மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


    ஒரு இல்லம் உருவாவது 'அவள்' கையால்தான். அன்பு ஒன்றை மட்டும் நம்பி ஒருவன் கைப்பிடித்து வேறிடம் புகுந்து மூச்சையும் பேச்சையும் மாற்றி உயிர் சுமந்து இல்லத்தின் அடித்தளமாகும் 'அவள்' - யாரோ பெற்றார்கள் யாரோ பாராட்டினார்கள். யுகம் யுகமாக மண்ணையும் மரபையும் காத்து வாழ்ந்து மறைந்த 'அவள்', ஒவ்வொரு மனைவி உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேதான் இருக்கிறாள்.

   ஒவ்வொரு மணரத்தும் உண்மையிலேயே மனரத்தைதான் குறிக்கின்றன. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமே. இல்லத்தை பிரித்து போட்டு இருப்பதையும் இல்லாததாக்கி செல்வது மனைவி நினைத்தால்தான் முடியும்.


நேற்றுவரை மென்மையாக
கடலுக்கு சென்ற தென்றல்
புயலாக மாறியிருந்ததை
தரை தட்டிய ஒரு கப்பல்
சாய்ந்து நின்று சொன்னது
"புரிஞ்சுக்கவே முடியல"

அதேதான். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. முன்பெல்லாம் விவாகரத்து என்றால்  சில தவிர்க்கமுடியாத காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ளமுடியும்.  ஆனால் இப்போது நம்பமுடியாத காரணங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன.  பத்து பொருத்தங்கள் என்று சொல்லப்படும் காரணங்களின் அடிப்படையானது இந்த தவிர்க்க முடியாத காரணங்களை சுட்டுகின்றன உதாரணமாக கோபம் கொள்கின்ற குணம் எனில் சாந்தமாக இருக்கும் குணாதிசயம் பொருத்தமாக கருதப்படும்.  எதுவும் இல்லாமல் ஏன் இந்த மணப்பிரிவுகள். இதற்கு என்னவெல்லாம் காரணமாகிறது என்று பார்க்கலாம். 

1. பெண்ணின் வாழ்வியல் முறைகள் மாறிப்போனது.
2. பெற்றோரின் எதிர்பார்ப்புகள் திசைமாறியது.
3. நொடிகளையும் பேரம் பேசும்  பொருளாதாரம்
4. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு தரும் வாழ்வியல் சிந்தனைகள்.

     ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கலாம்.  எல்லா திசையிலும் அலசினால்தானே ஒரு முடிவிற்கு வரமுடியும். ஒரு விசயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்கள் வாழ்வியல் முறைகள் பற்றி குறிப்பிடவேயில்லை என்று தோன்றுகிறதுதானே. அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை. இந்தத் தொடரின் முடிவில் இதனை நிருபித்துவிடுவேன் என்று நம்புகிறேன். அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக...

28 comments:

இல்லத்தரசியால் மட்டுமே இல்லம் சிறப்புறும். பகிர்வுக்கு நன்றி.

இன்றைய சூழலில் அவசியம் விரிவாக அலசி
ஆராயவேண்டிய பிரச்சனை
நிச்சயமாக முடிவில் இதற்கான தீர்வு இதுதான் என
நிச்சயம் நிரூபித்து விடுவீர்கள்
ஆவலாகத் தொடர்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

தொடருங்கள்ஆர்வத்தைக்கூட்டும் ஆரம்பம்.

உங்கள் தீர்ப்பைக் காண ஆவலுடன் பகிர்வுக்கு நன்றி
கூறி அடுத்த பகிர்வில் சந்திக்கின்றேன் .சிறப்பாகத்
தொடர வாழ்த்துக்கள் சகோ ....

நீங்கள் சொன்ன 4 காரணங்களும் மிகச்சரியே . உங்கள் தீர்ப்பினை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தமிழ்மணம்: 6

நல்ல சுவாரஸ்யமான சப்ஜக்ட்

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்பார்களே! அதனால் தானோ என்னவோ இந்தத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் போலத் தெரிகிறது.

