மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இத்தைனை வருடத்தின் பின்
     சான்றிதழில் இனம் தேடினேன்
முப்பாட்டன் கொள்ளுபாட்டன்
     வரலாறை தெரிந்து கொள்ள
தொலை தூரத்து சொந்தத்தை
     புதுப்பித்து   கொண்டு வருகிறேன்
ஊரில் குலசாமிக்கு திருவிழா
      உண்டியல் பணம் அனுப்பாமல்
குடும்பத்துடன் விரைகிறேன்
       உறவினர்களிடம் நெருக்கம்
பிள்ளைகளிடம் இறுக்கம்
        ஓரடி தள்ளி நிற்க முயற்சி
வீட்டினை நாட்டின் எல்லையாக்கி
     கட்டுக்குள் கொண்டு வரும்
காவலனின் கெடுபிடி முகம்
      குடும்ப வரைபடத்தில் ஒரு
அடையாளமாக முயற்சிக்கிறேன்


வினையூக்கி எதுவென்று
      இன்னமும் தெரியவில்லை
பக்கத்து வீட்டு பையனின்
       திடீர் காதல் விவகாரமோ...
சென்ற வாரம் சிறப்பாக நடந்த
    பெரியப்பா பேரன் திருமணமோ...
எனக்குள் விதைக்கப்பட்டிருந்த
   பரம்பரையின் பெருமை  விதை
விருட்சமாகி வளர்ந்துவிட்டதோ...
    இனத்தாரோடு சேர்தல் என்ற
வயதாகிவிட்ட கொள்கையோ...
அல்லது.....
குலம் காக்கும் யுத்தத்தில்
    மறுக்கப்பட்டு திசை மாறிய
என் இளவயது காதல் நினைவின்
    காலம் கடந்த தாக்கமா....?


23 comments:

வினையூக்கி காதல் விவகாரமாகத்தான் இருக்கவேண்டும்.நல்ல கவிதை

தசாப்தங்கள் கடந்தும், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வர்க்கப்பாகுபாடுகளை ஏற்க மனமின்றி, இனத்தோடு இனம் சேர முனையும் சமூகத்திற்குச் சாட்டை அடி கொடுத்திருக்கிறது உங்கள் கவிதை.

டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு ..
வாழ்த்துக்கள்..
நன்றி..

சொந்த பந்தங்களைவிட சமூக உறவுகளின் பால்
கொண்டிருந்த நம்பிக்கைகள் தவிடு பொடியானதாலோ
போலிகளே அசலைவிட தரமானதாக நிறையத் திரிவதாலோ
மூலங்களை ஓரளவுக்குமேல் உறவுகள்போல் அறியமுடியாது போவதாலோ
ஏமாற்றங்களைக் கண்டு கண்டு வெறுப்பேறிப் போனதாலோ...
வினையூக்கி எதுவென அறிந்து கொள்வது மிகக் கடினமே
வழக்கம் போல் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வினையூக்கி எதுவாக இருப்பினும் உறவுகளின்
அர்த்தம் அவசியமே.பகிர்விற்கு நன்றி

//வினையூக்கி எதுவென்று
இன்னமும் தெரியவில்லை//

தெரியாவிட்டாலும் பரவாயில்லை;
அவரவர் கற்பனைக்கே விட்டுவிட்ட இந்தக்கவிதை நன்றாகவே உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கற்பனைக்கு எல்லை இல்லையே.... கவிதை அருமை.

அருமையான கவிதை! நிறைந்த வாழ்த்துக்கள்!!

நல்லதொரு தொடர்பதிவிற்கு உங்களை இன்று அழைத்துள்ளேன்!

காலம் கடந்தாலும், கைகூடாத காதலின் வலி நிறைத்த நெஞ்சம், இதுவோ அதுவோ என காரணம் தேடுவதுதான் வேடிக்கை. ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்படும் நுண்ணுணர்வு அற்புதம்!

வினையூக்கி எதுவென்று
இன்னமும் தெரியவில்லை//

nice.

குலம் காக்கும் யுத்தத்தில்
மறுக்கப்பட்டு திசை மாறிய
என் இளவயது காதல் நினைவின்
காலம் கடந்த தாக்கமா....?//


:)

வினையூக்கி எதுவென்று
இன்னமும் தெரியவில்லை///

எவ்ளோவோ படித்து இருந்தாலும் எவ்ளோ வளர்ச்சி அடைந்தாலும்
எந்த நிகழ்வுகள் நடப்பதை எந்த சக்தியும் தடுக்க முடியவில்லை ...:((((

கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்

//வர்க்கப்பாகுபாடுகளை ஏற்க மனமின்றி, இனத்தோடு இனம் சேர முனையும் சமூகத்திற்கு// அதை விட்டு வெளிவரமுடியாது திரு.நிருபன். வருகைக்கு நன்றி

Thank you M.R.Karun

இது ஒரு தேடல். நீங்கள் சொல்லியுள்ள காரணங்களும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த திடீர் மாற்றம் அப்பாக்களிடம் மட்டும்தான். நன்றி ரமணி சார்.

இது நம்முடைய பார்வை ராஜி. நன்றி

//
தெரியாவிட்டாலும் பரவாயில்லை;
அவரவர் கற்பனைக்கே விட்டுவிட்ட இந்தக்கவிதை நன்றாகவே உள்ளது.
// பாராட்டிற்கு நன்றி சார்.

பாராட்டிற்கு நன்றி பிரகாஷ்

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி மனோ மேடம்

very sharp thinking! thank you Geetha.

Thank you Rajeswari

அப்படித்தான் சொல்றாங்க சிவா. கருத்துரைக்கு நன்றி.