மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நொடிக்கொரு முறை எந்தன்
கண்ணிமைகள் துடிக்கும்போது
ஒரு நிழற்படம் பதியப்பட்டது...
என்னுடைய தொகுப்பாக நீயும்,
உந்தன் பதிவுகளில் நானுமாக
கணக்கின்றி சேமித்தோமே....!

சூரியபிரகாசமான தாய்மையில்
என்னை நீ அழகாக பதிந்தாய்
விழிகளின் ஓரத்தின் கண்ணீரில்
உன் சிரிப்பைத் தவிர வேறேது?
நெஞ்சில் வைத்துக் கொண்டாடி
தோளில் சாய்த்து வருடினேன்
உறக்கம் வந்த வேளையில்கூட
கண் சிமிட்டலின் புன்னகையில்
முத்தத்துடன் ஒரு அன்புப்பதிவு.

வளர்ந்தபின் மறந்துவிட்டாய்
என்னைத் தேடும் உன் தேடுதல்
மெல்ல மெல்ல பழங்கதையாக,
இருளுக்குள் ஓடி ஒளிந்திட்டாய்.
சாளரத்தின் வெளியே ஒளியில்
உன் மழலை முகத்தின் சாயல்
உன்னைதான் நான் தேடுகிறேன்!

வயிற்றிலிருந்து மடியிலும் ...
மடியிலிருந்து ஏந்தி கைக்கும்....
கையிலிருந்து தோள்களுக்கும்,
மாற்றியே உன்னை சுமந்தேனே
உயிரை உருவி வேற்று பூமிக்கு 
அனுப்பித் தொலைத்தேனா?
ஆனால் நீ மட்டும்.......?


25 comments:

வயிற்றிலிருந்து மடியிலும் ...
மடியிலிருந்து ஏந்தி கைக்கும்....
கையிலிருந்து தோள்களுக்கும்,
மாற்றியே உன்னை சுமந்தேனே >>>>>

அம்மாவின் தேடல். தவிப்பு.

தாய்மையின் அன்பும்
முதுமையின் அலறலும்
ஒருங்கே இணைத்த கவிதை
நெஞ்சம் கனக்க வைக்கும் கவிதை.

அன்பு பதிவில் தாய்மையின் தேடல் அமைதி குமறல்....நெஞ்சை வருடும் சோகம் கவிதையாக தாய்மையின் உள்ளத்தில் நீடிக்கிறது.

//வயிற்றிலிருந்து மடியிலும் ...
மடியிலிருந்து ஏந்தி கைக்கும்....
கையிலிருந்து தோள்களுக்கும்,
மாற்றியே உன்னை சுமந்தேனே
உயிரை உருவி வேற்று பூமிக்கு
அனுப்பித் தொலைத்தேனா?//

பாசம்மிக்க தாயின் தவிப்பு நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

There is no word to explain...

wonderful mam.

thank you so much..

தாயின் தவிப்பு அனுதினமும் அனுபவிப்பது பதிவாய் பகிர்ந்தது அருமை.

//உயிரை உருவி வேற்று பூமிக்கு
அனுப்பித் தொலைத்தேனா?
ஆனால் நீ மட்டும்.......?//

காலந்தோறும் இருக்கும் ஏக்கமே!good

மளெனம்

வெரிகுட்

உயிரை உருவி வேற்று பூமிக்கு
அனுப்பித் தொலைத்தேனா?
ஆனால் நீ மட்டும்.......?

தாய்மையின் வாடலுடன் கூடிய தேடல்
மனம் கனக்கச் செய்கிறது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

தவிப்புதான் பிரகாஷ். நன்றி.

தனித்துவிடப்பட்ட ஒரு தாயின் வார்த்தைகளை கவிதையாக எழுதினேன். உண்மை எப்போதுமே நெஞ்சை கனக்க செய்யும். நன்றி திரு.மகேந்திரன்.

கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்.

பாராட்டிற்கு நன்றி சார்.

நன்றி சிவா.

கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி

கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்.

வாங்க ஆச்சி. வணக்கம். நன்றி.

வணக்கம். நன்றி திரு,சி.பி

விளக்கமான கருத்துரைக்கு நன்றி ரமணி சார்.

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் அம்மா.//வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

தாய்மையின் தனிமைத்துயரைப் பதிவு செய்ய வார்த்தைகள் உங்களுக்குக் கிடைத்தது நீங்கள் பெற்ற வரம். மனதின் நெகிழ்வு வரிகளில் நிலைத்திருக்கிறது. பாராட்டுகள் சாகம்பரி.

ஒரு தாயின் துயரை பதிவு செய்ய நினைத்தேன் கீதா. அது சரியாக வரையறுக்கப்பட்டுள்ளது என்பது தங்களின் கருத்துரையில் புரிகிறது. நன்றி.

thaimaye