மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

சுயநலத்தின் வெளிப்படாக
எதிர்பார்த்து ஏமாற்றமுடன்
சீறலும் சினமுமாக 'அது...'
சில சமயம் காயங்களுடனும்,
சில சமயம் வலி
களுடனும்...

ஏதோ செய்து அடக்கிவிட்டு
கொல்லைப்புற இருளில்
கொட்டிலில் கட்டினேன்...
அன்பின் நித்தியத்தையும்
சத்தியத்தையும் ஓதினேன்!

கேட்கும் சக்தி இருந்தபோது
பின்னொரு நாளை எண்ணி
பணிந்து பழகி மௌனித்தது!
கூரிய நகங்களை தீட்டாமல்
அடிபட்ட காயங்களை கிளறி
வலியின் வலிமை தூண்டாமல்
அமைதியாகவே இருந்தது!

மோசமான ஒரு நொடியில்
கொட்டிலை விட்டு சென்று
சிவப்பு சிதிலங்களுடன்
என் நம்பிக்கை சிதைத்து
மீண்டும் திரும்பியது......
இப்போதும் ஏமாற்றப்பட்டேன்!

கட்டவிழ்ந்து போகும் முன்
அந்த நொடியின் நெடி மாற
பூமிக்குள் புதைந்திருக்கலாம்...
கடலலையில் மறைந்திருக்கலாம்
மேகத்தில் தொலைந்திருக்கலாம்
ஏதாவது செய்து மீண்டிருக்கலாம்....

பின் என்ன...? வழக்கம் போலவே.....
நெருப்பில் சுயம் எரித்து மீளும்
உபாயம் தேடி தவமிருக்கிறேன்!



21 comments:

வாங்க வாங்க எங்க MOST wanted list ல உங்க பெயர போடலாம என்று இருந்தேன் நல்ல வேலையாக வந்திட்டீங்க

Respected Madam, நலமா?

நீண்ட நாட்களுக்குப்பின் வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தத்தங்களின் கவிதையை மூன்று முறை திரும்பத்திரும்ப படித்து விட்டேன்.

ஏதோ ஒரு விலங்கைப் பற்றி [pet animal] ஏதோ சொல்கிறீர்கள் என மட்டும் புரிந்து கொண்டேன். முழுதாக முடிவாக என்ன சொல்கிறீர்கள் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

பொதுவாக ஒருமுறை படித்தாலே பளிச்சென்று புரியக்கூடிய எளிமையான கவிதைகளை மட்டுமே நான் ரஸித்துப்படிப்பேன்.

மற்றபடி பொதுவாகக் கவிதைகள் பக்கமே செல்ல நான் விரும்புவது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்கும் தானே!

தாங்கள் எழுதியுள்ளதால் மட்டுமே மூன்றுமுறை முயற்சித்துப்படித்தேன்.

புரிந்தும் புரியாததுமாக இருப்பதை மனம் திறந்து கூறியும் விட்டேன். தவறாக நினைக்காதீர்கள்.

நான் விலங்கு என்று நினைத்துப்படித்தது சரிதான் என்பதையும் கீழே நீங்கள் காட்டியுள்ள படம் தெளிவாக்கியுள்ளதில், எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்.

[அந்தப்படத்தை நான் 3 முறை படித்த பிறகு மட்டுமே பார்த்தேன்]

அன்புடன் vgk

நீண்ட மௌனத்திற்கு பின்னர் தங்களை
காண்பதில் மிக்க மகிழ்ச்சி சகோதரி...

அப்படியே தங்களின் அக்மார்க் முத்திரைக் கவிதை..
பலமுறை படித்தபின்னும் மீண்டும் மீண்டும்
படிக்கத் தூண்டும் உணர்வுக் கவிதை...

////கட்டவிழ்ந்து போகும் முன்
அந்த நொடியின் நெடி மாற////

இதுதானே வாழ்வின் யதார்த்தம்...
இந்த நொடியின் நெடி அடுத்த நொடியில்
மாறாது இருந்தால் பின்விளைவுகளை
நம்மால் சந்திக்க இயலுமா????

தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி..
இவ்வளவு இடைவெளி வேண்டாமே......

நிரூபனின் அறிமுகம் தொடர்ந்து வந்தேன்..
எதிர்ப்பார்ப்பு பொய்க்கவில்லை..
உங்களின் சில படைப்புகளை வாசித்தேன்..
அழுத்தம் ஏராளம்...வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...

அம்மா வணக்கம்....

நீண்ட நாள் பிறகு, எப்படி இருக்கீங்க?

--- வீட்டுல கேட்டாங்க----

வை,கோ ஐயா சொன்ன மாதிரி புரியல....

