மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

     ஒரு நாள் குட்டி கிருஷ்ணர் இராமயணக் கதையை கேட்டுக்கொண்டிருந்தார். அதாவது தன்னுடைய கதையை இன்னொரு முறை வாய் மொழியாக கேட்டுக்கொண்டிருந்தார். அந்த கதையின் நியாய தர்மங்கள் அத்தனையும் அவருக்கு தெரிந்திருந்தாலும், வெளியில் குட்டி கிருஷ்ணர் குழந்தை மனதுடன் கேட்டுக் கொண்டிருந்தாரம். சீதையை ராவணன் கடத்திய கட்டத்தில், தன்னிலை மறந்து வெகுண்டு " லட்சுமணா எடு வில்லை" என்று வீர முழக்கமிட்டாராம். இந்த கதையை படித்த போது எனக்குத் தோன்றியது என்னவெனில், இறைவன் தன்னிலை மறப்பானா என்ன? இல்லை, சூழ இருப்பவர்களுக்கு இதுவும் ஒரு உபதேசமா? ஒரு அதர்மம் நடக்கும் போது, காண சகிக்காத குணம்தான் முழு வீச்சில் வெளிப்பட்டதா? இதற்கு பல விளக்கங்கள் சான்றோர் தந்திருந்தாலும் இதையும் ஒரு கருத்தாக முன்வைக்கிறேன்.

    ஈஸ்வர் சந்தர் வித்யாதர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவ்வப்போது நாட்டின் சுதந்திரத்தின் தேவையை தன் கருத்துக்களால் வலியுறுத்துவார். அவரை ஆங்கிலேயர்கள் பழிவாங்க எண்ணி விருந்திற்கு அழைத்தனர். விருந்து ஆரம்பிக்கும் முன் வெள்ளித்தட்டில் பட்டுத்துணி போர்த்தி பரிசளித்தனர். அதனை திறந்து பார்த்தால் அவருடைய ஒரே மகனின் தலை அதில் வைக்கப்பட்டு இருந்தது. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத அவர் பரிசிற்காக நன்றி கூறி அமைதியாக விருந்தை உண்டு கிளம்பினார். உடன் வந்தவர்களுக்கோ அதிர்ச்சி, எப்படி இவ்வாறு இருக்க முடிந்தது என்று. " என் மகனின் நிலை எனக்கு பெரும் துயர்தான். ஆனால் அதனை பார்த்து நான் துடித்து கதற வேண்டும், அந்த காட்சியை பார்த்து மனம் மகிழ வேண்டும் என்று காத்திருந்தனர். அப்படி ஒரு வெற்றியை நான் அவர்களுக்கு தரவிரும்பவில்லை. அதனால்தான் அமைதியாக இருந்தேன்" என்று கண்ணில் நீர் வழிய கூறினார். இங்கும் ஒரு அநீதீ நடந்தது அதற்கான வெளிப்பாடு மாறிப் போனது.

    பொதுவாக உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலையில் ஒருவரது உணர்ச்சி வெளிப்பாடு, சுற்றி இருப்பவர்களின் பொருட்டு மாறுமா?. நமக்கென்று ஒரு வெளிப்பாடு இல்லையா?. நமக்கு நம்பிக்கையானவர்கள் முன்னிலையில் நாம் முழுவதுமாக நம்மை வெளிப்படுத்துவோம் என்பது மெய்யா? அப்படியெனில் நம் முன் சூழ் நிலைக்கு ஏற்ப முழுவதுமாக ரியாக்ட் செய்பவர்கள் நம்மை நம்புகிறார்கள் என்று பொருளா? கண்ணில் நீர் வழிய பேசுதல், கோபத்தின் ஒருவகை வெளிப்பாடா? அல்லது இயலாமையா? எனக்காக ஏதாவது செய்ய மாட்டாயா என்ற எதிர்பார்ப்பா? ஒரு வேளை இதனை ஆராய முடிந்தால் நம்மால் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கும் நமக்குமான உறவினை சரியாக அளவிடமுடியுமா? இதனை புரிந்து கொண்டால் உறவுகளின் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முடியுமா?

                                                           -  அடுத்த பதிவில் முயற்சிக்கலாமா?

தன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்.- 2

 

13 comments:

ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடு சுற்றி இருப்பவர்களைப்பார்த்து மாறும்தான். நமக்கென்று ஒரு வெளிப்பாடும் உண்டுதான்.இடம் காலம் நேரம் அறிந்து மாறுபடும்தான் நம் உணர்ச்சி வெளிப்பாடு.
அதுபோல கண்னில் நீர்வழியப்பேசுதலும் கோபத்தின் வெளிப்பாடுதான்.சில நேரங்களில்.

அருமையான பதிவு
சுயக்கட்டுப்பாடு அல்லது
சம நிலை தவறாது இருப்பின்
நம்மை முழுமையாகக்
கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும்
ஆனால் அந்த பக்குவத்தை
அடைவதற்கான வழி ?...
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

// என் மகனின் நிலை எனக்கு பெரும் துயர்தான். ஆனால் அதனை பார்த்து நான் துடித்து கதற வேண்டும், அந்த காட்சியை பார்த்து மனம் மகிழ வேண்டும் என்று காத்திருந்தனர். அப்படி ஒரு வெற்றியை நான் அவர்களுக்கு தரவிரும்பவில்லை. அதனால்தான் அமைதியாக இருந்தேன்" என்று கண்ணில் நீர் வழிய கூறினார். இங்கும் ஒரு அநீதீ நடந்தது அதற்கான வெளிப்பாடு மாறிப் போனது.//]


அருமையா சொல்லி இருக்கீங்க....

ஸ்திதப் பிரக்ணன்?

ஆழ்ந்த அலசல் அனால் ஆரோக்கியமான அலசல்.
நம்மைப் புரிந்து கொள்பவர்கள் முன்னிலையில்தான் நம் உணர்வுகளை
முழுமையாக வெளிப்படுத்த இயலும்

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்:செவ்வாய் பெண்கள் சரமாக!

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். லிங்கை பார்க்கவும்:
செவ்வாய் பெண்கள் சரமாக!

//ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடு சுற்றி இருப்பவர்களைப்பார்த்து மாறும்தான். நமக்கென்று ஒரு வெளிப்பாடும் உண்டுதான்.இடம் காலம் நேரம் அறிந்து மாறுபடும்தான் நம் உணர்ச்சி வெளிப்பாடு.// இது பற்றிதான் மேலும் பேசப்போகிறோம், மேடம். நன்றி.

வணக்கம் திரு.ரமணி. இன்னும் கொஞ்சம் கூடவும் சிந்திக்கப்போகிறோம். நன்றி.

நன்றி திரு.மனோ

எனக்கு சமஸ்கிருதம் அவ்வளவு பரிட்சயம் இல்லை. நிஷ்டை போன்றவற்றில் குழம்பிவிடுவேன். உறுதியான மன நிலை இல்லாதவன் என்ற அர்த்தமா? சரியென்றால் பூர்வஜென்ம நினைவு என்றுதான் கொள்ளவேண்டும். நன்றி திரு.எல்.கே

நாம் இன்னும் சிந்திக்கப்போகிறோம், எடுத்துக்காட்டு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. / as per Raji's request. Thank you.

நன்றி திரு.பிரகாஷ். பார்த்துவிட்டேன்.