மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

        இது போன்ற சூழ்நிலை எப்போது? ஏன் உருவாகிறது?  குறிப்பிட்ட  உடல் நலக் கோளாறு ஏற்படும்போது - உதாரணமாக பித்தப்பை பாதிப்பு, வயிற்றுப் புண், மூளையில் சுரக்கும் திரவத்தில் (ஆனந்தமைடு) ஏற்படும் மாற்றங்கள் போன்ற வெளிப்படையாக தெரியாத கோளாறுகள் - சிந்திக்கும் திறனை பாதிக்கும். இவை நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்போது வெளிப்படையாகவே உடல் நலமில்லை என்று நமக்குப் புரிந்துவிடும். மருத்துவ ஆலோசனை பெறுவோம். ஆனால் ஏதோ ஒரு சிறிய நெருக்கடியில் சட்டென ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பெரிய பாதிப்புகளாக தெரிய வராது. இது ஒரு குறுகிய கால பாதிப்புதான். சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் அந்த குறுகிய காலத்திற்குள் நாம் அடுத்தடுத்த தவறுகளை செய்து  இடியாப்ப சிக்கலை உருவாக்கிவிடுவோம். இதனால் குடும்பத்திற்குள் ஏற்படும் குழப்பங்கள் வரையறுக்க முடியாது.

      சரி,  இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும்  ஏற்படக்கூடியதுதான், மற்ற வீடுகளிலும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதில்லையே என்று கேட்பீர்கள். உண்மைதான், மனதை பாதிக்கும் ஒரு சம்பவம் நடந்தால், உடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனை கூறி சமன் செய்துவிடுவார்கள்.  உதாரணத்திற்காக சொல்கிறேன், எங்கள் வீட்டில்  ஏதோ ஒரு விசயத்திற்காக சிறியவர்கள் பயந்துவிட்டால் அல்லது அதிர்ச்சியடைந்தால் கொழுமோர் செய்து சட்டென குடிக்கத்தருவார்கள் அல்லது ஒரு ஸ்பூன் சீனியை வாயில் போடுவார்கள்.  இது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை  சீர் செய்துவிடும். உடல் நலம் பாதிக்காது. ஆனால், குடும்பத்தினை முன்னேடுத்து  நடத்திச் செல்லும் முக்கிய பொறுப்பில் நாம் இருக்கும்போது நமக்கு அடுத்தவர் ஆலோசனை சொன்னாலும் பிடிக்காது, நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக  சொல்லவும் அவர்களுக்குத் தோன்றாது. . எனவே சூழ இருப்பவர்கள் உணர்ந்த  "சம்திங் ராங்" என்கிற விசயம் நமக்கு தெரியாமல் போய்விடும். இந்த நிலை கண்டிப்பாக மற்றவர்களையும் பாதிக்கும். ஒரு சறுக்குப்பாதையில் நாம் பயணிப்பதையும் அதன் முடிவு மூச்சு திணறவைக்கும் ஒரு இருள் குகை என்பதும் பயணத்தின் ஆரம்பத்தில் தெரியாது. உடன் இருப்பவர்களுக்கும் இது பற்றி புரிந்து கொள்ளமுடியாது.