எப்பவும் உங்க கவிதை புரியும். இன்னைக்கு?

ஒரு முக்கியமான வேண்டுதல், ரொம்பவும் டெடிகேட்டட் ஆக விரதம் இருந்து முடித்துவிட்டேன். (அற்புதமான அந்த ஆன்மீக அனுபவம் பற்றி இம்மையில் நன்மையில் பதிவிட இருக்கிறேன்)அதனால் இங்கு ஆப்ஸெண்ட். மன்னிக்கவும். இனி வருவேன். விட்டதையும் தொடர்வேன். நன்றி மதுரைத் தமிழன்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார். மிகவும் அனுபவசாலியான உங்களுக்கு புரியாமல் இருக்காது என்று எனக்குத் தெரியும் சார். இருந்தாலும், என்னை இன்னும் விளக்கம் தரத் தூண்டுகிறீர்கள் என்றே கருதுகிறேன் சார்.

'அது' என்பது நம்முடைய மனம். சாதாரணமாக நியாயம் தர்மம் பேசும். ஆனால் ஏதோ ஒரு தூண்டுதல் கிட்டும்போது சில சமயம் புலியின் சீற்றமுடன் சொல்லாலோ செயலாலோ சுற்றியிருப்பவர்களை அழித்துவிடும். கோபம் மட்டுமல்ல பொறாமை, குரோதம் போன்றவை கூட இதற்கு காரணம் ஆகும். கலிங்கப் போரின் முடிவில் அசோக சக்கரவர்த்தி புலம்பியது இதை பற்றித்தான். விலங்கை நாம் கண்டு கொள்வதே மனிதன் ஆவதற்கான முதல் படி. போராடித்தான் அடக்க வேண்டும். உணர்ச்சிகளின் பிடியில் சிக்கும் அந்த தருணத்தை மட்டும் சரியாக கையாண்டுவிட்டால்... பின்னர் நாம் பாபவிமோசனம் தெடி அலைய வேண்டமல்லவா?

கவிதையின் விளக்கம் முழுமை பெற்றுவிட்டதா சார்.?

வருகைக்கு நன்றி சகோ. கண்டிப்பாக இனி இவ்வளவு விடுப்பு எடுக்க மாட்டேன். மீண்டும் நன்றி சகோ.

முதல் வருகைக்கு கருத்திற்கும் நன்றி திரு.மயிலன். நிரூபனின் அறிமுகம் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவருக்கும் நன்றியி தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகைக்கு நன்றி பிரகாஷ். நான் நலமாக இருக்கிறேன். வீட்டில் நலமா?. உங்களுடைய கேள்விக்கு பதில் வைகோ சாருக்கு எழுதிய பின்னூட்டத்தில் இருக்கிறது. ஆமாம், இதுவரை யாரிடமுமே அநியாயமாக் கோபப்பட்டதில்லையா?

நல்ல கவிதை.
வாழ்த்துகள் அம்மா.

ஆஹா, இப்போது அருமையாக விளங்கி விட்டது மேடம்.

‘அது’ என்பதை ‘மனம்’ என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று என் ‘மனதுக்கு’ ஏனோ தோன்றவே இல்லை.

இப்போது வெகு அருமையாகவே விளக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.

உண்மையிலேயே எனக்கு சிலரின் சில கவிதைகள் கடைசிவரை விளங்குவதே இல்லை மேடம்.

அதை நான் தங்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், அதனால் தான் தயங்கவே இல்லை.


கவிதை எழுதும் மற்ற பதிவர்களிடம் நான் இதுபோல உரிமையுடன் கேட்க முடியாததால், பெரும்பலும் பின்னூட்டமும் கொடுக்காமல் பேசாமல் இருந்து விடுவதுண்டு.

உங்களிடம் கேட்டால் நிச்சயமாக தெளிவாக விளக்கிச் சொல்லி விடுவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

மேலும் சிலர் என்னைப்போலவே ட்யூப் லைட் ஆகக் கூட, இதுபற்றி தெளிவாகப் புரியாமல் இருக்கலாம் அல்லவா! அவர்கள் உங்களிடம் கேட்கத் தயங்கியும் இருக்கலாம் அல்லவா!! அதனால் மட்டுமே அவ்வாறு எழுதியிருந்தேன்.

தனியாக உங்களிடம் மெயில் மூலமே நான் கேட்டிருக்கலாம்.

பின்னூட்டத்தில் அவசரப்பட்டுத் தெரிவித்திருக்க வேண்டாம்.

I feel very sorry, for that Madam.

