அதிகாலை நேர சோம்பல்
களைத்துப் போன சமையல்...
யந்திரத்தனமான புன்னகைகள்,
மந்தமான நினைவு சூழ் மதியம்
அலுவலக் களைப்போடு மாலை
உறக்கம் மீறிய அயர்ச்சி ஆயாசம்
இரவில் தன்னோடு பேசி விழிப்பு
மனதின் ரகசிய மூச்சுவாங்கல்
இத்தனையும் நினைவுபடுத்தும்
தாய் வீட்டின் மீதான காதலை
கண்டித்தாலும் கவலைப்படாத
காலை வேளை உன்னத உறக்கம்
பல் தேய்க்க எட்டி விரட்டும்
அருமருந்தான கொதிக்கும் தேநீர்
குளியல் யோசனை மறக்கடிக்கும்
குண்டுகுண்டாய் தும்பை இட்லி
மறந்துபோன கீரைகடையல்
மலைக்கவைக்காத சாப்பாடு
அம்மாவின் மடி புதைந்து
உறக்கத்துடன் கூடிய மதியம்
குழந்தை மனதுடன் வாசம் வீசும்
மாலையில் சூடும் மல்லிகைச்சரம்
எனக்கான என் தேடல் மறைந்த
மறுபிறவி புத்துணர்வுடன் துயில்
ஒரு ஓட்டத்திற்கு தயாராகும்
விளையாட்டு வீராங்கனையாக
உள்ளேயும் வெளியேயும் ஆற்றி
புதிதாய் பிறக்கும் மாயம் செய்யும்
அற்புதமான என் அம்மா வீடு.
ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல.
Popular posts
- இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.
- கருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி
- பிரச்சினைகளை கையாளுதல்-2
- குழந்தைகளும் ஊட்டச்சத்து பானமும்-1
- நான் ஒரு விண்மீன் குஞ்சு
- குழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு
- அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....
- முதியோர் மன நலம் காப்பது அவசியமா?
Labels
- . வலைப்பூவின் அழைப்பு (1)
- அம்மா (12)
- அனுபவம் (1)
- இனிய இல்லம் - கட்டுரை (28)
- கடிதம் (7)
- கட்டுரை (10)
- கவிதை (55)
- சிறுகதை (2)
- பதிவுலகம் (3)
- பிள்ளைகள் வளர்ப்பு (8)
- மனவள கட்டுரை (24)
- முதியோர் (23)
- முதியோர் நல கட்டுரைகள் (7)
- முதியோர் நல சட்டம் (1)
- வாழ்வியல் கவிதைகள் (15)
வாசிப்பகம்
-
-
-
குளோபல் வில்லேஜ்-2023-2024!!!2 weeks ago
-
மரத்துக்குக் கிளை பாரமா?3 weeks ago
-
இணையத்தை கலக்கும் கோடை மீம்ஸ்7 months ago
-
வெகுமதி1 year ago
-
-
-
-
-
-
-
Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...7 years ago
-
தலையுடன் தலைநகரில் :8 years ago
-
இதுவும் பெண்ணியம்8 years ago
-
அம்மா துணை !!8 years ago
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்9 years ago
-
-
கவிழாய் செம்பிழம்பே!!!10 years ago
-
உலக சமையல் 1 ~ பயையா...11 years ago
-
ஏனோ உறக்கமில்லை எனக்கு...12 years ago
-
Social Icons
About Me
- சாகம்பரி
- என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.
Featured Posts
நண்பர்கள்
30 comments:
- Suji... said...
-
புதிதாய் பிறக்கும் மாயம் செய்யும்
அற்புதமான என் அம்மா வீடு.
ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல.
chanceless lines...
thanks for sharing :) -
புதிதாய் பிறக்கும் மாயம் செய்யும்
அற்புதமான என் அம்மா வீடு.
ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல.
அருமையாய் மனம் நெகிழச்செய்யும் கவிதை. பாராட்டுக்கள். -
நீல ரோஜா எப்படிச்செய்தீர்கள்.
பேனா இங்க் ஊற்றியா? பகிருங்கள் தோழி. நான் அப்படித்தானே செய்து கேலி செய்யப்பட்டேன். - சாகம்பரி said...
-
Thank you very much pappukkutti ( I always call kutties with this nice name )
- சாகம்பரி said...
-
இது பெண்களாகிய நம்முடைய உணர்வுகள்தான். நன்றி ராஜேஸ்வரி.
- சாகம்பரி said...
-
பூவின் காம்பை ப்ளேடு கொண்டு குறுக்காக வெட்டிவிட்டு, நீல இங்கில் ஊற வைத்தால் சிறிய வெள்ளைப் பூக்கள் தந்துகிக் கவர்ச்சியினால் நீலத்தை உள்ளிழுத்து வெளிர் நீலமாகிவிடும். ஆனால் ரோஜாவிடம் இதெல்லாம் பலிக்கவில்லை. என்னையும்தான் ரொம்பவும் கேலி செய்தார்கள்.
-
குண்டுகுண்டு இட்லி, கீரை கடையல் இப்பவும் அம்மாவின் கைமணத்திற்கு மனசு ஏங்கத்தானே செய்கிறது.
ஆனால்...
அம்மாவுடைய வீடு அதுவல்ல..