     ஒரு மலை பாதையில் பயணிப்பவர் தனித்து செல்லும்போது ரொம்பவும் ஜாக்கிரதையான உணர்வுடன் காலடிகளை எடுத்து வைப்பார்கள். அதுவே ஒரு குழுவாக செல்லும்போது தலைமை ஏற்றிருப்பவர்மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்படி செய்வார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்களும், சரியான பாதையை தேர்வு செய்து வழி நடத்துவார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் அவர் வழிகாட்டுதலை மட்டுமே தொடர்வதால் தனக்கென்று ஒரு சிந்தனை இருக்காது. ஏதோ ஒரு இடத்தில் தலைமை பொறுப்பேற்றவர் தவறிவிட்டால், அதனை கவனித்து சரி செய்யவும் தோன்றாது. முடிவு மொத்த குழுவிற்கும் தோல்விதான் கிட்டும். இதேபோலத்தான், குடும்பத்தில் முக்கியமான பொறுப்புகளை தன்வசம் வைத்திருக்கும் ஒருவர் தவறாக சிந்திக்கும்போது அதன் பாதிப்பு மொத்த குடும்பத்திற்கும்தான். ஏன் தெளிவான முடிவுகளை நம்மால் எடுக்க முடியவில்லை என்று கேள்வி தோன்றினாலும் எடுத்து சொல்லத்தயங்குவார்கள். தப்பித்தவறி  சொன்னாலும் கடுமையான பதில்தான் கிட்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.  நாமும்தான் தவறான சிந்தனைகளினால் ஒரு இணக்கமான நிலையினை தவிர்த்து விலகி இருப்போம். நாம் சொல்வதை மறுத்துப்பேசிய தற்சமய சூழ்நிலையை கருத்தில் கொண்டு  கழிவிரக்கத்தினால் இன்னும் அவர்களைத் தவறாக நினைக்க ஆரம்பிப்போம். ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால், நம் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்களை நாம் நம்பிக்கை வைத்து இருப்பவர்களையும் விலக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்முடைய தோல்விக் கதையின் முதல் வார்த்தை எழுதப்படுகிறது. 
 
    ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர். சிறிய வயதில் வாழ்க்கையை வெறுங்கையுடன் ஆரம்பித்தவர். கடுமையான உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். அருமையான மனைவி, வளர்ந்த பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் சொல்லை தட்டமாட்டார்கள். வயதாகி விட்டது. அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஒரு நெருக்கடி வந்தது. வெற்றியையே சந்தித்து பழகியவரால் இதனை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். தன் விசயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவர் சிந்தனை குழப்பத்தால் தவறான முடிவுகளை எடுக்கிறார். ரொம்ப நாள் கழித்து முதல் தோல்வி. பிள்ளைகளுக்கு தந்தை மேல் இருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. அவரின் தவறான முடிவுகளை விமர்சிக்கின்றனர். இது மேலும் அவரின் உடல் நிலையினை பாதிக்கிறது. விட்டதை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதுவும் சிக்கல்.  குடும்ப சிக்கல் மனதை ஓய்த்துவிட்டது. பொருளாதார சிக்கல் ஆரம்பிக்கிறது. மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்று நான் சொன்னது இதனைத்தான்.
 
                                                                          - மீதி அடுத்த பதிவில் தொடரலாமா?

11 comments:

கண்டிப்பாக தொடரவும்.நன்று.

பதிவு மிக நன்றாகச்செல்கிறது. உதாரணங்கள் சூழ்நிலையை நன்கு புரிந்து படிக்க சுவை கூட்டுவதாக உள்ளன. தொடருங்கள்.

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

எப்போதுமே நாம் செய்வதெல்லாம் சரியாக இருக்கும் நம்பி விடக்கூடாது. வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் துல்லியமாக வைக்கிறிர்கள்.

சிக்கல்களை சீராக
சொல்லி வைத்து
அதை அவிழ்க்கும் முறையையும்
சொல்லி விடுங்கள்...
உங்கள் படைப்பு நல்லா இருக்கு
தொடருங்கள்...

http://www.ilavenirkaalam.blogspot.com/

கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்.

ஊக்குவிப்பதற்கு நன்றி சார்.

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள். //பாரட்டிற்கு நன்றி சார்.

உண்மைதான் திரு.தமிழ் உதயம்

கண்டிப்பாக, அடுத்தடுத்த பகுதிகளில் புரியும் திரு.மகேந்திரன்.

நிச்சயம் தொடருங்கள்
உங்கள் சேவை நிச்சயம் தேவை
அனைவருக்கும் செல்லாவிடினும்
என்னைப்போன்ற ஒரு சிலருக்கு பயன்படுமே
அனுபவம் சொல்லிகொடுக்கும் பாடம் பயன்படுமே
நன்றி தங்கள் பதிவுக்கும்