மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

போராட்டந்தாங்க......
பூமிய பார்க்கவே
ஆரம்பிச்ச போராட்டம்
அங்க தொடங்கி
அடுத்த முயற்சியாக...
புவியீர்ப்பு சக்தியை
எதிர்த்து நிக்கணும்,

மத்தவங்கள முந்திகிட்டு
விழுந்திடாம ஓடணும்,
பாதை மறக்காம மாறாம
நெனப்பு மாறாம போகணும்,
கடைசி வரைக்கும் போக
கல்லுமுள்ளு பார்க்கணும்,
நேரத்துல போகாட்டியும்
நேர்மையா முடிக்கணும்,

சில சமயம்,
மனசு ஒத்துக்கிட்ட
தோல்விகூட அம்மாதாங்க,
பாத்துப்போடா மகனேங்கும்!
அநியாய வெற்றியோ
தலைமேல ஏறி நின்னு
ஆட்டம் போட வைக்கும்.
 
சாலையில ஓடற தண்ணியா 
பயனில்லாம போயிடும்.
 

ஆனா ஒண்ணு
வெற்றியோ தோல்வியோ
மனசாட்சியோட தராசுமுள்
அங்கீகாரம் இல்லாட்டி
அடி மனசில நிண்ணு
ஆண்டவன் போல
பேசிகிட்டே இருக்கும்ங்க

20 comments:

ஹ்ம்ம் அனைத்தும் உண்மை

போராட்டந்தாங்க......
உண்மைப் போராட்டம் அருமைங்க. பாராட்டுக்கள்.

அநியாய வெற்றியோ
தலைமேல ஏறி நின்னு
ஆட்டம் போட வைக்கும்.
சாலையில ஓடற தண்ணியா
பயனில்லாம போயிடும்.//

பாதை மாறாமல் நேர்மை தவறாத வெற்றியின் அருமை எடுத்துரைத்த சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழி.

உங்களுடைய இதற்கு முந்தைய கட்டுரையும் இந்த கவிதையும் படித்தேன் ரசித்தேன். பிறகு புரிந்து கொண்டேன், எழுதுபவர் ஒரு ப்ரொஃபசர் என்று. நன்றாகப் பாடம் எடுக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம். எல்லோரும் எதையாவது செய்துவிட்டு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்திருக்கிறேன் என்கிறார்கள். அது சில சமயம் பாதிக்கப் பட்டவருக்கு உடன்பாடாக இருப்பதில்லைநல்லது செய்பவனும் தீமை செய்தவனும் மனசாட்சியை துணைக்கழைக்கிறார்கள். இந்த மன சாட்சிக்கு அளவு கோல் ஏதும் இல்லையா.? என் பதிவுக்கு முதல் வருகை தந்ததற்கு நன்றி.

ஆமாம் சார். மிக்க நன்றி.

பாதை மாறாமல்.... // பாராட்டிற்கு நன்றி. ஒத்த எண்ணங்களுடையவர், என்னை தோழி என்றமைக்கும் நன்றி.

முதல் வருகைக்கு நன்றி சார். அனுபவமிக்க உங்களின் கேள்விக்கு , பதில்தர ஓரளவிற்கு முயற்சிக்கிறேன். மனம் பற்றி விளக்கங்கள் ' தன்னை மறத்தல்...; கட்டுரையில் தந்துள்ளேன். முடிந்தபோது படித்து கருத்து சொல்லுங்கள் சார்.
'மனசாட்சிபடி செய்தேன்" என்பதே 'யாரோ'விற்கு சமாதானம் சொல்வது போலிருக்கிறதே சார். பொதுவாக மனசாட்சியை கேடயமாகவோ ஆயுதமாகவோ பயன்படுத்துவதுதான் நடக்கிறது, கடவுளாக மதிப்பதில்லை. உறக்கம் என்பது இறைவனின் அருகாமைதானே. எனவே, மனசாட்சிக்கு அளவுகோள் அன்றைய இரவும் அதை தொடர்ந்து வரும் இரவுகளின் உறக்கமும்தான். நன்றி சார். அடிக்கடி வாருங்கள்.

/வெற்றியோ தோல்வியோ
மனசாட்சியோட தராசுமுள்
அங்கீகாரம் இல்லாட்டி
அடி மனசில நிண்ணு/

’ரம்பம்போல அறுத்துக்கிட்டே இருக்கும்’ன்னு கூட சொல்லலாமோ?

நல்ல பதிவு. பாராட்டுக்கள், மேடம்.

நேரத்துல போகாட்டியும்
நேர்மையா முடிக்கணும்,///



மிகவும் ரசிச்சேன் ரசிச்சேன்....!!!

வணக்கம் டீச்சர்.
மிக இயல்பான
தெளிவான
கவிதை
எதார்த்தம்
நிகிழ வைக்கிறது

//ஆனா ஒண்ணு
வெற்றியோ தோல்வியோ
மனசாட்சியோட தராசுமுள்
அங்கீகாரம் இல்லாட்டி
அடி மனசில நிண்ணு
ஆண்டவன் போல
பேசிகிட்டே இருக்கும்ங்க//
நல்ல பதிவு. பாராட்டுக்கள்

//ஆனா ஒண்ணு
வெற்றியோ தோல்வியோ
மனசாட்சியோட தராசுமுள்
அங்கீகாரம் இல்லாட்டி
அடி மனசில நிண்ணு
ஆண்டவன் போல
பேசிகிட்டே இருக்கும்ங்க//

அருமை.

ரொம்ப சரி சார். ரம்பம் மெதுவா அறுத்துக்கிட்டே இருக்கும். தண்டனை காலம் அதிகம். தெய்வம் நின்....று கொல்லும் என்பதும் அதுதான்
நன்றி சார்.

மிகவும் ரசிச்சேன் ரசிச்சேன்....!!!//ரசனைக்கு நன்றி திரு.மனோ.

வணக்கம் திரு.சிவா. வருகைக்கு நன்றி. தொடர்வதற்கும் நன்றி

வணக்கம் மாலதி. பாராட்டிற்கு நன்றி

கருத்துரைக்கு நன்றி திரு சண்முகவேல்.

தொடர்ந்து பணி சுமை இருப்பதால் சரிவர மற்றவர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை. நாளையில் இருந்து விடுபட்ட பதிவுகள் அனைத்தையும் படித்துவிடுகிறேன். அனைவருக்கும் நன்றி

//மனசு ஒத்துக்கிட்ட
தோல்விகூட அம்மாதாங்க,
பாத்துப்போடா மகனேங்கும்!//

எத்தனை நிதர்சனம். ஆழ்மனம் தொடும் அற்புத வரிகள்.

மனச்சாட்சியோட அங்கீகாரம் இல்லாட்டா
எல்லாமே போராட்டம் மட்டும் இல்லை
அடைந்தவை எல்லாம் வீண்தான்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்