மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

ஆகாஷ், லைலா,மாலா
   புயலுக்கு   மனுச பெயர்கள்
சில மனுசங்களுக்கு.........?
    பெயராக இல்லாவிடினும்
பிரசன்னமாகும்போது ...
     சூறைக்காற்று, சுனாமி என
நிலம் நடுங்கித்தான் போகிறது.
     உயிர் செயலற்று போக
விடுபட்ட சிதிலங்களை
     இணைக்கும் முயற்சியில்

விக்ரமாதித்தனாய் நான்
     கேள்விகளுடன் வேதாளம்
வாயை திறந்த போதில்
     சிலையென என்னை நிறுத்தி
தலைகீழாக தொங்கியது
     எக்காளமிட்ட வேதாளம்.
தலை வெடித்து சிதறாமல்
     காப்பாற்றிக் கொண்ட நான்....
நிலச்சுமையென......

4 comments:

ஹேய் அசத்தலான கவிதை....

நன்றி, திரு.மனோ

புயலுக்கு மனுச பெயர்கள்
சில மனுசங்களுக்கு.........?
சரியான கணிப்பு.

நன்றி,இராஜராஜேஸ்வரி