மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

திருமணம் என்ற ஒரு திட்டத்தை கண்டுபிடித்த புண்ணியவானே பிரமிக்கும் அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றது. அதனை முக்கியத்துவம் பெற வைத்தவர்கள் 'ஆண்கள்' மட்டும் அல்ல, பெண்ணை பெற்ற பெண்களும்தான். முதலிலேயே சொன்னபடி பெண் ஒரு போகப்பொருளாக கருதப்பட்டமையால் பயன் இருக்கும்வரை உபயோகித்துவிட்டு அழிக்கப்படும் பொருளானாள்.  

குடும்பம் என்ற பரிணாம வளர்ச்சி பெண்களையும் ஒரு படி மேல் கொண்டு சேர்த்தது. காதல் என்ற வார்த்தை பலப்படுத்தப்பட்டு ஜென்ம ஜென்மமாக தொடரும் உறவாக மாற்றப்பட்டது. அதன்பின் நல்லபடியாக 'அனுப்பி வைப்பது'வரை கணவன் மனைவிக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அவை சுகமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அப்போதெல்லாம் வரதட்சினையெல்லாம் கிடையாது. பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை தரக்கூடிய பரிசோதனைகள் மட்டும் நடக்கும். அவன் தேர்வு செய்யப்பட்டால் பெண்ணை கரம்பிடித்து அழைத்துச்செல்லவேண்டியதுதான். மனைவிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது அவரவர் தகுதியை பொறுத்தது. 
    
இதிலும் பெண்கள் வஞ்சிக்கப்படுவதாக தோன்றியது. இன்னும் சங்கிலிப் பிணைப்பை இன்னும் சற்று இறுக்க எண்ணி, பாசம் என்ற வார்த்தையை முன் வைத்து பெண்ணை திருமணம் செய்து தரும்போது அவளுடன் பொருட்கள் தந்தனுப்பும் பழக்கமும் வந்தது. ஒருவேளை அவள் கைவிடப்பட்டாலோ ஆதரவற்று போனாலோ, இவை அவளுக்கு உதவும் என்ற எண்ணமும்தான் இதனை செய்தது. இப்படியாக குடும்பம் அமைக்கும் செலவுகள் ஆணின் கையிலிருந்து பெண்ணிற்கு மாற்றப்பட்டன. புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்ணும் சங்கடம் ஏதுமின்றி தன்னுடைய பொருட்களை உபயோகித்து வாழப் பழகிக் கொண்டாள்.- ஒவ்வொன்றிற்கும் தடுமாறிக் கொண்டிருந்தால் எதையுமே செய்யத் தெரியாதவள்  என்று அவளை குறைத்து மதிப்பிடும் வாய்ப்பு வந்துவிடலாம் அல்லவா? 'எத்தகைய சிறப்பான பெண் என் மனைவி' என்ற பெருமிதம்தான் ஆணை கட்டிப்போடும் தந்திரம் என்பதும் இதன் ரகசியம் ஆகும். இப்படியாக வரதட்சினை உள்ளே புகுந்தது. 

இப்போது சில கேள்விகளுக்கு விடை கிட்டியிருக்கும்.
1. திருமணம் முடிந்தபின் பெண்தான் கணவன் வீட்டிற்கு செல்கிறாள் (ஆரம்பத்தில் 'கவர்ந்து' கொண்டு சென்ற பழக்கம்தான்)
2. இப்படி பெண் இடம் மாறிவிடுவதால் வயதானவர்கள் ஆண்களின் பராமரிப்பில் இருந்தனர். எனவே பெற்றோரை காக்கும் பொறுப்பு ஆண் மகனை சேர்ந்தது.
3. ஆண் குழந்தை இல்லாதவர்கள் உறவிலேயே பிள்ளைகளை தத்தெடுக்கும் பழக்கம் வைத்துக் கொண்டனர். வாரிசு என்ற உரிமை தந்தனர்.
4. பெண் எந்த கவலையுமின்றி முழு மனதோடு கணவன் வீட்டில் ஒரு மகாராணியைப் போல மதிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணமே வரதட்சினையின் ஆரம்பம்.
5. நுட்பமான அறிவுடைய பெண் இனம் அறிவில் சிறந்து விளங்கி கணவனுக்கு தகுந்த ஆலோசனைகள் கூறி பொறுப்புமிக்க சமுதாயத்தை உருவாக்கியது. இதற்கு அழியாத உண்மை வரலாறுகளை தன்னகத்து பதிந்துள்ள பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய சான்றுகள் உள்ளன.

இதெல்லாம் ஆரம்ப கால சிந்தனைகள்....

.திருமணம் என்பது - தலைவனும் தலைவியும் ஒருவர்மேல் மற்றவர் கொண்டிருந்த நம்பிக்கை மட்டுமே. அதுதான் எல்லாவற்றி
ற்கும் அடிப்படையான அன்பை தந்தது. அந்த நம்பிக்கையின் அளவீடுகள் மாற்றப்பட்டதன் விளைவே விவாகரத்து.

     

எப்போதெல்லாம் திருமணத்தின் அடிப்படை மறுக்கப்படுகிறது.. தவிர்க்க இயலாத காரணங்களாக இவற்றை கூறலாம்.
1. மனநிலை சரியில்லாதவர் - இதில் சைக்கிக் டிஸாடர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
2. குழந்தை பெறத் தகுதியில்லாதவர் (இதில் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
3. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை கொண்டிருப்பவர்.



விவாகரத்து - சமீப காலங்களில் அது நிகழும் எண்ணிக்கையினால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அது நிகழ்த்தும் பின் விளைவுகளினால் முக்கியத்துவம் பெறுகிறது. இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கிறது என்றும் சொல்லலாம்.  கலாச்சாரம் பற்றி பேசும்போது சமூகத்தின் பெரும்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால்தான் முக்கியத்துவம் பெறும். மாற்றங்கள் சிறு அளவில் இருக்கும் போது பாதிப்பு ஏற்படுவதில்லை.  இதற்கான  சட்டதிட்டங்கள் உருவாகும் முன்பே இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கிராம பஞ்சாயத்து, குடும்பப் பெரியவர்கள், முக்கியமான சொந்தங்கள் இவர்களின் முன்னிலையில் மணமுறிவு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களால் மட்டுமே அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.  இப்போது ஏன் கவலைப்பட வைக்கின்றன எனில் சமூகத்தின் நகர்வுகளை மாற்றியமைக்கக்கூடிய நடுத்தர குடும்பங்களில் இவை அதிகரித்துள்ளதால்தான். 
                 

ஏன் இந்த வளர்சிதை மாற்றம் ஏற்பட்டது? அடுத்த பகுதியில் பெண்கள் சார்ந்த சூழ்நிலைகளை பார்க்கலாம்.

 

19 comments:

தவிர்க்க இயலாத காரணங்களிருந்தும் சூழ்நிலை காரணமாக பல குடும்பங்களில் விவாகரத்து என்பது ஒரு கெட்ட சொல்லாகவே கருதப்பட்டு வந்தது ஒரு காலம். இப்போதோ... காலையில் உருவாகி மாலையில் மறையக்கூடிய சாதாரண மனத்தாபங்களுக்கே விவாகரத்து வரை செல்வது வேதனைக்குரிய செய்தி. நூறு சதம் மனமொத்து வாழ்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் வாழும் வாழ்க்கையில்தான் அன்பு வலுப்படுகிறது. நல்ல ஆரோக்கியமான சூழல் வீட்டிலும் மனதிலும் நிலவுகிறது. குழந்தைகளுடைய வாழ்க்கையும் காப்பாற்றப்படுகிறது.

ஒரு வலிமையான பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளீர்கள். உங்கள் அலசல்களின் முடிவில் இப்பிரச்சனைக்கு ஒரு வலிமையான தீர்வும் கிடைக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள் சாகம்பரி.

//சமூகத்தின் நகர்வுகளை மாற்றியமைக்கக்கூடிய நடுத்தர குடும்பங்களில் இவை அதிகரித்துள்ளதால்தான்//

மிகவும் சரி.சொல்லப் போனால் பதிவின் மையக் கருத்து இதில்தான் அமர்ந்திருக்கிறது.

பதிவு நன்றாகவே நகர்த்தப்படுகிறது. பாராட்டுக்கள்.

பதிவின் நீளத்தை இன்னும் சற்றே குறைத்து மீதியை அடுத்தப்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.

மேலும், ஒரு நாளாவது இடைவெளி விட்டு அடுத்த பகுதியை வெளியிடலாமோ என்றும் தோன்றியது.

தங்கள் செளகர்யப்படி செய்யவும். No Problem.
[Just my feeling & Suggestion only.]

தமிழ்மணம்: 2 அன்புடன் vgk

படங்களின் இணைப்பு பதிவுக்கு கவர்ச்சி தருவதாக உள்ளது.

இது தெரியாமல் [அதாவது எப்படி இணைப்பதே என்று தெரியாமல், பிறரையும் கேட்டு தெரிந்து கொள்ள வெட்கப்பட்டு], என் முதல் நூறு பதிவுகளில் எந்தவித கவர்ச்சிகளும் இல்லாமலேயே எழுதி வந்ததை, நான் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதுக்குள் சமயத்தில் வருத்தம் ஏற்படுவது உண்டு.

vgk

இனிதான் இருக்கிறது முக்கிய விஷயம்,தொடருங்கள்.

ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க... பரிணாம வளர்ச்சியில் முன்னேறியது மனிதன் மட்டுமல்ல, அவன் ஏற்படுத்திய சம்பிரதாயங்களும் தான்...தொடர்ந்து படிக்க ஆவலாய் இருக்கிறேன்... நன்றி

அப்போதெல்லாம் வரதட்சினையெல்லாம் கிடையாது. பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை தரக்கூடிய பரிசோதனைகள் மட்டும் நடக்கும். அவன் தேர்வு செய்யப்பட்டால் பெண்ணை கரம்பிடித்து அழைத்துச்செல்லவேண்டியதுதான்.
>>>
அந்த காலம் திரும்ப வருமா? சகோதரி.

தம 4

முன்பு வீரத்தால் கவர்ந்து கொண்டு போனவன்
இன்று ஏமாற்றி கவர்ந்து கொண்டு போகிறான்
எனச் சொல்லத் தக்க அளவு
நிறைய காதல் என்கிற போர்வையில் பெண்
அதிகம் ஆண்களால் ஏமாற்றப்படுகிறாள்
முறைப்படியான திருமணம் எனில்
ஆணின் பெற்றோர் வரதட்சனை சீர் என்கிற பெயரில்
பொருளைக் கவர்கின்றனர்
எப்படியோ நீங்கள் குறிப்பிடுகிறபடி கவர்தல் மட்டும்
வேறு வேறு ரூபங்களில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது
சிந்தனையை தூண்டிப் போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

த.ம 5

அருமையான பதிவு தொடருங்கள்...நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

அருமையான பாகம். திருமணம் ஆண்களுக்கா? பெண்களுக்கா?
திருமணம் முடிந்ததும் யாரை சார்ந்து செல்வது?
பதில்களை பகிர்ந்த பின்னர் கேள்விகளை தொகுத்துள்ளீர்கள். நன்று.



லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

தங்களை தனிமடலில் தொடர்பு கொள்வது எப்படி? எனக்கு உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது.

ஒவ்வொன்றிற்கும் தடுமாறிக் கொண்டிருந்தால் எதையுமே செய்யத் தெரியாதவள் என்று அவளை குறைத்து மதிப்பிடும் வாய்ப்பு வந்துவிடலாம் அல்லவா? 'எத்தகைய சிறப்பான பெண் என் மனைவி' என்ற பெருமிதம்தான் ஆணை கட்டிப்போடும் தந்திரம் என்பதும் இதன் ரகசியம் ஆகும். இப்படியாக வரதட்சினை உள்ளே புகுந்தது.

நிதர்சனமான அலசல்.. பயனுள்ள பகிர்வு.. பாராட்டுக்கள்..

மிக்க நன்றி கீதா.

நன்றி ராஜி

மிக்க VGK Sir நன்றி

மிக்க நன்றி திரு.சண்முகவேல்.

கருத்துரைக்கு நன்றி அப்பாவி தங்கமணி.

வருகைக்கு நன்றி ராஜி.

தங்கள் கருத்தும் சரிதான் ரமணி சார்.


நன்றி திரு.தனபாலன்


நன்றி திரு.பிரகாஷ்.

மிக்க நன்றி தோழி.

o Anonimus,

தற்சமயம் என்னுடைய மெயிலும் பிளாக்கரும் சிறிது பிரச்சினை தருகிறது. என்னால் பயன்படுத்த முடியவில்லை. அதனால் என்னுடைய ப்ரொஃபைலை தற்காலிகமாக எடுத்துள்ளேன். இரண்டொரு நாளில் சரியாகிவிடும். அடுத்த பதிவுடன் ஐடியை தருகிறேன். தாங்கள் தொடர்பு கொள்ளமுடியும். அதுவரை மன்னிக்கவும்.

இரண்டாம் பாகத்தில் நீங்கள் அலசிய அன்பு.. பாசம்.. பிணைப்பு போன்ற விஷயங்கள் வேறுவிதமாக திரிந்து.. பெற்ற பெண் வேறு இடத்திற்கு தீர்மானமாகி செல்கையில் அவள் எந்தவித சூழ்நிலையிலும் தரித்திரத்தை தழுவிவிடக் கூடாதென எண்ணி பெண்ணைப்பெற்றவர் பொருட்கள் கொடுத்தனுப்ப ஆரம்பித்ததிலிருந்து வரதட்சணை ஆரம்பமானது என அழகாய் கூறினீர்கள்..
இதற்கும் கலாச்சாரம் தான் காரணம் என எனக்குப் படுகிறது.. தாய்,தந்தை,தாய்மாமன்,இப்படியெல்லாம் நம் கலாச்சாரத்தில் தான் இருக்கிறது..இப்படியான உறவுகள் அந்தப் பெண்ணின் வாழ்நாள் முழுவதும் எல்லா சம்பவங்களிலும் கூட வந்து அவளுக்கு ஒரு பாதுகாப்பு அரணையே உண்டுபண்ணுகிறது.. இது மற்றைய ஏனைய கலாச்சாரங்களில் காணப்படவில்லையே..
ஆரம்ப காலகட்டங்களிலிருந்து ஆணாதிக்கம் மேலோங்கி காணப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை.. மறுக்கமுடியாதது.. பெண்களை வீட்டிலேயே அமுக்கி வைத்து வீட்டரசி ஆக்கி வைத்ததெல்லாம் அதனால் தான்..
திருமணத்தின் ஆரம்பமும் அதன் வளர்ச்சியும் ..முறிந்து விவாகரத்து என்ற விளைவுக்கு செல்வதும் என இயைபாக கொண்டு செல்கிறீர்கள்..
அடுத்து காத்திருக்கிறேன் கருத்துக்களுக்காய்...

வாழ்த்துக்கள், நன்றாக எழுதியுள்ளிர்கள். தொடருங்கள் .ஆனாலும் எனக்கு மாற்று கருத்துக்கள் உள்ளன. காலம் இல்லாததால் பின்னர் தெரிவிக்க அனுமதிப்பீர்கள் என எண்ணுகிறேன்!

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-