மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

தடையில்லாத  ஒரு பயணம்
  எங்கும் யோசிக்க வைப்பதில்லை!
கால்கள் வலிக்காத வரையில்....
  ஒரு முட்டுச்சந்தின் முனையில்
முடிவற்ற நிலைக்கு  வரும்வரை..
   இருள் பாதையை மறைக்கும்வரை,
சுற்றுப்புறம் கவனிக்கப்படுவதில்லை!


அடிக்கடி ஒளிந்து மறைந்தோடி

   தொலைந்து மீளும் வெள்ளி நிலவு!
எதையோ தேடித்தேடி நித்தம்
   தோற்று மறையும் மேற்குச்சூரியன்!
இரவின் மின்மினி விண்மீன்கள்!
   அடிவானத்து வெளிச்ச சிதறல்கள்!
வரைந்த தூரிகை காயும் முன்
    கலைந்திடும் நீலவெளி வானவில்!
பிள்ளை பிராய கதை சொல்லும்
     மழைக்காலத்து மண்வாசனை!
நெருங்கி திரிந்து இணைந்து ஓடி
      சிற்பியாகும் கவின் மேகங்கள்!
எதுவும் கவிதையாவதில்லை.....

ஆனால்....
ஏதோவொரு திடீர் தேக்கத்தில்...
   தடைபட்ட நிற்கும் பயணத்தில்...
மீண்டும் வரும் நினைவுகள்,
   மயிலிறகில் மை தீட்டித் தீட்டி
கடந்து போன கவிதைகளை
   வரிவரியாக சொல்லிக்காட்டும்!
அத்தனையும் அழகாய் நிகழ்த்தும்
   மகா சக்தியின் இருப்பை காட்டும்!
தேங்கி மதியிழந்திருந்த மனம் 
    சிறகு முளைத்த பறவையாய்
ஆகாயத்து பால் வெளியில்
    பறந்து திரிந்து அமிர்தம் பருகி
புதிய சூரியோதயத்தை தேடும்.



21 comments:

முதல் வடை எனக்கே
சாரி
முதல் கவிதை

திடீர் தேக்கத்தில்...
தடைபட்ட நிற்கும் பயணத்தில்...
மீண்டும் வரும் நினைவுகள்,
மயிலிறகில் மை தீட்டித் தீட்டி
கடந்து போன கவிதைகளை
வரிவரியாக சொல்லிக்காட்டும்!//

எந்த வரிகளை விடுவது தெரியவில்லை
அனைத்தும் அருமை
இருந்தாலும் இந்த வரிகள்
மிகவும் பிடித்தது

வணக்கம் சிவா. இன்னிக்கு முதல் அட்டெண்டன்ஸ். கருத்துரைக்கு நன்றி.

ஆகாயத்து பால் வெளியில்
பறந்து திரிந்து அமிர்தம் பருகி
புதிய சூரியோதயத்தை தேடும்.

ஆகாயத்து பால் வெளியில்
பறந்து திரிந்து அமிர்தம் பருகி
புதிய சூரியோதயத்தை தேடும்.//

அழ்கான சூர்யோதயத்திற்கு வாழ்த்துக்கள்.

//அத்தனையும் அழகாய் நிகழ்த்தும்
மகா சக்தியின் இருப்பை காட்டும்!//

ஆமாம்.நன்று.

//அடிக்கடி ஒளிந்து மறைந்தோடி
தொலைந்து மீளும் வெள்ளி நிலவு!
எதையோ தேடித்தேடி நித்தம்
தோற்று மறையும் மேற்குச்சூரியன்!//

நான் அனுபவித்து ரசித்த வரிகள். அருமையான கவிதை.

தடையில்லா பயணம். அழகாக துவக்கி தன்னம்பிக்கையுடன் முடித்திருக்கிறிர்கள்.

//ஆனால்....
ஏதோவொரு திடீர் தேக்கத்தில்...
தடைபட்ட நிற்கும் பயணத்தில்...
மீண்டும் வரும் நினைவுகள்,
மயிலிறகில் மை தீட்டித் தீட்டி
கடந்து போன கவிதைகளை
வரிவரியாக சொல்லிக்காட்டும்!//

மயிலிறகால் வருடிக்கொடுத்தது போன்ற மென்மையான வரிகள்.

அதிகாலை சூர்யோதயம் என்றுமே புத்தம் புதியதே தங்களின் இந்த அழகிய கவிதை போலவே.

"அடிக்கடி ஒளிந்து மறைந்தோடி
தொலைந்து மீளும் வெள்ளி நிலவு!
எதையோ தேடித்தேடி நித்தம்
தோற்று மறையும் மேற்குச்சூரியன்!
இரவின் மின்மினி விண்மீன்கள்!
அடிவானத்து வெளிச்ச சிதறல்கள்!
வரைந்த தூரிகை காயும் முன்
கலைந்திடும் நீலவெளி வானவில்!
பிள்ளை பிராய கதை சொல்லும்
மழைக்காலத்து மண்வாசனை!
நெருங்கி திரிந்து இணைந்து ஓடி
சிற்பியாகும் கவின் மேகங்கள்!"

மிக அழகிய வர்ணனை!

//மீண்டும் வரும் நினைவுகள்,
மயிலிறகில் மை தீட்டித் தீட்டி
கடந்து போன கவிதைகளை
வரிவரியாக சொல்லிக்காட்டும்!//
VERY NICE!!!! :-)

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

அழ்கான சூர்யோதயத்திற்கு வாழ்த்துக்கள். // நன்றி இராஜராஜேஸ்வரி

நன்றி திரு சண்முகவேல்

கருத்துரைக்கு நன்றி கடம்பவனகுயில்

வருகைக்கு நன்றி திரு.தமிழ் உதயம்

அருமையான பாராட்டிற்கு நன்றி VGK சார்.

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மனோ மேடம்

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜீ

தங்கள் அறிமுகத்திற்கு நன்றி ரமணி சார்.

ஒவ்வொரு வரியிலும் மிளிரும் அழகும் கவிநயமும் அசத்தல். தடைகளையும் ரசிக்கச் சொல்லிக் கவிதையெழுதக் கற்றுத்தரும் வாழ்க்கை அழகுதான்.

நான் தேடிய சூர்யோதயம் "மகிழம்பூச்சரம்"