பதிவின் அளவு இதுபோல சற்று சிறியதாக இருந்தால் அனைவருமே ஆர்வமாகப் படிக்கக்கூடும். நேரமின்மையால் படிக்க அலுப்புத்தட்டாமல் உணர்வார்கள்.

இந்த முறையையே தொடர்ந்து பின்பற்றவும். தொடர் பகுதிகளின் எண்ணிக்கை சற்றே கூடுதல் ஆனாலும் கூட பரவாயில்லை.

பதிவிட்டவுடன் தங்களுக்கு சிரமம் ஏதும் இல்லையென்றால் எனக்கு மட்டுமாவது மெயில் மூலம் Just Link மட்டும் கொடுத்தீர்களானால் உடனே வருகை தர [அடிக்கடி மெயில் check-up செய்யும் பழக்கம் உள்ளதால்] ஏதுவாகும்.

டேஷ் போர்டுக்கு எப்போதாவது தான் போவேன். அதிலும் சில பதிவுகள் [என்னுடையதே கூட] தெரிவதில்லை.

மெயிலில் லிங்க் மட்டும் கொடுத்தால் போதும். வேறு எதுவும் எழுத வேண்டாம்.

சிரமமாக இருந்தால் you may please avoid this & ignore my request.

அன்புடன் vgk

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

என்னும் குறள் நினைவுக்கு வருகிறது. இன்றைய அவசர உலகில் அரைகுறையாய்ப்போன புரிதல்களும், அதன் காரணமாய் எடுக்கப்படும் அவசர முடிவுகளும் பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளன. அப்படி ஒரு நெருக்கடிக்குத் தள்ளப்படும் அல்லது தள்ளிக்கொண்டிருக்கும் மனங்களுக்கு நல்லதோர் தெளிவைத் தரக்கூடும் தங்களுடைய இந்தப் பதிவுகள். பாராட்டுகளுடன் வரவேற்கிறேன் சாகம்பரி.

//நேற்றுவரை மென்மையாக
கடலுக்கு சென்ற தென்றல்
புயலாக மாறியிருந்ததை
தரை தட்டிய ஒரு கப்பல்
சாய்ந்து நின்று சொன்னது
"புரிஞ்சுக்கவே முடியல"/////

மிக மிக மிக மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மேடம்

///அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை. இந்தத் தொடரின் முடிவில் இதனை நிருபித்துவிடுவேன் என்று நம்புகிறேன்///

இந்த இடத்திற்க்காக நான் மிகவும் ஆவலோடு காத்து இருக்கிறேன். ஒரு வேளை இங்கே முதல் முறையாக நாம் கருத்து வேறுபடுவோமோ என்று நினைக்கிறேன். ஆனாலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எப்போதும் மிக வலுவாக இருக்கும் என் எதிர்பார்க்கிறேன்.

>>ஆண்கள் வாழ்வியல் முறைகள் பற்றி குறிப்பிடவேயில்லை என்று தோன்றுகிறதுதானே. அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஒவ்வொரு மணரத்தும் உண்மையிலேயே மனரத்தைதான் குறிக்கின்றன. -மிகமிக உண்மையான வரிகள். சட்டம் மண விலக்கை மட்டும்தான் தர இயலும். பெண்களின் மனோபாவம் மாறியிருப்பதும், அரசு மது விற்க ஆரம்பித்ததில் நிறைய ஆண்களின் நடத்தைகள் மாறியதும்தான் விவாகரத்துகள் பெருகக் காரணம் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் சொல்வதைக் கவனித்து முடிவுக்கு வரலாம். நன்றி.

ஆழ்கடலில் முத்தெடுக்க கிளம்பிவிட்டீர்கள் போல சகோதரி..
அதைவிட சிரமமான விஷயத்தை கையிலெடுத்து விளக்கம் கொடுக்க முனைகிறீர்கள்.. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

வேறூரில் விதைக்கப்பட்டு
விதைகீறி செடியாகி
அதுபறித்து பின்னர்
வேறொரு நெஞ்சில் பதியப்பட்டு
வேரூன்றும் விருட்சத்தை

உங்கள் கருவாக எடுத்திருக்கிறீர்கள்..
போகின்ற போக்கில் கவனிக்கிறேன்...
விவாதத்தை பின்னால் துவக்குவோம்...

ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களை தங்களிடமிருந்து
பெருவாரியாக எதிர்பார்க்கிறேன்..

மிக்க நன்றி பிரகாஷ்.

கவுன்சிலிங் செய்தபோது கிட்டிய அனுபவங்களை வைத்து ஒரு பதிவை தொடர்கிறேன் சார். மிக்க நன்றி.

மிக்க நன்றி திரு.சண்முகவேல்.

மிக்க நன்றி அம்பாளடியாள். தொடர்ந்து வாருங்கள்.

மிக்க நன்றி ராஜி.

மிக்க நன்றி சார். கண்டிப்பாக லிங்க் தருகிறேன். தங்களுக்கு நேரம் கிட்டும்போது பார்த்து கருத்துரையிட்டால் போதும். இது போன்று தாங்கள் கூறியிருப்பது இந்த வலைபூவை கௌரவிக்கிறது சார். நன்றி

ஔவையுடைய பாடல் வரிகளை தலைப்பில் எழுதும் முன், நான் தேடியதும் இந்தக் குறளைத்தான். சந்தம் அழகாக வந்ததால் ஔவையின் வரிகள் வாய்ப்பு பெற்றன. என்னவொரு ஒற்றுமை. மிக்க நன்றி, கீதா.

ஔவையுடைய பாடல் வரிகளை தலைப்பில் எழுதும் முன், நான் தேடியதும் இந்தக் குறளைத்தான். சந்தம் அழகாக வந்ததால் ஔவையின் வரிகள் வாய்ப்பு பெற்றன. என்னவொரு ஒற்றுமை. மிக்க நன்றி, கீதா.

அதெல்லாம் கருத்து மாறுபாடு வராது ஏனெனில் என்னுடைய கருத்து சில விதிகளுக்குட்பட்டு மெய்யாகப் போகிறது. இயற்பியலில் ஒரு நிகழ்வை வரையறுக்கும்போது assume that அப்படியென்று ஒரு வார்த்தை சேர்ப்போமே, அது போல். நன்றி மதுரை தமிழன்.

என்ன ஆச்சு சிபி சார். இது உண்மைதான் என்று உங்களுக்கும் தெரியும்தானே. நன்றி சார்.

//அரசு மது விற்க ஆரம்பித்ததில் நிறைய ஆண்களின் நடத்தைகள் மாறியதும்தான் விவாகரத்துகள் பெருகக் காரணம் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். // இதனையும் கவனித்து தொடர்கிறேன் சார். மிக்க நன்றி.

ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களை தங்களிடமிருந்து
பெருவாரியாக எதிர்பார்க்கிறேன்.. //
ரொம்பவும் கவனப்படுத்துகிறீர்கள். மிக்க நன்றி சகோ.

பெண்மையின் சிந்தனைகள் கூட்டிலிருந்து விலகி தனித்துவமாகி விட்டது என்பதையும் காரணியாகக் கொள்ளலாமா மேடம்?

பகிர்வின் தொடர்வை விரைவில் எதிர்பார்க்கிறேன்
(நான் என்னவோ மெதுவாத்தான் படிச்சுட்டு கருத்து சொல்றேன்.இருந்தாலும் உள்வாங்குதல் மட்டுமே மகிழம்பூவிற்கு பிடிக்கும் என்ற பெருமையுடந்தான் படிக்கிறேன்)

அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை. //

புரட்டிப்போடும் கருத்து !!!

அவள் வாழ்கை முடிவெடுக்கும் முழு உரிமை கைகளில் கொடுக்கப்பட்டதே முதல் காரணம். (நிறை குறைகளுடன்)

உங்களின் மகிழம்பூ விசாக்கா என் மனதை விட்டு அகலவில்லை....வலைப்பூவைப் பார்த்ததும் அவர்களின் நினைவே எம்மை சிரித்து வரவேற்கிறது.

எழுத்தில் கவிதைவளம் நிறைந்திருக்கிறது. கட்டுரையை படிக்க காத்திருக்கிறோம்.

தங்களை எனக்குள் நான் என்ற தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். நன்றி.


நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு