மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


   ஏன் ஏற்படுகிறது என்பது புரிந்து விட்டது, எப்படி இதை உணர்வது என்பதை பார்க்கலாமா? உணர்வது என்ற வார்த்தை சற்றும் பொருந்தாதுபோல் தெரியும். ஆனால் தவிர்க்கமுடியாமல் பயன்படுத்துகிறேன். நமக்குள் ஒரு குழப்பமான நிலை உருவாகியுள்ளதை எளிதாக நாம் உணர மாட்டோம். ஏகப்பட்ட விசயங்களை ஒரே சமயத்தில் கையாள்வதால், சில நம் தலையீடு இல்லாமலேயே சரியாக நடக்கும். மிகச் சிலவே குழப்பத்தில் முடியும்.  அதற்கும் யாருடைய தவறான லையீடோதான் காரணம் என்று நம்புவோம்.

     இதற்கான அறிகுறிகள் என்பது காய்ச்சல், தலைவலிக்கு வருவது போல் தெள்ளத்தெளிவாக இருக்காது. நம்முடைய தடுமாற்றங்களை உடனிருப்பவர் உணர்வார்கள். ஆனால், நாம்தான் தன்னம்பிக்கை சிகரத்தில் இருக்கிறோமே , மிகவும் வேண்டியவர்கள் சொன்னால்கூட ஒப்புக் கொள்ளாமல் மறுத்துவிடுவோம். "அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னை குறை சொல்ல முயற்சிக்காதீர்கள்" என்று கூறி விடுவோம். சும்மாவும் இருக்க மாட்டோம், அந்த மற்றவரிடம் குறை கண்டு அவரை திசை மாற்றும் வித்தையை மனம் முயற்சிக்கும். இதுவும் ஒரு மனோதத்துவம்தான்.  முன்னெடுத்து நடத்தி செல்லும் தலைமைப் பண்புகள் உடையவருக்கு மற்றவர்களை நுணுக்கமாக கவனிக்கும் திறன் அதிகம் இருக்கும். சாதாரண சமயத்தில் அவர்களுக்கு சரியான குறிப்பு தந்து பொறுப்பாக செயல்படுவோம். ஆனால் இது போன்ற சமயங்களில் "போட்டு பார்ப்பது" என்பார்களே...  அதற்குரிய ஆயுதமாக இதனை பயன்படுத்துவோம். ஏனென்றால்,  தலைமை பண்புகளை உணர்ந்த நம் உள்மனம் குறை சொல்பவர்களை தள்ளி வைக்க நினைக்கும். பலமே பலவீனமாகும் மாயை புரிகிறதா? அதனால்தான் இதனை எவ்வாறு உணரலாம் என்று விளக்க ஆரம்பித்தேன்.


1. அருகில் இருப்பவர்களின் குறைகள் பெரிதாகத் தெரியும்

         - "என்னவொரு பொறுப்பில்லாத்தனம். நான் இதை செய்யவில்லை   
என்றால் இந்த வீட்டில் யாருமே செய்யமாட்டார்கள் போலும்".      உண்மை ன்னவென்றால், அவற்றை செய்வதை நம்முடைய தலையாய கடமையாக இத்தனை நாள் செய்து வந்திருப்போம்.
         - (உ-ம்) செடிகளுக்கு நீர் விடுதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல் போன்ற வழக்கமான வேலைகள்.

2. ஒருவித அயர்ச்சி தோன்றும்.
        - இது ஏதோ ஒரு முடிவை நோக்கி பயணிப்பதைப்போல உணர்த்தும். "என்ன வாழ்க்கை இது சந்தோசமாகவே இருக்க முடிவதில்லை"
 
3. படுத்தவுடன் உறக்கம் வராது. சிந்தனைகள் எதிர்மறையாக தோன்றும்.
       - . இந்த வேலையை விட்டு விடலாமா? வியாபாரம் சரியாகாது போலிருக்கே? நமக்குப் பிறகு யார் குடும்பத்தை பார்ப்பார்கள்?

4.  குடும்பத்தினர் தவிர மற்றவர்களிடம் குடும்பத்தை பற்றி கவலையுடன் புலம்பித் தீர்ப்பீர்கள். அல்லது மற்றவர்களை உயர்வாக நினைப்பீர்கள்.


5. சமயத்தில் நெஞ்சு வலியைகூட உணர்வீர்கள் - மருத்துவரிடம் செல்லாமல், உடனிருப்பவர்களுக்கு பொறுப்பை திடீரென்று சுமர்த்தி எதிர்பார்த்த செயல்பாடு அவர்களிடம் இல்லாததைக் கண்டு மேலும் பதட்டம்கூடும். இது சுழற்சி முறையில் மறுபடியும் உங்களின் உள்ளுறுப்புகளை பாதிக்கும். மீண்டும் எண் 1 லிருந்து தொடரவும்.

