மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


நான் ஒரு விண்மீன் குஞ்சு!
விஞ்ஞானம் சொல்கிறது.
பரந்த வெளியில் மிதந்த
ஒரு நெருப்புக் கோளம்,
வெடித்து சிதறிய நொடி
அண்டம் பிறந்தது அங்கு.
எனில் நெருப்பில் வந்தனரா
என் விண்மீன் மூதாதையர் ?
தீயில் பிறந்து தீயுடன் வளர்ந்து
நான் நெருப்பின் மகளாய்,
வேகாமல் வெந்து தணிகிறேன்
நித்தம் சுழற்றும் ஊழித்தீ
இன்னும் சுவாலை வீசி 
வளர்சிதை மாற்றம் கொள்ளும்.
ஆற்றல் பொருளாகும்  எனில்
பொருள் ஆற்றலாகும் !
புரிகிறதா...?
அந்த சூட்சுமம் தேடுகிறேன்
என்றாவது ஒரு நாள்....
அடிவயிற்றுக் கொள்ளியில்
பொருள் ஆற்றலாகும் ....
மீண்டும் பரந்தவெளி நாடும்.
ஆகாயத்தில் எரிந்து கொண்டே
அன்றும் சொல்லுவேன்
நான் ஒரு விண்மீன் குஞ்சு!


27 comments:

விண்மீன் குறித்து மாறுப்பட்ட கவிதை.

நல்லாருக்குங்க..

அத்துடன் பெண்ணின் பேராற்றல் பற்றியும் சிறு குறிப்பு தருகிறது. நன்றி திரு.தமிழ் உதயம்

கருத்துரைக்கு நன்றி அமைதிச்சாரல்.

Nice.,
Thanks for sharing..

Thank you very much Mr.Karun

பிளாக் லே அவுட் டிசைன் மாற்றீட்டீங்க போல. செம. கவிதை ஓக்கே

கவிதை புரிய வில்லை
இருந்தாலும் நல்ல இருக்கு டீச்சர்

புரியாமல் கவிதை எழுதினால் நீங்கள்தான் கவிதைக்கு கவிகர்

விழிகள்
விரிய
வியக்க
வைக்கும்
விண்மீனைப் போலவே
உங்களின் கவிதையும்
ஆச்சர்ய
அழகு.

//என்றாவது ஒரு நாள்....
அடிவயிற்றுக் கொள்ளியில்
பொருள் ஆற்றலாகும் ....//

புரிகிறது...

விண்மீன் குஞ்சு - சுடச் சுட...!!!

//நான் ஒரு விண்மீன் குஞ்சு//... மிக அழகானதொரு கவிதை!

அருமையான கவிதை.தேர்ந்தெடுத்த வார்த்தைகள்.

கருத்துரைக்கு நன்றி திரு.சி.பி.செந்தில்

////கவிதை புரிய வில்லை
இருந்தாலும் நல்ல இருக்கு டீச்சர் // இது மனப்பாடப்பகுதி. இன்னும் 5 வருடம் கழித்து மீள் பதிவு செய்வேன். அப்போது புரியும், சிவா. Thank you.

புரிதலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி திரு.ராஜாகோபாலன்.

சில கவிதைகள் வாசிப்பவர்களுக்காக கேள்விகளுடன் காத்திருக்கும். இதுவும் ஒன்று. நன்றி சிசு சார்.

மிக அழகானதொரு கவிதை! //
முதல் வருகையா பிரியா? கருத்துரைக்கு நன்றி.

பாராட்டிற்கு நன்றி திரு.சண்முகவேல். இது விதிவழி பயணத்தில் நிழலின் அருமை அருமை பெண்மையின் கவி. கொஞ்சம் அறிவியல் புலம் சார்ந்த வார்த்தைகள்.

ஆற்றல் பொருளாகும் எனில்
நிச்சயம் பொருளும் ஆற்றலாகத்தான் வேண்டும்
அடிவயிற்றுக்கொள்ளி ஆகிக்கொண்டுதான் உள்ளது
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஆகாயத்தில் எரிந்து கொண்டே
அன்றும் சொல்லுவேன்
நான் ஒரு விண்மீன் குஞ்சு!//

பெருமைமிகு வரிகள் களிப்பூட்டும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

"தீயில் பிறந்து தீயுடன் வளர்ந்து
நான் நெருப்பின் மகளாய்,
வேகாமல் வெந்து தணிகிறேன்"

அருமையான வ‌ரிகள்!
அழ‌கிய‌ கவிதை!

ஆற்றல் பொருளாகும் எனில்
நிச்சயம் பொருளும் ஆற்றலாகத்தான் வேண்டும்//கருத்துரைக்கு நன்றி ரமணி சார்.

ஆமாம், ஓளிருவது என்பது பெருமை மிக்க ஒண்றுதானே, தோழி. Thank you Rajeswari

எரிகிறவரைதான் உயிர்த்துவம் உள்ளதாக அறிவியல் சொல்கிறது. வருகைக்கு நன்றி மனோ மேடம்

//பரந்த வெளியில் மிதந்த
ஒரு நெருப்புக் கோளம்,
வெடித்து சிதறிய நொடி
அண்டம் பிறந்தது அங்கு.//


பெண்சக்தி கவிதை!!
வார்த்தைப் பிரயோகம் பிரமிப்பாக உளளது.
என்னால் இந்த கவிதையிலிருந்து வெளி வரவே முடியவில்லை

நாம் விண் மீன் குஞ்சுகள். அறிவு பூர்வக் கவிதை..சகோதரி வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com