தாக்குதல்...
இதற்கு மறுபெயர்கள்
அகலி-
அதிகாரத்தை அல்லது உரிமையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது,
இறாஞ்சு
– உணவிற்காக நடத்தப்படுவது,
இருட்டடி-
அடிப்பது யார் என்றே தெரியாமல்
நடத்தப்படுவது,
நெத்தியடி-
அவமானப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுவது,
இரத்தவெறி
–ஒருவரை கொல்லும் நோக்கில் நடத்தப்படுவது.
கணவன் மனைவியை
அடிப்பது… அம்மா குழந்தையை அடிப்பது.. காவலர்-
பொதுமக்கள் அல்லது போராடுபவர்- காவலரை அடிப்பது… எதுவாக இருந்தாலும் ஒருவரை மற்றொருவர்
தாக்குவதற்கு காரணம் சொல்லலாம், ஆனால் ஒரு நாகரிகமிக்க சமுதாயத்தில் இதனை நியாயப்படுத்த
முடியாது. வீட்டு விலங்குகளைக்கூட அடிக்காமல் அன்புடன் பெயர் வைத்து உறவு வைத்து அழைக்கும்
தமிழ் சமுதாயம், கை நீட்டி அடிக்கும் உரிமையை யாருக்கும் தரவில்லை.
சமீபத்திய வாட்ஸ்-அப் காணொலிகள் வருத்தப்படுத்தும்
நிகழ்வுகளை காட்டுகின்றன. தினம் ஒரு காட்சி…
அதில் அகலியும் இரத்தவெறியும்தான் தெரிகிறது. யார் யாரை அடித்தார்கள் எனபதைவிட…
ஒரு விசயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. அந்த சூழ்நிலையில் வலிமையாக இருப்பவர் கை ஓங்க
எதிர்க்கும் திராணியில்லாமல் தனியே மாட்டியவர்கள் தாக்கப்படுகிறார்கள் – சில சமயம்
கொலைவெறிகூட தெரிகிறது….
அதை போட்டி போட்டுக்
கொண்டு நியாயப்படுத்தும்போது… கொஞ்சம் கொஞ்சமாக நாம் மனிதத்துவத்தை இழந்து வருகிறோமோ
என்ற பயம்கூட வருகிறது. இனிவரும் நாட்களில் நம்முடைய பாதுகாப்பு என்ன? பற்றிய பயமும்
வருகிறது. எனவே மனிதத்துவத்தின் எல்லைகளை தாண்டும் தாக்குதல்களை யார் யார்மீது நடத்தினாலும் அதனை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றே
எனக்குத் தோன்றுகிறது.