மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    பிரச்சினைகளை கையாள்வது எப்படி? உண்மையில் மேலாண்மை தொடர்புடைய ஒரு தலைப்பு. நமக்கு பயன்படுமா என்று பார்க்கலாம். கையாள்வது என்றால் பிரச்சினை வராமல் தடுப்பது, , பிரச்சினையை வரும்போது சரிவர எதிர்கொள்வது, வந்து விட்டால் தீர்த்துக்கொள்வது ஆகியனவாகும்.

   முதலில் பிரச்சினை என்றால் என்ன? நம்முடைய சிந்தனையை சிக்கலாக்கி செயலை,  நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் முன்னேற்றத்தை  தடுக்கும் விசயங்கள்  இதனால் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாமல் ஒரே இடத்திலேயே தேங்கி கிடக்கும் அபாயம் நேரிடலாம். அது விளைவுகளை சந்திக்க பயப்படும் நம்முடைய உள்மனதின் தடைகளாகவோ, முக்கியமானவர்களுடன் ஏற்படும் மனஸ்தாபமாகவோ, மற்றவர்களின் தேவையில்லாத குறுக்கிடல்களாகவோ,  முட்டுச்சந்தில் சிக்க வைக்கும் சூழ்நிலைகளாகவோ இருக்கலாம். சிலர் இவற்றை எதிர்கொள்ள பயந்து தானாகவே சரியாகிவிடும் என்று அமைதி காப்பார்கள். அது நல்லதல்ல. கண்டிப்பாக சரி செய்தே தீருவேன் என்கிற மனபான்மைதான் வெற்றியின் ரகசியம்.

பிரச்சினையை வரவிடாமல் தடுப்பது :  இதற்கு நம் உள் மனம் ஒரு பெரிய பட்டியலையே -data base - தயார் செய்து வைத்திருக்கும். எல்லாம் கடந்தகால தோல்விகளின் பதிவுகள்தான். நம்முடைய அனுபவம் என்றில்லாமல் மற்றவர்களின் அனுபவங்களும் பதியப்படும். ஒரு விபத்து நடைபெறுவதை பார்க்கும்போதே ஏன்? எப்படி? தவிர்த்திருக்கலாமோ? என்று பல விசயங்கள் கேள்விகளாக நம்மில் பதிக்கப்படுகின்றன. அதுபோலவே சிக்கலை உருவாக்கும் சிலரைக் கண்டாலே ஒதுங்கிவிடுவோம். பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும் உணர்ந்துவிடுவோம். பொதுவாக  பிரச்சினைகள் உருவாவது எல்லை மீறிய சந்தர்ப்பங்களால்தான். எல்லைகளை சரிவர பராமரித்தால், மீறாமல் இருந்தால் இவற்றை தவிர்த்துவிடலாம்.  வரவு மீறிய செலவு - பொருளாதார சிக்கல், கட்டுப்பாடற்ற செயல்கள், வார்த்தைகள் - உறவு முறை சிக்கல்கள், வரைமுறையற்ற சிந்தனைகள் - சிக்கலுக்கு தூதுவிடுகின்றன. சில சமயம் 'அவரு பெரிய அப்பா டக்கரா?' என்று கேட்டுக் கொண்டே சமாளிக்கிறேன் பேர்வழி என்று தானாகவே போய் சிக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனம்கூட ஒரு தலைவலி உருவாக காரணமாகிவிடும்.    

பிரச்சினையை எதிர் கொள்வது : இதுவும் டேட்டாபேஸ் சார்ந்த செயல்தான். தவிர்க்கமுடியாமல் 'வஞ்சனை பேய்'களிடம் மாட்டிக்கொண்டாலும் ரொம்பவும் சாமர்த்தியமாக தப்பித்துவிட வேண்டும் -  அப்போதைக்கு தலையை ஆட்டி வைப்பது, வாயை இறுக மூடிக்கொண்டு சிரிப்பை வரைந்து கொண்டு , முழுகட்டுப்பாட்டையும் கையாண்டு  அந்த நிமிடங்களை கடந்துவிட வேண்டும். , .' 'லாகவம் பயிற்சி செய்' என்று மகாகவி சொன்னதும் இதைத்தான் போலும்.  அலுவலகத்தில் இது போன்ற வழிமுறைகள் நம்மை எதிர்பாராத சிக்கலில் இருந்து காப்பாற்றும். சில சமயம் வேண்டுமென்றே சீண்டி பிரச்சினைக்குள்ளாக்குவார்கள். நாமும் உணர்வுகளின் பிடியில்  சிக்கிக் கொண்டு தவறாக வெளிப்படுத்தி பொதுவில் ஒரு கெட்ட பெயரை பதிவு செய்து கொள்வோம் - சரியான முரட்டுப் பேர்வழி, வாயாடி, கோபக்காரன், யார் கூடவும் ஒத்துபோக முடியாதவன்..... 360 டிகிரி மதிப்பிடல்  நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் இது போன்ற பெயர்கள் நம்மை வழி மாற வைக்கும். வீட்டிலேயும்தான், யாரிடமோ கோபப்பட, குழந்தைகள் நம்மீது கோபக்கார முத்திரை குத்தி ஒதுங்கிவிடுவார்கள், வளர்ந்தபின் ஒதுக்கி விடுவார்கள். இது மனிதர்களால் வரும் பிரச்சினையை சமாளிப்பது. 

    சில சமயம் சூழ்நிலையே  பிரச்சினையாக உருவாக்கும். 'அந்த நிமிடத்தை கடப்பதுதான்' காப்பாற்றும் மந்திரம். இதற்கும் அந்த டேட்டாபேஸ்தான் உதவும். பேருந்தை தவறவிட்டாச்சு, அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல என்ன செய்யலாம், ஆட்டோவில் செல்லலாம், நண்பனிடம் உதவிகேட்கலாம் - உதவக்கூடிய நண்பனின் பட்டியல் இருக்க வேண்டும்.தாமதமாக வர மேலதிகாரியிடம் அனுமதி கேட்கலாம் அல்லது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் - தாமதமாக சென்று காரணம் சொல்வதைவிட இது பரவாயில்லை. எதுவுமே செய்யாமல் திகைத்து நிற்பது பதட்டத்தை அதிகரிக்கும். கூடவே இருக்கும் சிலர் 'அப்பவே சொன்னேன் ' என்று கோபத்தை வேறு கிளறுவார்கள். அது வேறு பிரச்சினயை கிளப்பும்.

சரி மூன்றாவதான பிரச்சினையை களைவது எப்படி?  முன்னர்  குறிப்பிட்ட இரண்டிற்கும் அனுபத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவை மந்திரமாக செயல்படும். இதற்கு தந்திரம் வேண்டும் - அதைத்தான் சாணக்கிய தந்திரம் என்பார்கள். அடுத்த பதிவில் பார்க்கலாம்.

8 comments:

நன்றாகத் தொடங்கியிருக்கிறீர்கள். தொடரட்டும். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது தமிழ்மொழி. இதுதான் பிரச்சினையின் அடிப்படை வேர். அகப்பேய் சித்தர் சொன்னதுபோல் அகத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். அதைப் பேயாக்கி ஆடவிடக்கூடாது என்பார். தொடர்ந்து வாசிப்பேன்.

நன்றாகத் தொடங்கியிருக்கிறீர்கள். தொடரட்டும். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது தமிழ்மொழி. இதுதான் பிரச்சினையின் அடிப்படை வேர். அகப்பேய் சித்தர் சொன்னதுபோல் அகத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். அதைப் பேயாக்கி ஆடவிடக்கூடாது என்பார். தொடர்ந்து வாசிப்பேன்.

சிறப்பான பதிவு.தொடருங்கள்.

//பிரச்சினைகளைக் கையாள்வது என்றால் பிரச்சினை வராமல் தடுப்பது, பிரச்சினையை வரும்போது சரிவர எதிர்கொள்வது, வந்து விட்டால் தீர்த்துக்கொள்வது//

அனைவரும் அறிந்து கொண்டு இதில் கூறியுள்ளது போல செயல்பட்டால்,
பிரச்சனைகளே அநேகமாக இருக்காது.

நல்ல பயனுள்ள கட்டுரை. தொடருங்கள்.

உண்மையான கருத்து சார். தொடர்வதற்கு நன்றி

நன்றி திரு.சண்முகவேல்

நல்ல பயனுள்ள கட்டுரை. தொடருங்கள்.
//வணக்கம கருத்துரைக்கு நன்றி VGK ் சார்.

சந்தோசம் ..
ஒரு சில நல்ல பதிவுகள் வரவில்லை என்ற எண்ணம் இப்போது
குறைந்து இருக்கிறது
தங்கள் பணிக்கு
எனது பணிவான வணக்கங்கள்