனது பெரியப்பாவும் ஒரு பொறியல் பேராசிரியாக இருந்து சென்னையில் உள்ள மிகப் புகழ் பெற்ற எஞ்சினியரிங் காலேஜில் டைரக்டராகவும் இருந்தவர். அவரிடம் படித்தவர்களை அமெரிக்காவில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் போது எல்லாம் அவரா உங்கள் பெரியப்பா என்று அவரை புகழ்ந்து பேசுவார்கள் அது போல உங்கள் பெயரை கேட்கும் நேரம் வந்து விட்டது.

அனுபவ பாடங்களை நடத்தும் அன்பு தோழிக்கு எனது வாழ்த்துகள் என்றென்றும்

முதல் வருகை. நன்றி திரு.கவிதை வீதி சௌந்தர்.

நம்மால் சிந்திக்கமுடியாமல் போகும்போதுதான் தேக்கம் நேரிடும். நன்றி திரு.சண்முகவேல்

பாராட்டுகளுக்கு நன்றி VGK சார்.

கருத்துரைக்கு நன்றி திரு.பிரகாஷ்.

Thank you Mr.Karun

வணக்கம் சிவா. அடுத்த பதிவு தயாராயிட்டே இருக்கு. நன்றி.

என்னுடைய மாணவர்கள் சிலர் சிறந்த மாணவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அனைத்து மாணவர்களும் படிப்பு முடிந்து செல்லும்போது முன்பைவிட மேலானவனாக அனுப்பியிருக்கிறேன் என்று உறுதியாக சொல்லுவேன். நன்றி Mr.Tamilguy.

கீதா said...

தொடர்ந்து கற்றுக்கொள்ளக் காத்திருக்கிறேன்.//

மற்றவர்களுக்கும் இந்த விசயங்களை தேவைப்படும்போது எடுத்துச் சொல்வீர்கள் என்றும் எனக்குத் தெரியும். இங்கு வரும் அனைவரும் இது போன்ற விசயங்களை விரும்புவதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

IN ORDER TO ESCAPE FROM A PROBLEM THERE IS NO OTHER GOBUT TO SOLVE IT என்று படித்திருக்கிறேன்..ம்....

that is the required attitude. Thank you sir.