மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    இனி ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.   குழந்தை பேற்றிற்காக 'அவள்'  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.  அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறப்பு நடந்தது. மருத்துவமனையிலேயே பத்து நாட்கள் இருந்து சிகிச்சை பெற்றாள். பிறகு வீடு திரும்பினாள். இதுவரை சரி, அதற்குப் பின் நடந்ததுதான் பிரச்சினை. அவளுக்கு துணைக்கு வைத்திருந்த வேலைக்கார அம்மாள் வெளியே சென்றபோது குழந்தையை கீறி அழவிட்டு விட்டாள். முதலில் இதற்குக் காரணம் தெரியவில்லையெனினும் பின் வரும் நாட்களில் இது மறுபடியும் தொடர பெற்றவேளேதான் குழந்தையை இம்சிக்கிறாள் என்பது தெரிந்து அதிர்ச்சியுற்றனர். ஏன் இப்படி?  கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

    அவளுடையது காதல் திருமணம். வீட்டை விட்டு வெளியேறி நடந்த திருமணம்.  கணவன் மனைவி இருவரும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். நல்ல சம்பளம். கலகலப்பாக இருந்த அவளும் அவள் கணவனும் இன்னும் மகிழ்வுடன் எதிர்காலத்தை திட்டமிட்டனர். நகரத்திலேயே சிறந்த மருத்துவமனையில் பேறுகால சிகிச்சை மேற்கொண்டனர்.  இரண்டு பேருடைய குடும்ப ஆதரவும் இன்றி அவர்கள் தனித்து அந்த காலக்கட்டத்தை கடந்தனர். வீட்டின் செல்ல மகளாக இருந்த அவளுக்கு ஒரு விசயத்தை பற்றி ஐயம் திரிபற அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். தன்னுடைய தாய்மை பேறு, குழந்தை பற்றிய பல சந்தேகங்களுக்கு விடை மருத்துவரிடம் , தோழியரிடம் தெரிந்து கொண்டாலும் அவளை பலவீனப்படுத்திய நினைவு ஒன்று உண்டு.  யாருமற்று தனித்து இருந்த நாட்களில் இது விதைவிட்டு விஷவிருட்சமாகியிருந்தது. பெரியவர்களை மறுத்து திருமணம் செய்தபின் அவளுடைய தாயார் வருத்தத்துடன் சொன்ன வார்த்தைகள் சாபம்போல அவளுக்குள் புதைந்து நின்று சமயம் பார்த்து நினைவிற்கு வந்து மனதை அலைக்கலைத்தது. அவர் சொன்னது என்னவென்றால் "ஒழுக்கமாக உன்னை வளர்த்தேன் என்று நினைத்தேன். சிரித்து சிரித்தே என்னை ஏமாற்றிவிட்டாய். உனக்கு ஒரு குழந்தை பிறந்து அது வீட்டைவிட்டு ஓடும்போதுதான் என் வேதனை உனக்குப் புரியும்" என்பதுதான் அது.  அவளுக்கு பெண் குழந்தை பிறக்கக்கூடாது என்று ஊரில் உள்ள கடவுள்கள் எல்லோரிடமும் வேண்டுதல் வைத்திருந்தாள். அதனையும் மீறி அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவளுடைய சிந்தனை சிக்கலாகிவிட்டது.  சாதாரணமாக தெளிவாக சிந்திக்கும் புத்திசாலிப் பெண் என்றாலும் தற்போது ஈஸ்ட்ரோஜன் மாறுபாட்டால் மனம் கலங்கிவிட்டது. குழந்தையின் மீது வெறுப்பு ஆரம்பித்துவிட்டது. அதுதான் பேறுகால மன அழுத்தம் எனப்படும் postpartum depression.

