மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்நடப்பதே வெற்றியென
நினைக்கும் வரையில்
காலடித்தடங்கள் மட்டும்
கவனப்படுத்தப்பட்டன
தடுமாறி விழுந்தபின்
ஊன்றி எழும்பிய போது
உள்ளங்கை ரேகையும்
மணல் ஓவியமாகியது.
விழுவதும் எழுவதுமாகிய
வாழ்வியல் நொடிகள்
ரசனையுடன் பதிந்தன.குறிப்பு: என்னுடைய ப்ளாக்கர் கோளாறு சரியாகிவிட்டதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள இந்த குட்டிக் கவிதை. மீண்டும் தொடர் பதிவு அடுத்தபதிவிலிருந்து தொடரும். ஒரு சிறு விடுமுறை எடுத்துக் கொண்டு. மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து தொடர்கிறேன். மற்ற பதிவுகளுக்கும் வருகிறேன். அதுவரை மன்னிக்கவும்