    இதில் ஒன்றிரண்டு இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்களின் குடும்பத்தவர்கள் உங்களுடன் பேசுவதை தவிர்த்தாலோ, பார்வையில் படாமல்  ஒதுங்கினாலோ, முன்புபோல உங்களிடம் கருத்து பரிமாற்றம் செய்யாமல் இருந்தாலோ சுதாரிக்க வேண்டும். உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தைகள் அவர்களுக்கு மன வருத்தம் தரும். உதாரணமாக, "எதுக்கு இப்படி வீண் செலவுகள் செய்ற? உருப்படியா எதாச்சும் செய்யமாட்டியா?". உங்களுக்கு மிக சாதாரணமாக தோன்றும். ஏனென்றால், நமக்குப் பிறகு..... என்ற பயமுறுத்தும் கேள்வி சமீபகாலமாக உங்களை சுற்றி வருவதால் இது போன்று பேசத் தோன்றும். ஆனால், நேற்றுவரை "நான் உன்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன். நான் கவனமாக பார்த்துப்பேன். " என்று சொன்ன நீங்கள் இப்படி பேசுவது அவர்களை, முக்கியமாக பிள்ளைகளை மட்டம் தட்டுவது போல நினைக்க வைக்கும். இது போன்ற வார்த்தைகளை பத்தாவது படிக்கும் மகனிடம் பேசப்போக, அவன் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு உணவு விடுதியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான். தேடிப்பிடித்து அழைத்து வந்து கேட்டால் "அப்பாவே சொல்லிட்டார் நான் எதுக்கும் லாயக்கில்லை என்று" என்று வருந்தினான்.

   கொசுறான டிப்ஸ்  என்னவென்றால் பேசும்போது நம்முடைய பாசத்திற்குரியவர்களின் முகபாவங்களையும், பார்வை மாற்றங்களையும் கண்டுணருங்கள்.

.                                                பிறகு.... என்பதை நாளை தொடரலாமா?

11 comments:

//ஆனால், உங்களின் குடும்பத்தவர்கள் உங்களுடன் பேசுவதை தவிர்த்தாலோ, பார்வையில் படாமல் ஒதுங்கினாலோ, முன்புபோல உங்களிடம் கருத்து பரிமாற்றம் செய்யாமல் இருந்தாலோ சுதாரிக்க வேண்டும்.//

//பேசும்போது நம்முடைய பாசத்திற்குரியவர்களின் முகபாவங்களையும், பார்வை மாற்றங்களையும் கண்டுணருங்கள்.//

நன்றாகவே புரிகிறது. தொடருங்கள்.

தெளிவாகவே போகிறது.தொடருங்கள்.

பேசும்போது நம்முடைய பாசத்திற்குரியவர்களின் முகபாவங்களையும், பார்வை மாற்றங்களையும் கண்டுணருங்கள்.// இனி பார்த்து பேசணும்..

ஆரோக்கியமான கருத்துரையாடல்கள்.
நமக்கு சரி என்று தோன்றும் சில பிறருக்கு தவறு என
தோன்றுவது நிமித்தம் நடக்கும் ஒன்றே...
இந்த செய்தியை அழகாய் விளக்கியிருக்கிறீர்கள்.
முன்னிலை நிற்பவரின் முகபாவனை அறிந்து பேசுவது
மிகப்பெரிய செயல்...
முயற்சிப்போம்...
தொடருங்கள்..
வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக கவனிக்கிறிர்கள்..

பலமே பலவீனமாகும் மாயை புரிகிறது... வாழ்வில் தொடர் தோல்வி சந்தித்த போதும், வீண் பழிச்சொற்களால் அவமானங்கள் வந்த போதும் நானே இதை அனுபவித்திருக்கிறேன்.... பயனுள்ள பகிர்வு நன்றி சகோதரி

பேசும்போது நம்முடைய பாசத்திற்குரியவர்களின் முகபாவங்களையும், பார்வை மாற்றங்களையும் கண்டுணருங்கள்.//

அற்புதமான சுய பரிசோதனை.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அழகான தெளிவான உளவியல் ஆய்வு. பலமே பலவீனமாகும் மாயை பற்றி மிக அழகாக உணர்த்துகிறீர்கள். தொடர்ந்து தரும் பதிவுக்கு நன்றியும் பாராட்டும்.

மூன்று பகுதிகளையும் ஒன்றாகப் படித்து விட்டேன்.
நீங்கள் உங்களது மன வளக் கட்டுரைகளை
புத்தகமாக இதுவரை வெளியிட்டுள்ளீர்களா?
அவ்வாறிருப்பின் அவை பற்றிய தகவல்கள் அளிக்கவும்.
அப்படி இல்லை எனில் இனி வெளியிடலாமே.
பலருக்கு பயன் இருக்குமல்லவா?

பிறகு.... என்பதை நாளை தொடரலாமா?//

இந்த கேள்வி தவிர அனைத்தும் எனக்கு பிடித்து இருக்கிறது :)

நிச்சயம் நீங்கள் தொடருங்கள்
யாரவது ஒருவருக்கு பயன்பட்டாலும் உங்கள் பதிவுக்கு வெற்றிதான்