பெரியவர்களில் இன்னும் ஒரு பிரிவினர் உள்ளனர். தன்னை எதிர்காலத்தை முழுமையாக உணர்ந்து கொண்டு தன் பாதையை அழகாக அமைத்துக் கொண்டு தேவைக்கேற்ப வசதியுடன் அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். சுற்றியிருப்பவர்களை சார்ந்து இருக்கமாட்டார்கள். முற்போக்குவாதிகளாக இருப்பார்கள். பொதுவாக இவர்களுடன் இருப்பவர்கள் நிம்மதியான வாழ்க்கையை விரும்புவார்கள். இது dettached வகையினர். இந்த வகையினரின் முதுமைக் காலம் சௌகரியமாக இருக்கும். புதிய புதிய யுக்திகளை கற்றுக்கொண்டு தங்களை உற்சாகமாக வைத்திருப்பார்கள் . பிரச்சினை என்னவென்றால் இவர்களின் பிள்ளைகள்தான் எல்லா விசயத்திற்கும் இவர்களின் ஆலோசனைக்காக காத்து இருப்பார்கள்.
உண்மையில் இது போல உங்கள் வீட்டுப் பெரியவர் இருந்தால், அவர்களைப் புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கும்வரை பிரச்சினையில்லை. திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டால் மனமும் சேர்ந்து பாதிக்கப்படும். சிறு குழந்தையை போல் மனதளவில் மாறிவிடுவார்கள். யாரையும் சார்ந்து இராமல், மற்றவருக்கு உதவி செய்து பழக்கப்பட்டதால் அசௌகரியத்தை வாய் விட்டு சொல்லவும் மாட்டார்கள். இத்தனை நாள் அவர்களின் அனுசரிப்பில் இருந்த நாம் இப்போது அவர்களை கனிவாக கவனித்துக் கொள்ளவேண்டும். பொதுவாக பெரிய இழப்பு ஏற்படும்போது - உ-ம், வாழ்க்கைத் துணையை இழப்பது போன்ற தருணத்தில் இத்தகைய பாதிப்புகள் இருக்கும். ஆல மரத்தை தாங்கும் விழுதுகள் போல நாம் அவர்களை தாங்கிப்பிடித்து தனிமை தவத்திலிருந்து வெளிக்கொணர வேண்டும். அவர்கள் சகஜ நிலையை அடையும்வரை நாம் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களை இழக்கவேண்டியதாகி விடும்.
மூத்தவர் பொய் நடையும் - இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்
வேண்டிய கொடுத்திடுவாள்- அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவாள்