மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பிரச்சினையை களைவது எப்படி?  முன்னர்  குறிப்பிட்ட இரண்டிற்கும் அனுபவத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவை மந்திரமாக செயல்படும். இதற்கு தந்திரம் வேண்டும் - அதைத்தான் சாணக்கிய தந்திரம் என்பார்கள். அப்படியென்றால்...?

அதற்கு முன் சிக்கலை தீர்க்க முடியும் என்ற 'ஊக்கமும், உள்வலியும், உண்மையின்மீது பற்றும்'  இருக்க வேண்டும் . இதுவும் மகாகவியின் வார்த்தைகள்தான். பிரச்சினையிலேயே ஆழ்ந்து கொண்டு பலவீனமடைந்து நிற்பவர் மாக்களுக்கு சமம் என்கிறார். உள் வலி என்பது மனதில் ஏற்படும் தாக்கம் அதுதான் தாண்டி குதிக்க தூண்டும். உண்மையில் பற்று என்பது எப்போது வரும்? நம் செயல்களில் நமக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே கிட்டும்.

  பிரச்சினையை மனதளவில் பகுத்தாய்வு செய்ய வேண்டும். 360 டிகிரி மதிப்பிடல்தான். பல கோணங்களில் பார்க்கும்போது அதன் முழு பரிமாணம் பலம், பலவீனம் ஆகியன தெரியும்.இது போன்ற திறனாய்வு செய்யும் போது என் நண்பர் முற்றிலும் தனக்கு எதிராக சிந்திக்கும் எதிர்போக்கு நபரை உடன்  வைத்துக் கொள்வார். அடுத்த கட்டம் செல்லும் போது அந்த  நபரை கழட்டி விட்டு விடுவார். வேறுபட்ட கோணங்களை பார்க்க இது உதவும். உண்மையில் ஏன் அந்த பிரச்சினையை சமாளிக்க முடியாது என்பதற்கான பலமான காரணங்கள் கிட்டும்.  முடியாது என்பதற்கான காரணங்கள்தான் முடியும் என்பதற்கான பதிலை தேடும். வெற்றிக்கான வரைபடம் கிட்டிவிடும்.

அதென்ன சாணக்கிய தந்திரம்?  பிரசித்தி பெற்ற நந்தப் பேரரசை அழித்து சந்திரகுப்த மௌரியரின் தலைமையில் குப்தப் பேரரசை நிறுவியதில் சாணக்கியரின் பங்கையும் அரசியல் தந்திரங்களையும் வரலாறு பெருமையாக பேசும். சந்திரகுப்தரை பேரரசராக உருவாக்கிய பெருமையும் அவரையே சார்ந்த்து. ஆனால், ஆரம்பகாலத்தில் இளைஞனாக இருந்தபோது சந்திர குப்தர் நாடிழந்து அகதியாய் காட்டில் திரிந்தார். தட்சசீலத்திலிருந்து வெளியேறிய சாணக்கியரும் காட்டில்தான் சந்த்தித்தார். சந்திர குப்தரின் நம்பிக்கை மிக்க போராளிகளைக் கொண்டு மகதத்தின்மீது படையெடுப்பதும் தோற்பதும் மீண்டும் காடு திரும்புவதும் நடைபெற்றகாலம் அது. தோல்வியின் காரணம் புரியாமல் காட்டில் திரிந்தனர். எப்போதாவது ஏற்படும் பசி அப்போதும் தோன்றியது. காட்டில் சிறு குடிசையை கண்டனர். அதில் ஒரு கிழவியும் சிறு வயது பேரனும் வசித்து வந்தனர். அவளிடம் உணவு கேட்டபோது, யாரென்று தெரியாமலே , சற்று பொறுத்திருக்கும்படியும் தானிய அடை செய்து தருவதாகவும் கூறினாள். சற்று பொறுத்து சுடசுட அடையும் வந்தது. பாட்டியின் பேரனும் உடனமர்ந்து உண்ண முற்பட்டான். மிகவும் சூடாக இருந்த அடையில் கை வைத்து விட்டு ' ஆ' என்று அலறினான். "உண்ணும் தந்திரம் தெரியாமல், நீயும் அந்த சாணக்கியன் போலவே முட்டாள்தனம் செய்கிறாயே." அந்த கிழவியின் அதட்டல் சாணக்கியரை திடுக்கிட வைத்தது.  முட்டாளா சாணக்கியரா? கோபம் கொள்ளாமல் விளக்கம் கேட்டார். அந்த கிழவி சொன்ன பதில்தான் பின்னாளின் புகழ்பெற்ற குப்தப்பேரரசை நிறுவியது.

"ஐயா, அடையின் நடுப்பகுதி சற்று தடிமனானது, ஓரத்தில் மெலிந்து இருக்கும். எனவே அடையின் நடுப்பகுதியைவிட ஓரத்தில் சூடு விரைவில் தணிந்துவிடும். எனவே ஓரத்தில் இருந்து அடையை பிய்த்து உண்ண ஆரம்பிக்க வேண்டும். அதுபோலவே ஒரு நாட்டின் தலை நகர் அரசர் இருக்கும் இடமாகையால், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நாட்டின் எல்லை பகுதியில் காவல் குறைவாக இருக்கும். அங்கே போர் தொடுத்து சிறிது சிறிதாக முன்னேறாமல் நேரிடையாக தலை நகரை தாக்கி தோற்றுவிடுகிறார். இது முட்டாள்தனம்தானே". உண்மையே. இதனை பின்பற்றி சாணக்கியர் கொஞ்சம் கொஞ்சமாக மகதத்தை கைபற்றும் முயற்சியை தொடங்கி இறுதியில் வெற்றி பெற்றனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் திட்டங்களும் பின்னர் முக்கியத்துவம் பெற்றன.


இதே முறையை  பிரச்சினையை சரி செய்யவும் கையாளலாமா? நாளைய பதிவில் தொடரலாம்.

21 comments:

நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

துவக்கப் பதிவும் தொடர் பதிவும் மிக மிக அருமை
அதிலும் அந்த சாண்க்கியர் கதை அற்புதம்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மிக மிக அருமையான விளக்கம்
எங்கோ படித்து இருந்தாலும்
திரும்ப வாசிக்கும்போது நம்பிக்கையும் தொடர்கிறது

சாணக்கியர் கொஞ்சம் கொஞ்சமாக மகதத்தை கைபற்றும் முயற்சியை தொடங்கி இறுதியில் வெற்றி பெற்றனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் திட்டங்களும் பின்னர் முக்கியத்துவம் பெற்றன.
nice write up.

//'ஊக்கமும், உள்வலியும், உண்மையின்மீது பற்றும்' இருக்க வேண்டும் . //

இதுவே! அவர் வார்த்தைகள்.பொய்க்காது.நன்று

சூடான அடையின் மூலம் சாணக்கிக்யருக்கே அறிவுரை கூறிய அந்தப்பாட்டி நம் கண்முன் நிற்கிறார். நல்ல அறிவுரைகள் கூறும் பயனுள்ள கட்டுரை. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

நல்ல அறிவுரைக்கூறும் கட்டுரை அருமையான விளக்கம்..வாழ்த்துகள்

நன்றி திரு.தமிழ் உதயம்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.

எல்லாமே படித்த கதைகள்தான் சிவா. திரும்பவும் நினைவுபடுத்துவது நல்லதுதானே. நன்றி.

நன்றி ராஜேஸ்வரி.

மகாகவியின் கவிதைகளில் நிறைய தெரிந்து கொள்கிறேன். நன்றி திரு.சண்முகவேல்.

அனுபவ முதிர்ச்சியும் அந்த கால மகளிரின் அரசியல் பார்வையும் இலக்கியத்தில் நிறைய படித்திருக்கிறேன் சார். நன்றி.

வணக்கம் வருகைக்கு நன்றி மலிக்கா.

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

சுவையாகப் போகிறது கட்டுரை. சொல்லும்முறை நன்றாக இருக்கிறது. விரைவில் இம்முயற்சி புத்தகமாக வரவேண்டும். வாழ்த்துக்கள். சாகம்பரி என்றால் என்ன பொருள்?

வந்து பார்க்கிறேன் நன்றி உலகசினிமா ரசிகன்

இதுபோன்ற புத்தகம் வெளீயிடும் எண்ணம் உள்ளது. labelபடி சிறிய புத்தங்கள் தயாரித்து, பரிசாக கொடுக்கலாம் என்று இருக்கிறோம். உ-ம், திருமண தம்பதிகளுக்கு - மணவிழா வெள்ளிவிழா.... இளைஞர்களுக்கு- மனவள கட்டுரைகள். நேரமின்மை காரணமாக தற்சமயம் முடியவில்லை. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார் சாகம்பரி - எல்லா வளங்களும் பொருந்தியவள் என்று பொருள், வீட்டுக்குள் அழைக்கும் செல்லப் பெயர். அலுவலகப் பெயர் வேறு சார்.

Respected Madam,
வடிகால் இறுதிப்பகுதி வெளியிட்டுள்ளேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
நேர அவகாசம் இருப்பின்
படித்துவிட்டு, கருத்துக்கூறினால் மகிழ்ச்சியடைவேன்.
அன்புடன் vgk

ஐயையோ..இது தைமூர் கதைன்னு எங்க
டீச்சர் சொல்லியிருக்காங்க...

வணக்கம் ராமமூர்த்தி சார். இப்படியா சந்தேகத்தை கிளப்பிவிடறது. நானும் படிச்ச விசயத்தை வைத்துத்தான் எழுதினேன். pleas refer: http://www.freeindia.org/biographies/greatpersonalities/chanakya/page11.html. அப்போதெல்லாம் சப்பாத்தி என்று சொல்லமாட்டார்கள். அதனால் அடை என்று குறிப்பிட்டே