உண்மைதான். அருமையான கவிதை. -
///ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல. ///
நான் உங்கள் கவிதையை படிக்கும் போதே நினைத்துகொண்டு வந்தேன் வேறு வடிவத்தில் , புள்ளி வைத்து கோலமிடும் ரசனையில் , கோலமிட்டு பின் புள்ளி வைத்தது அமர்க்களம் சகோதரி - சாகம்பரி said...
-
இன்னும் கூட பட்டியல் உள்ளது. அது என்றைக்கும் அழியாத அம்மாவின் அன்பை நினைவூட்டும் பெட்டகம். நன்றி கடம்பவன குயில்
- வருணன் said...
-
இறுதி வரிகள் கவிதயின் பாடு பொருளுக்கு கனம் கூட்டுகின்றன.
எல்லா பெண்டிர்க்கும் தாய் வீடு துறந்து
பதி வீடு புகும் தருணங்களின் வாய்த்திடும் மன சஞ்சலங்களும், எண்ண அலைவுகளும் வரிகளில் அழகாய் வந்தமர்ந்துள்ளன.
வாழ்த்துக்கள். - சாகம்பரி said...
-
கோலம் போட்டு புள்ளி வைப்பது...! எப்படி தெரியும் ? உண்மையில் இதனை எப்போதாவது செய்வேன். நன்றி சகோ.
- சாகம்பரி said...
-
கருத்துரைக்கு மிக்க நன்றி திரு.கருன்
- சாகம்பரி said...
-
வணக்கம் திரு.வருணன். புதிதாய் மணமுடித்த பெண் மட்டுமல்ல, எப்போதுமே அம்மா வீட்டின் காதல் சீராக வளர்க்கப்பட்ட பெண்களுக்கு இருக்கும். மன அழுத்தம் கூடும் வேளைகளில் கனவாவது காணும் மனம். கருத்துரைக்கு நன்றி.
-
அம்மா வீட்டின் சுகத்தை மிக மிக அழகாக
சொல்லிச் செல்வதில் உள்ள லயத்தில் சுகத்தில்
நான் மய்ங்கிக் கொண்டேவந்த வேளையில்
கடைசி வரியில் மண்டையில் சடேரென ஒரே தட்டு
யதார்த்தம் அப்போதுதான் கண்ணெதிரே விரிந்தது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள் - சாகம்பரி said...
-
கவிதையின் உணர்வினை ஒன்றி ரசித்து பாராட்டிய விதம் அருமை. நன்றி ரமணி சார்.
- தமிழ் உதயம் said...
-
நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ...
கவிதையை வாசித்து கொண்டே வரும்போதே, பாதி கவிதையில் வரும் போதே - பின்னூட்டத்திற்கான விஷயம் கிடைத்து இருந்தது. ஆனால் அதை கொண்டு தான் நீங்கள் கவிதையையே முடித்திருக்கிறிர்கள். நல்ல கவிதை. -
அருமையான கவிதை...
- Unknown said...
-
MEE THE FIRSTU...
- மதுரை சரவணன் said...
-
super...vaalththukkal
-
அருமையான கவிதை!
பெண்களுக்கு தாய்வீடு என்பது வரப்பிரசாதம்!
எல்லா அவசரங்களையும் மறந்து மனமகிழ்ந்து கொள்ளும் தற்காலிக சொர்க்கம்!
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!! - சாகம்பரி said...
-
yes , I agree. நாம் நம்மை சுற்றி இருப்பவர்களை கவனிக்கிறோம். வார்த்தைகளின் கோர்வை மட்டுமே எனக்கு உரிமை. கருவை பற்றிய சிந்தனை மற்றவர்களுக்கும் வந்திருக்கலாம். Thank you Sir.
- சாகம்பரி said...
-
நன்றி பிரகாஷ்
- சாகம்பரி said...
-
//MEE THE FIRSTU... //
Yes , welcome Siva. - சாகம்பரி said...
-
To மதுரை சரவணன்,
வணக்கம். welcome Sir, Thank you - raji said...
-
சட்டென என் தாயை நினைத்து என் மனம் கனத்து விட்டது மேடம்
- சாகம்பரி said...
-
வணக்கம் மனோ மேடம், வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அம்மா சம்பந்தப்பட்ட கவிதைகள் தானாகவே அழகாகிவிடுகின்றன. Thank you for the first visit.
- சாகம்பரி said...
-
ராஜி வருத்தப்பட தேவையில்லை ராஜி. இது மகளின் பார்வையில் எழுதப்பட்ட கவிதை. ஆனால் இதற்கு மறுமுகம் உள்ளது. அம்மாக்கள், ஒரு கட்டத்தில் தன்னை பற்றிய சிந்தனை மறந்து தனித்து இல்லாமல் குடும்பத்தின் ஆணிவாராகி விடுவார்கள். இதற்கான என் கவிதைதான் மூன்றாம் கோணத்தில் 'நிறமில்லா இயற்கைதான் நான்' என்று வந்துள்ளது.
- கீதமஞ்சரி said...
-
அம்மாவின் வீடு எதுவென்று அழகாய் உணர்த்திவிட்டீர்கள். ஒவ்வொரு வரியிலும் ஓடிப்போய் தாய்மடியில் முகம் புதைத்துக்கொண்டு வெளிவர மறுத்து அடம் பிடிக்கிறது மனம். அருமை சாகம்பரி.
- சாகம்பரி said...
-
அம்மா என்ற வார்த்தை உணர்வுபூர்வமானது. நன்றி கீதா.