மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்நடப்பதே வெற்றியென
நினைக்கும் வரையில்
காலடித்தடங்கள் மட்டும்
கவனப்படுத்தப்பட்டன
தடுமாறி விழுந்தபின்
ஊன்றி எழும்பிய போது
உள்ளங்கை ரேகையும்
மணல் ஓவியமாகியது.
விழுவதும் எழுவதுமாகிய
வாழ்வியல் நொடிகள்
ரசனையுடன் பதிந்தன.குறிப்பு: என்னுடைய ப்ளாக்கர் கோளாறு சரியாகிவிட்டதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள இந்த குட்டிக் கவிதை. மீண்டும் தொடர் பதிவு அடுத்தபதிவிலிருந்து தொடரும். ஒரு சிறு விடுமுறை எடுத்துக் கொண்டு. மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து தொடர்கிறேன். மற்ற பதிவுகளுக்கும் வருகிறேன். அதுவரை மன்னிக்கவும்19 comments:

சிற்பம் போல மிக அருமையாக
மனதில் பதிந்து போனது தங்கள்
மணல் தடங்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

கவனமாக தேர்வு செய்த வார்த்தைகள்.நன்று.

//ஊன்றி எழும்பிய போது
உள்ளங்கை ரேகையும்
மணல் ஓவியமாகியது.//


அருமையான அழகான் சொல்லாடல். மிகவும் ரஸித்தேன். அமைதியாக ஒரு வார ஓய்வில் சென்று வாருங்கள்.
மீண்டும் சந்திப்போம். வாழ்த்துக்கள்.

தமிழ்மணம்: 4 vgk

அழகான கவிதை.

விழுவதும் எழுவதுமாகிய
வாழ்வியல் நொடிகள்
ரசனையுடன் பதிந்தன

சிக்கனமான சிறப்பான கவிதை

சொற்களால் சித்திரம் வரைந்த கவிதை..
மணல்வழித் தடமாய் நெஞ்சில் பதிந்தது சகோதரி..
அருமை.

அழகிய வாழ்வியல் கவிதை. தடங்கலையும் தடங்களாக்கும் வல்லமை பெற்ற மனங்களே பயணம் முழுவதும் வாழ்க்கைச் சித்திரத்தை வகையாய்ப் பதிவு செய்கின்றன. மனமார்ந்த பாராட்டுகள் சாகம்பரி. ஓய்வுக்குப் பின்னரான தங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.

அழகான கவிதை...

பிளாக்கர் என்னாச்சு? நல்லாதானே இருக்குற மாதிரி தெரியுது அம்மா?

ரசனையான பதிவு.

கரங்களின் பதிவுகளும் ஓவியமாகிறது. ரசனையான அழகிய கவிதை. இதுபோன்ற கவிதைகள் எங்களுக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கட்டும். நன்றி!

நல்ல கவிதை.
வாழ்த்துகள்.

விழுவதும் எழுவதுமாகிய
வாழ்வியல் நொடிகள்
ரசனையுடன் பதிந்தன.

ரசிக்கவைத்த வரிகள்..

கவிதை நன்றாகவுள்ளது.

வாழ்வியல் உணர்த்தும் வலிமையான கவிதை ..
வாழ்த்துக்கள்

Wishing You And Your Family Good Health & Prosperity In The NEW YEAR

அன்பு சாகம்பரி, நலந்தானே? தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எந்நாளும் நலமே விளையட்டும்.

கவிதை மிக அழகு!

நல்ல கவிதை தோழி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!