     குழந்தை பிறந்தபின் தாய் சோர்வாக இருப்பது, தளர்வான மன நிலையில் இருப்பது, பசியின்மை, குழந்தையிடம் விலகி இருப்பது போன்றவை பொதுவாகவே காணப்படும். பத்து நாட்களுக்குள் சரியாகிவிடுவார்கள். இது பெண்களுக்கு என்று சிறப்பாக உருவாகும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோனின் அளவு மாறுவதும் பிறகு சரியாவதுமாகி இடைவெளியில் நடைபெறும் பிரச்சினை.  (இதுதான் கருப்பை கோளாறு ஏற்படாமல் காக்கிறது. மேலும் மன நிலையினை பாதுகாக்கும் சிறப்பும் இதற்கு உண்டு. ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டினால் மன அழுத்தம் எளிதில் உருவாகும்.) இதனை பேபி ப்ளூ எனலாம். சிறிய பிரச்சினைதான்.

    ஆனால் இந்த கோளாறு சீராகாமல் தொடர்ந்தால் அது போஸ்ட்போர்டம் டிப்ரெஸன் ஆகும். இது ஆறு மாத இடைவெளிக்குள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். தொடரும் அறிகுறிகள் - சோகமாக இருப்பது, காரணமில்லாமல் அழுவது, நிம்மதியின்மை, பசியின்மை, எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, சோம்பி இருப்பது, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம், எதற்கும் தகுதியில்லாதவள் ஆகிவிட்டோமோ என்ற கவலை, புலம்பல், எடை குறைவு அல்லது அதிகரிப்பது, குழந்தையிடமிருந்து விலகுதல். உடன் இருப்பவர்கள் இவற்றை கவனித்து சரி செய்ய வேண்டும். இல்லையெனில் இன்னும் மோசமான   மனச்சிதைவு உண்டாகலாம். அதனை postpartum psychosis என்பார்கள். இதன் விளைவாக  தற்கொலைக்கு முயல்வது அல்லது குழந்தையை கொல்ல முயல்வது போன்றவை நடைபெறலாம். அதற்கு காரணமாக எதையாவது சொல்வார்கள். இது போன்ற செய்திகள் நாளிதழ்களில் இப்போது அடிக்கடி வருகின்றன. யாரோ எங்கோ கவனிக்கமுடியாத தேசத்தில் நடைபெற்றதுபோக இப்போது பக்கத்திலேயே இவை நடைபெறுகின்றன.

இதற்கான சிறப்பு மருத்துவரிடம் " திருமண உறவு புனிதமாக மதிக்கப்படாத மேலை நாட்டில் இது போல நடைபெறலாம். இந்தியாவில் இதுபோல உள்ளதா?" என்று கேட்டதற்கு அவருடைய பதில்" இந்தியாவிலும் இது பரவத் தொடங்கியுள்ளது. மும்பையில் ஒரு பெண் தன் ஒன்றரை மாதக் குழந்தையை மாடியிலிருந்து வீசியெறிந்திருக்கிறாள். கொலை முயற்சியாக மாறியது மட்டுமே பதிவாகிறது. மற்றபடி இதுபோன்ற மனச்சிதைவின் மற்ற வெளிப்பாடுகள் எளிதில் கண்டு கொள்ள முடியாததால் வெளியே தெரிவதில்லை."

இதனை எப்படி தவிர்ப்பது? இது சம்பந்தமான தொன்று தொட்டு வரும் நம்முடைய பழக்க வழக்கங்கள் . அதற்கான நம்முடைய பங்களிப்புகள். இவை பற்றி அடுத்த பதிவில் காணலாமா?.


17 comments:

postpartum depression.பற்றிய விளக்கம் அருமை.தொடருங்கள்.

அருமை.தொடருங்கள். //கருத்துரைக்கு மிக்க நன்றி திரு.சண்முகவேல்

///" திருமண உறவு புனிதமாக மதிக்கப்படாத மேலை நாட்டில் இது போல நடைபெறலாம். இந்தியாவில் இதுபோல உள்ளதா?" என்று கேட்டதற்கு அவருடைய பதில்" இந்தியாவிலும் இது பரவத் தொடங்கியுள்ளது.///

முற்றிலும் உண்மையான கருத்து
மன உவலைகளினால் இவ்வாறான
காரியங்கள் நடக்கத்தான் செய்கின்றன
நல்ல உளவியல் கட்டுரை சகோதரி.
தொடருங்கள்.....

நல்ல பதிவு.
ஆச்சரியமாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

//மும்பையில் ஒரு பெண் தன் ஒன்றரை மாதக் குழந்தையை மாடியிலிருந்து வீசியெறிந்திருக்கிறாள். கொலை முயற்சியாக மாறியது மட்டுமே பதிவாகிறது. மற்றபடி இதுபோன்ற மனச்சிதைவின் மற்ற வெளிப்பாடுகள் எளிதில் கண்டு கொள்ள முடியாததால் வெளியே தெரிவதில்லை." //

மனச்சிதைவு என்பது மிகவும் கொடுமையான விஷயம் தான்.
இதனால் அந்த நோயாளிக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர், உற்றார் உறவினர், அக்கம்பக்கம், சுற்றியுள்ள சமூகம் அனைத்துக்குமே [அச்சம், ஆபத்து, சங்கடங்கள், அவமானங்கள், செலவுகள், பாதுகாப்பின்மை முதலிய] பல தொல்லைகளும், பழிச்சொல்களும் ஏற்படுவதுண்டு.

பலரும் பலவித சிகிச்சை முறைகளும், உபதேசங்களும், ஜோஸியம், மாந்திரீகம் முதலிய வெவ்வேறு யோசனைகளும் சொல்லிக் குழப்புவதுண்டு.

உண்மையில் இது போன்ற மன்ச்சிதைவு ஏற்பட்டுள்ள ஒருவரின் கணவன்/மனைவி, தாய்/தந்தை போன்ற மிக நெருக்கமான உறவுகளுக்கே அதன் வலி தெரியும்.

நல்ல மனநோய் மருத்துவரிடன், உடனடியாக அழைத்துச்சென்றால் மட்டுமே இவர்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

தங்களின் இந்தப்பதிவு, சற்றே பயமுறுத்துவதாகவும், நம்ப முடியாததாகவும் சிலர் நினைக்கலாம்.

இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பயனுள்ள ஒரு பதிவு.

தொடர்ந்து விளக்கமாக எழுதுங்கள்.
அனைவரும் இதன் ஆபத்தைப் புரிந்து கொள்ளட்டும். vgk

ஒவ்வொன்றையும் மிக ஆழமாக கவனித்து எழுதுகிறிர்கள். அருமை.

// நல்ல உளவியல் கட்டுரை சகோதரி.
தொடருங்கள்....// கருத்துரைக்கு நன்றி திரு.மகேந்திரன்

ஆனால் உண்மை சார், இது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதாக 2008லேயே ஹிண்டு நாளிழிதல் தெரிவித்திருந்தது. வருகைக்கு நன்றி சார்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனையும் உண்மை. என் அம்மா ஒரு தாய்ப்பேறு மருத்துவர் இருந்தார். பேய் பிடித்துவிட்டது என்று சொல்லப்படும் பெண்களுக்கு கருப்பையை உறுதியாக்கும் மருந்துகளைத் தருவார். விளக்கமான கருத்துரைக்கு மிக்க நன்றி சார்.

நான் ஒரு ஆராய்ச்சியாளர் ஆகிக்கொண்டிருக்கிறேன் என்கிறீர்கள். மிக்க நன்றி திரு.தமிழ் உதயம்.

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்

சிறப்பான விஷயம் சொல்லி இருக்கீங்க ,நாளையும் வருகிறேன் வாசிக்க ,நன்றி பகிர்வுக்கு

நல்ல உளவியல் கட்டுரை சகோதரி...என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

<<>

நீங்கள் DOMS MKU ஆ ?

அதிச்சியூட்டும் தகவல்களாக இருந்தாலும்
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
பதிவு இது
நடைமுறை விஷயங்களை அறிவுப் பூர்வமாக
விஞ்ஞானப் பூர்வமாக அலசும் உங்கள் பதிவு
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

வணக்கம் திரு.M.R முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

வணக்கம் திரு.ரெவரி. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இல்லை. அடிப்படையில் நான் ஒரு இஞ்சினியர். பிறகு மேலாண்மைக்கு மாறி விட்டேன்.

//அதிர்ச்சியூட்டும் தகவல்களாக ....// இது நம் நாட்டிற்குதான் புதிது சார். மிக சமீபமாகத்தான் இங்கேயும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. நண்றி சார்.