நல்லது, இப்போது என்ன விசயம் என்கிறீர்கள்தானே?. இந்த வாரத்தில் எனக்கு இரண்டு அங்கீகாரம் கிடைத்துள்ளன.
1. என்னுடைய மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆசிர்வதித்து தரப்பட்ட versatile blogger விருது.
2. எனக்கு மிகவும் பிடித்த கீதமஞ்சரி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான தோழி.கீதா அவர்களால் பிரியமுடன் தரப்பட்ட liebster விருது.
இவை இரண்டையும் நான் மிக மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதுடன் நிற்காமல், எனக்குப் பிடித்த இளம் பதிவர்களுக்கும் தரமுடியும் என்பதே கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு நிறைய வலைப்பூக்களை பிடிக்கும், மிகவும் பொறுப்புடன் மன நிறைவுடன் எழுதும் நிறைய பேரை எனக்குப் பிடிக்கும். ஒலிம்பிக் ஜோதி யார் யாரால் ஏந்தப்படும் என்பதை அதனுடைய பயணப்பாதை தீர்மானிக்கிறது. அதுபோல, என்னால் சிலருக்கு மட்டுமே தரக்கூடிய இந்த விருதுகள், என்னுடைய லிஸ்டில் இருக்கும் விடுபட்ட மற்றவர்களுக்கும் கிட்டும் என்று நம்பிக்கையுடன் இதனை வழங்குகிறேன்
1. THE VERSATILE BLOGGER AWARD
இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நன்றி சார். இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து பதிவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.
எனக்குப் பிடித்த விசயங்கள்.
வாசிப்பது, கற்பது கற்பிப்பது, இசை கேட்பது, அமைதியான இடங்களை நாடுவது, கடற்கரையின் குளுமை மலைப் பாதை பயணங்கள், குழந்தைகளுடன் விளையாடுவது.
1. தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் தமிழ்வாசி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.
2. வாழ்வியல் கவிதைகள், சமூக பொறுப்புடன் கூடிய கதைகள், கட்டுரைகள் என்று பலதரப்பட்ட துறைகளிலும் பதிவுகளை கொண்டிருக்கும் மனசு வலைப்பூவிற்கு சொந்தக்காரரான பரிவை.சே.குமார்.
3. கட்டுரைகள், சுயதொழில் கட்டுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் என பல தரப்பட்ட பதிவுகளை பதிவு செய்யும் இளம் பதிவர் தங்கம் பழனி அவர்களுக்கு,
4. கவிதை, சிறுகதைகள் மூலம் சமுதாய பிரச்சினைகளை முன் வைக்கும் திரு.தமிழ் உதயம் அவர்களுக்கு,
5. சமையல், கோலம், அழகியல் குறிப்புகள் என்று பெண்களுக்கான அழகிய பதிவுகளை வெளியிடும் காணாமல் போன கனவுகள் ராஜி அவர்களுக்கு வழங்குகிறேன்.
2. Liebster விருது.
எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தோழி கீதமஞ்சரி கீதாவால் மகிழம்பூச்சரத்திற்கு (எனக்கு) வழங்கப்பட்டது. அவருக்கு திருமதி. ஸ்ரவாணி வழங்கியுள்ளார்கள். வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் அன்று வாழ்த்துகிறேன்.
1. மருத்துவக் குறிப்புகள், அக்கரையுள்ள பதிவுகள் என அழகான வலைப்பூவான் ஆழ்கடல்களஞ்சியத்திற்குசொந்தக்காரரான திருமதி.பிரபா தாமு அவர்களுக்கு,
2. என்னுடைய குட்டி குட்டி நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமூக நோக்குடன் கூடிய நீதிக் கதைகள் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான வலைப்பூ சிறுவர் உலகத்தின் திருமதி.காஞ்சனா அவர்களுக்கு
3. குழந்தைகள் பராமரிப்பு, சமையல் குறிப்புகள், பெண்கள் குறித்த கட்டுரைகள் இவற்றுடன் சமுதாய பிரச்சினைகளையும் பதியும் புதிய வசந்தம் வலைப்பூவிற்கு சொந்தக்காரரான ஆயிஷாபானு அவர்களுக்கு,
4. காரச்சாரமான விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் அவர்களுக்கு,
5. உணர்வுபூர்வமான கடிதங்கள், கவிதைகள் என அழகான மறக்க முடியாத நினைவுகள் வலைப்பூ சொந்தக்காரரான திரு.கவிப்பிரியன் அவர்களுக்கு
மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன். வாழ்த்துக்கள்.
இது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பிட்ட லோகோக்களை தங்களுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள்.