மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


வெற்றியோ....! தோல்வியோ.....!
ஏனோ சில சிறிய பயணங்களை
உலகம் கவனப்படுத்துவதில்லை!


மழைவிட்ட  பகல் வேளையில்
சாலையை கடக்க யத்தனிக்கும்
இரயில் பூச்சியின் முயற்சியாக
வாழ்க்கையின் மறுபக்கம் தேடிட
ஊர்தலின் வேதனை தொடங்கியது.
விதவிதமான சக்கரங்கள் உருள
உராய்வின் சூடு பரவி பதிந்த
பாதையில் பயணம் ஆரம்பித்தது.

அது மறுபக்கம் சேர்ந்திடலாம்...
ஆற்றங்கரையோர நாகரிகமாக
புதிய வாழ்விடம் சேரலாம்..!
அல்லது
ஒரு அசூசையான பொருளாக
சக்கரத்தில் ஓட்டி கொண்டு
வாழ்நாளின் பாதியிலேயே
முற்றும் போட நேரிடலாம்!
மற்றொரு மழை நாளிலோ,
வாகனத்தை கழுவும்போதோ,
எஞ்சிய பாகங்கள் கிட்டலாம்
அல்லது
மறுபக்கம் சென்று சேர்ந்ததும்
யார் பார்வையிலும் படாமல்
பூமியினுள் புதைந்திருக்கலாம்.

எதுவானாலும்....
தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன.


26 comments:

தமிழ்மணத்தை 0/0 லிருந்து 1/1 ஆக நானே ஆக்கிவிட்டேன்.

மரவட்டை என்ற அந்த ரயில் பூச்சிபோலவே அழகான கவிதை.
அது அழகாக பயணத்தைத் தொடரும். சமயத்தில், தீபாவளி தரைச்சக்கரம் போல சுருண்டு கொள்ளும்.

அது தன் பயணத்தில் சாலையின் மறுபக்கத்தைக் கடப்பதற்குள் அதற்கு இப்படி ஆகலாம், அப்படி ஆகலாம் என்ற தங்களின் கற்பனை வரிகள் வெகு அருமையாக உள்ளன.

இதுபோன்ற சாதாரண சாமானிய பயணங்களையும் உற்று நோக்கி ரசிக்க நம்மைப்போன்ற ஒரு சில குழந்தைமனம் படைத்தவர்களாலேயே இயலும்.

நல்லதொரு பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

//தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன.//

ஆமாம்.நல்ல கவிதை.

''...தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன...''
ஆமாம் அந்தத் தேடல் இன்றேல் அனைத்துமே சப் பென்று ஆகிவிடும். வாழ்த்துகள் சகோதரி.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

வாழ்வின் சுவையை கூட்டச் செய்யும் ஒரு விஷயம் தேடல்.
இருப்பதைக்கொண்டு இருந்த இடத்தில் வாழ்வதாலும் தேடல் என்பது
வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு செயல்.
ஒவ்வொரு செயலும் அடுத்த ஒன்றை தேடியே நடக்கின்றன.

அழகிய பதிவில் வாழ்வியல் கூறுகள்.
நன்றி சகோதரி.

தமிழ்மணம் 3

melliya unarvuaklai winaivupaduththum alakaana kavithai

மனம் பயணிக்கும் வரை வாழ்வில் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எதுவானாலும்....
தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன.//அழகிய பதிவில் வாழ்வியல் கூறுகள்.

தேடலின் நிமித்தம் வாழ்க்கையைத் தொலைக்கவும்கூடும். ஆயினும் ஒரே இடத்தில் ஸ்தம்பித்திருப்பதால் யாருக்கு லாபம்? உச்சி வெயிலில் சாலை கடக்கும் ரயில் பூச்சியின் முயற்சி நல்லதொரு உதாரணம். வழக்கம்போலவே வாழ்வியலை அநாயாசமாகச் சொல்லிச் செல்கிறது கவிதை.

தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன./

அருமையான நோக்கத்தை வடித்தெடுத்த
அற்புதமான கவிதைக்குப் பாராட்டுக்கள்>

தேடல் குறித்த உங்கள் தேடல்
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

த.ம 6

அருமை

இரயில் பூச்சியை ஒரு சிறிய முயற்சிக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டேன் சார். எப்போதுமே கவனித்துப் பார்த்தால் பெரிய மாற்றங்களை வாழ்க்கையின் கீழ்படியில் உள்ளவர்கள்தான் செய்கிறார்கள். உயர் நிலையை அடைந்துவிட்டோர்கள் புதிய முயற்சிகளை எடுக்கத்தயங்குகிறார்கள். ஏனெனில் உலகம் கவனிக்கும் இடத்தில் இருந்து இறங்கிவிடுவோமோ என்ற பயம்தான். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள்தான் புதிய மாற்றங்களை உருவாக்குகிறார்கள். நன்றி சார்.

நல்ல கவிதை. //மிக்க நன்றி திரு.சண்முகவேல்

ஆமாம் அந்தத் தேடல் இன்றேல் அனைத்துமே சப் பென்று ஆகிவிடும். வாழ்த்துகள் சகோதரி.
வேதா.இலங்காதிலகம்.//தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம்.

அழகிய பதிவில் வாழ்வியல் கூறுகள்.//நன்றி சகோ.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆச்சி.

மிக்க நன்றி ராஜி

வாங்க மாலதி. கருத்திற்கு நன்றி.

அருமையான நோக்கத்தை வடித்தெடுத்த
அற்புதமான கவிதைக்குப் பாராட்டுக்கள்// கருத்திற்கு நன்றி தோழி. இராஜராஜேஸ்வரி

தேடலின் நிமித்தம் வாழ்க்கையைத் தொலைக்கவும்கூடும். ஆயினும் ஒரே இடத்தில் ஸ்தம்பித்திருப்பதால் யாருக்கு லாபம்? // உண்மைதாண் கீதா, நகர்தல் வாழ்க்கையின் அடிப்படை. அருமையாக கருத்து பதிந்தற்கு நன்றி.

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.

வணக்கம் சார். முதல் வருகைக்கும் பாரட்டியதற்கும் நன்றி திரு.சர்வாகன் சார்.

"எதுவானாலும்....
தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன."
அருமையான வரிகள்...

//
எப்போதுமே கவனித்துப் பார்த்தால் பெரிய மாற்றங்களை வாழ்க்கையின் கீழ்படியில் உள்ளவர்கள்தான் செய்கிறார்கள். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள்தான் புதிய மாற்றங்களை உருவாக்குகிறார்கள்//

உண்மை யோசிக்க வைக்கிறது.