மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


    இதற்கு முன்பாக வயதானவர்களை மூன்று வகையினராக பிரித்து அவர்களின் இயல்புகளை குறிப்பிட்டிருந்தேன். "ஒரு சிலர் குறிப்பிட்ட வகையில் மட்டும் இருப்பதாக சொல்லமுடியவில்லை. உதாரணமாக ஒரு சமயம் dettached வகையிலிருந்து complaining வகைக்கு மாறிவிடுகிறார்கள் ஏன்? " என்று கேட்டிருந்தனர். இது போல தன்மை மாறி நடப்பதற்கு வாழ்க்கை முறையில் ஏற்பட்ட திடீர் மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் - பொருளாதார மாற்றங்கள், புதிய சூழ்நிலைகள் போன்றவை. அல்லது புதிய உறவுகளின் பாதிப்பு , உடல் நிலை கோளாறு, சுற்றியிருப்பவர்களின் அணுகு முறை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். இவை அத்தனையும் மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. மாற்றத்திற்கான காரணிகளை சரிசெய்யும்போது இவர்கள் பழையபடி மாறிவிடுவார்கள்.

       அணுகு முறை மாற்றம் நமக்கு சாதகமாக இருந்தால்கூட " கவலை விட்டது " என்றில்லாமல் அவர்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வாருங்கள் - புலம்புகிற ரகம் புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும் அது ஒரு வடிகால், ஆரோக்கியத்தின் கதவை மூடாது. அதனால் மன அழுத்தத்தை குறைக்கவேண்டியது அவசியம். இல்லையென்றால் தேவையில்லாத பக்கவிளைவுகள் - இருதய நோய், பக்க வாதம், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை உண்டாகலாம். நமக்கு வேலைப்பளு கூடிய இன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது நமக்கும்தான் நல்லது.

      சில வீடுகளில் பெரியவர்களை திருத்துகிறோம் என்று அவர்களின் தற்போதைய இயலாமையை காட்டி அடக்கிவிடுவார்கள். சின்ன குழந்தைகளையே இவ்வாறு நடத்துவது தவறு என்று சொல்லும் மனோதத்துவம், இதனை கடுமையாக எதிர்க்கிறது. ஏனெனில் இவர்கள் விவரம் அறிந்த பெரியவர்கள். நமக்கு வழிகாட்டியாய் இருந்தவர்கள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருமுறையும் நம்மை நகர்த்தியவரகள். வாய் மூடி மௌனியாக.... இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக...இருப்பது அவர்களை உயிரில்லாத உடல்களாக்கிவிடும். இவையெல்லாம் மனதை பாதிக்கக்கூடிய விசயங்கள். அவர்களின் கடைசி நாட்களை துன்பமிகுந்தவையாக மாற்றிவிடும்.

      அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். அவர்களை மாற்ற முயற்சிக்காமல் நாம்தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். கடைசி மூச்சுவரை அவர்களை சுவாசிக்க வைப்பது நம்முடைய தலையாய கடமையாகும். அவர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அடுத்த தலைமுறைக்கும் தேவை.  

                                ....... ஒன்றை யாக்குதல் மாற்றுதல்
                                          அழித்திட லெல்லாம் நின்செய லன்று காண்
                                தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
                                         வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்
                                ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ
                                                                                                - மகாகவி பாரதியார்

1 comments:

// சில வீடுகளில் பெரியவர்களை திருத்துகிறோம் என்று அவர்களின் தற்போதைய இயலாமையை காட்டி அடக்கிவிடுவார்கள்.மனோதத்துவம், இதனை கடுமையாக எதிர்க்கிறது. ஏனெனில் இவர்கள் விவரம் அறிந்த பெரியவர்கள். நமக்கு வழிகாட்டியாய் இருந்தவர்கள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருமுறையும் நம்மை நகர்த்தியவரகள். வாய் மூடி மௌனியாக.... இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக...இருப்பது அவர்களை உயிரில்லாத உடல்களாக்கிவிடும். இவையெல்லாம் மனதை பாதிக்கக்கூடிய விசயங்கள். அவர்களின் கடைசி நாட்களை துன்பமிகுந்தவையாக மாற்றிவிடும்.////அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். அவர்களை மாற்ற முயற்சிக்காமல் நாம்தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். கடைசி மூச்சுவரை அவர்களை சுவாசிக்க வைப்பது நம்முடைய தலையாய கடமையாகும். அவர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அடுத்த தலைமுறைக்கும் தேவை.//


மிகவும் இதமாக, பதமாக, இனிமையாக, இயல்பாக,
சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

நன்றிகள்.

நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.