//உணர்ச்சிகளின் பிடியில் சிக்கும் அந்த தருணத்தை மட்டும் சரியாக கையாண்டுவிட்டால்... பின்னர் நாம் பாபவிமோசனம் தேடி அலைய வேண்டமல்லவா?//

மிகவும் அழகான வரிகள் இவை.

மிகவும் நியாயமான அறிவுரை தான்.

நன்றி.

அன்புடன்
vgk.

கட்டுரைகளுக்கு தாங்கள் உதாரணங்கள் அளித்தபிறகு தான், நிறைய பேர்களுக்கு அது விளங்க ஆரம்பித்தது.

படிப்பதில் ஓர் ஆர்வமும் ஏற்பட்டது.
நிறைய பேர்கள் வந்து பின்னூட்டமிட்டு கருத்துக்களும் கூற ஆரம்பித்தனர்.

அதுபோல தங்கள் கவிதைகளின் மூலம் சொல்லப்படும் கருத்தை ஒரு சிறு குறிப்பாகவோ

அல்லது

‘அது’= கோபம், பொறாமை, குரோதம் முதலியன நிறைந்து விட்ட ’மனம்’ என்ற சிறு HINT ஆகவோ கொடுத்துவிட்டால், என்னைப் போன்றவர்களுக்கு, சற்றே புரிய ஏதுவாகும்.

இப்போது விளங்கி விட்டது.... விளக்கத்திற்கு நன்றி....

நீங்கள் எதோ பிஸியாக இருக்கீங்கன்னுதான் நானும் நினைத்தேன்.உண்மையில் எனக்கு எதோ செய்யுள் படிப்பது போல இருந்தது.ஒன்னும் புரியவில்லை.நல்லவேளை விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.


இந்த பொருளுக்கு இத்தகைய வார்த்தைகளை உபயோகப்படுத்த முடியுமா&படித்தவுடன் புரிந்துகொண்டவர்களையும் பார்த்து பிரமிக்கிறேன்.என் போன்றோர்களுக்காக தங்கள் எழுதும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம்,கோபாலகிருஷ்ணன் சார் சொல்லியுள்ளது போல பொருள் குறிப்பு கொடுத்துவிடுங்கள்.

நீங்கள் பொருள் கொடுக்காமல் இருந்திருந்தால் ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தகம் படித்தது போல இருந்தது என்று பின்னூட்டமிட நினைத்தேன்.பொதுவாக புத்தகம் படித்தால் எனக்கு தூக்கம் வந்திடும்.ஒருமுறை ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தகம் படித்தபோது மயக்கமே வந்துவிட்டது.

நீங்களும் இன்னும் இரண்டு மூன்று பத்தி கூடுதலாக எழுதியிருந்தால் நிச்சயம் எனக்கு தலைசுற்ற ஆரம்பித்திருக்கும். கோபித்துக்கொள்ள வேண்டாம்.உங்கள் புலமை அப்படி.என் புலமை(?)இப்படி.

வருகைக்கு நன்றி ஐயா

தங்கள் ஆலோசனைக்கு நன்றி VGK சார். இனி அது போலவே செய்கிறேன். இது போன்ற திருத்தங்கள் பயனுள்ளதாக இருக்கிறது. No need to saay sorry sir. You are welcome.

Thank you Prakash

வருகைக்கு நன்றி ஆச்சி. கவிதையின் களம் உங்களுக்கு பரிட்சயமில்லாததாக இருந்திருக்கும். என்னிடம் இது போல கவுன்சிலிங் நிறைய வருகிறது. மற்றபடி ஜே.கே என்றெல்லாம் எழுதி வம்பில் மாட்டிவிடாதீர்கள். (எனக்கு ஜேகே ரைட்டிங்ஸ் ரொம்பவும் பிடிக்கும்)

''...கட்டவிழ்ந்து போகும் முன்
அந்த நொடியின் நெடி மாற
பூமிக்குள் புதைந்திருக்கலாம்...
கடலலையில் மறைந்திருக்கலாம்
மேகத்தில் தொலைந்திருக்கலாம்
ஏதாவது செய்து மீண்டிருக்கலாம்....

பின் என்ன...? வழக்கம் போலவே.....
நெருப்பில் சுயம் எரித்து மீளும்
உபாயம் தேடி தவமிருக்கிறேன்!..''
கவிதை எனக்குப் புரிந்தது. மேலே குறிப்பிட்ட வரிகளை வாசிக்க பெண் என்பவள் அத்தனையும் சுதாகரித்து மீண்டும் வாழ்வினுள் புக வேண்டியது தான் என்பது போல ஒரு கருத்து எனக்குள் விழுந்தது. நல்ல கவிதைக்கு வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.