மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

           கண்டிப்பாக முதியோர் மன நலத்தையும் கவனித்தே ஆகவேண்டும். ஏனெனில் மருத்துவர்களின் கருத்தின்படி பெரும்பாலான உடல் நலக்குறைவிற்கு காரணம் மன அழுத்தம், கவலைகள் அதனால ஏற்படும் பதட்டம் ஆகியனவாகும். இவை சீரண மண்டலத்தை பாதிக்கலாம் முக்கியமாக கல்லீரல் பாதிக்கப்படும்.. விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்து குறைவு , மூச்சு கோளாறு தொடர்ச்சியான இருமல் ஆகியன ஏற்படும். இவை நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்படலாம். டயாபடீஸ் , ஹைபர் டென்சன், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாதபோதே இவை அறிகுறி காட்டலாம். எந்த பரிசோதனையும் இவற்றின் ஆதிமூலத்தை அடையாளம் காட்டாது. இந்த நிலையில் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு, சீரணிக்க சுலபமான உணவு வகைகளை தரவேண்டும். காலை உணவை சீக்கிரமாக தந்து விடவேண்டும். முடிந்தால் தேநீர் போன்றவை தரும்போதே பிஸ்கட்டையும் சேர்க்கலாம். ஒரே வேளையில் அதிகம் உண்ணுவதைவிட கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளச் செய்யலாம்.

         மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது. அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான். இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும். நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும் மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லுவதில் தயங்கத்தேவையில்லை. எதிர்கால உலகம் நமக்கும்தான் காத்திருக்கிறது.
 
           அடுத்தவரின் உதவி நாடும், வயதான காலத்திலும் - உரிமையிருந்தாலும், உண்மையானவர்களிடம் மட்டுமே ஆதரவு தேடும். அது கிட்டிவிட்டால் பூரண மன அமைதி கிட்டும். 

2 comments:

முதியவர்களின் உடல் நலமே அவர்கள் மனநலத்தைச் சார்ந்ததுதான்.ஆதரவான பேச்சும்,அன்பான கவனிப்பும் இருந்தால் அவர்கள் மனமும் உடலும் நலமாகவே இருக்கும்.கடனே என்று,கடமையே என்று உணவும்,மருந்தும் தருவதில் என்ன பயன்?
நல்ல பதிவு.
பாருங்கள்-http://chennaipithan.blogspot.com/2010/11/4.html

தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்களின் கருத்துரை
இது போன்ற பதிவுகளை மேம்படுத்தும். முதியோருக்கான
குரலாக இந்த பதிவுகள் தொடரும். மிக்க நன்றி.