மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    இன்றைய கெடுபிடியான காலக்கட்டத்தில் சிந்தனைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையே மூழ்கிப்போகாமல் எதிர் நீச்சல் அல்லது முங்கு நீச்சல் போட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடத்துகிறோம். மூச்சுத் திணரும் வேளைகளில் ஒரு தேடுதல் நமக்கு ஏற்படும். அது சில  பொறுமையான மணித்துளிகள் தரும் அமைதியான சூழ்நிலையில் ஒரு மோனத்தவம் புரிய வேண்டும் என்று ஆவலாக இருக்கும். மலையிலேயோ, மாடியிலேயோ, கடலில், குளத்தங்கரையிலோ-  எங்காவது இதற்கான இடம் கிட்டிவிடும். மௌனம் நம்மை ஆட்கொள்ளும்போது, மனம் பேச ஆரம்பிக்கும். நம்முடைய சிக்கல்கள் எல்லாம் வரிசையாக பட்டியலிடப்படும். பொருளாதாரம், உறவுமுறை பிரச்சினைகள், உடல் நிலைக் கோளாறு என இருக்கும் பட்டியலில், யோசித்து சிலவற்றிற்கு விடையோ வழியோ கண்டுபிடிக்க முடியும். ஒரு தெளிவு பிறந்து அந்த வழிக்காட்டலின்படி நடக்க முனைவோம். மனக்கலக்கம் தீர்ந்திருக்கும். ஆனால் சில சமயம்,  இது போன்ற வழிமுறைகள் பயன்படாமல் இருக்கும். சிந்தனைக்கு தடையாக மேலும் சில விசயங்கள் நினைவில் முந்திக் கொண்டு வந்து நின்று  , விடை தேட முயற்சிக்கும் சிந்திக்கும்  திறனை கலைத்துவிடும். இப்போது இதை சரி செய்து என்ன செய்யப்போகிறோம் என்று விட்டேத்தியாக மனம் பேசும். ஏனென்று விளக்கமாக பார்க்கும் முன் , சில உதாரணம் பார்க்கலாமா? பொறுமையாக பிரச்சினையை கையாளாமல் சட்டென்று உணர்ச்சி வசப்படும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.


    இப்போது  புரிகிறதா? பிரச்சினை வேறு, அது ஏற்படுத்தும் தாக்கம் வேறு. இத்துடன் கூடுதல் பாதிப்பாக நாம் உடனடியாக ஏற்படுத்திய தவறான செயல்களின் பாதிப்புகள்.  உங்கள் மகனின் எதிர்காலத்தை சிந்திக்கும் முன், வீட்டினருடன் நீங்கள் இட்ட சண்டை வந்து கவனத்தைக் கலைக்கும். அங்கே கவனம் மாறிவிட்டால், அவர்கள் பேசிய பதிலும் நினைவிற்கு வரும். மகனின் பிரச்சினை தற்காலிகமாக மறந்துவிடும். இதேதான் மற்ற உதாரணங்களிலும் நடக்கும். இன்னும் சற்று பொறுமையாக யோசித்தால், இயலாமையாலும், குழப்பத்தாலும், கழிவிரக்கத்தாலும் வந்த கோபத்தை சட்டென்று  சம்பந்தமில்லாமல் திசை திருப்பிய தவறு நம் பக்கம் இருக்கும். அதனை சீர் செய்வதுதான் முதல்கட்ட நடவடிக்கையாக தோன்றும். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய யதார்த்தம் புலப்படும். இதனை சீர் செய்ய என்ன செய்யலாம்? மன்னிப்புதான்! பிரச்சினைக்கு சம்பந்தமேயில்லாமல் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்.

    மன்னிப்பு என்று சொல்லும்போதே - "அடடா, அதெல்லாம் காதிலேயே வாங்கமாட்டார்கள். எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் கோபம் குறையாது, தானாகவே சரியானால்தான் உண்டு" என்பது நம் பதிலாகவும், "ஆமாம், திரும்பவும் இப்படித்தான் நடக்கும். இதே வழக்கமாகிவிட்டது. இதில் மன்னிப்பு கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன? " என்ற நம்பிக்கையில்லாத பதில் எதிர்முனையிலும் கிட்டுவது நல்லதன்று. தானாகவே சரியாகிவிடும் என்ற நம்பிக்கை - மண்ணிற்கு அடியில் விளைவதற்காக காத்திருக்கும் வேர் போன்றது. மேலோட்டமாக வெட்டிவிட்டாலும் மீண்டும் தளிர்விடும் விஷச்செடி!

   கோபம், சண்டைபிடிக்கும் குணம், எதிர்த்து ஒருவர்கூட பேசக்கூடாது என்கிற ஆதி மனித எண்ணம் - இவை உடல் மூலக்கூற்றிலிருந்து இன்னமும் வெளியேற்றப்படவில்லை. எவ்வளவுதான் நாகரிகம் பயின்றாலும்  விஷக்கொடுக்களாய்  சட்டென்று வெளிப்பட்டு சுற்றியிருப்போரை பாதித்துவிடுகிறது. பிறகு மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதை நிருபிக்கும் வண்ணம் இது நம்மையும் பாதிக்கும். குறைந்த பட்சம் அன்றைய உணவை துறப்பதிலிருந்து நெருங்கிய உறவினர்கூட மனம் வெறுத்து ஒதுங்கும் நிலைக்கு ஆளாகிவிடும். உள்ளும் புறமுமாக செயல்பட்டு இதையெல்லாம் சரி செய்யும் மாமருந்து மன்னிப்பு! கேட்பது தருவதும் வரைமுறைக்கு கட்டுபட்டவைதான். நாம் அனிச்சையாக அன்றாடம் பயன்படுத்தும் "சாரி"க்கள்,  காற்றில் பறக்கும் பட்டம்போல் நம் கையை விட்டு பறந்து மன்னிப்பின் அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறன.. மேலும் இது பற்றி அடுத்தப் பகுதியில் தெரிந்து கொள்வோமா?


மாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-2

13 comments:

//கோபம், சண்டைபிடிக்கும் குணம், எதிர்த்து ஒருவர்கூட பேசக்கூடாது என்கிற ஆதி மனித எண்ணம் - இவை உடல் மூலக்கூற்றிலிருந்து இன்னமும் வெளியேற்றப்படவில்லை. எவ்வளவுதான் நாகரிகம் பயின்றாலும் விஷக்கொடுக்களாய் சட்டென்று வெளிப்பட்டு சுற்றியிருப்போரை பாதித்துவிடுகிறது.//

வாஸ்தவம் தான். யதார்த்த நிகழ்வுகளாகவே உள்ளன.

வழக்கம்போலவே மிகச்சிறந்ததோர் வாழ்வியல் கட்டுரை. உதாரணங்களுடன் சொல்லியிருப்பது மிகச்சிறப்பாகவும், மனதில் உடனே பதிவதாகவும் உள்ளன.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

தேவையான ஒரு பயனுள்ள பதிவு..

உண்மை தான். கடனுக்கு மன்னிப்பு கேட்கிறோம். அதனால் தான் என்ன பயன்.

தலைப்பு அருமை
பாதிப்பு தவறான செயல் என பட்டியலிட்டு இருப்பது
மிக சரியாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது
வழக்கம்போல் பயனுள்ள தரமான பதிவு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

பிரச்சினையை சரியான கோணத்தில் ஆராயமுடிவதே பிரச்சினை தீர்வதற்கான அறிகுறிதான். அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

உதாரணம் தந்தது உங்கள் வழிக்காட்டுதலின்படிதான். வருகைக்கு நன்றி சார்.

கருத்துரைக்கு நன்றி திரு.கருன்

உண்மைதான் சார், கடனுக்கு கேட்கும் மன்னிப்பு கண்களிலேயே தெரியும். நன்றி.

//பாதிப்பு தவறான செயல் என பட்டியலிட்டு இருப்பது
மிக சரியாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது// credit goes to VGK sir. பாராட்டிற்கு நன்றி ரமணி சார்.

அருமை.தொடருங்கள்.

நமக்கு மொட்டை மாடிதான்பா.
அதுவும் ராத்திரி இருளில் வானத்து நட்சத்திர மேகக் கூட்டங்களையும் நிலாவையும்
பாக்கும்போதே அந்த மோன நிலைக்கு எளிதாக செல்ல முடியும்

பதிவும், பின்னூட்டங்களும் ஜோர் ஜோர்!. மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்.

அருமையான கட்டுரை.