மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


             இந்த முறை நாம் புரிந்து கொள்ளப்போவது எதையுமே எதிர்ப்போக்காய் செய்யும் பெரியவர்களை. அவர்கள் சகிப்புத்தன்மை இல்லாத முரட்டுக்குழந்தைகள் - உணர்ச்சிபூர்வமாக பேசினால் , Emotional blackmail செய்வது போலாகிவிடும். பொதுவாக வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து தன்னுடைய கடுமையான முயற்சியினால் முன்னேறியவர்கள் இந்த வகையினர். கடந்த கால அனுபவங்களின் தோல்வி வெற்றி காரணமாக    சில கோட்பாடுகளை வரையறுத்து வைத்திருப்பார்கள். அதனை நாம் மாற்ற முயற்சிக்கும் போது தகுந்த காரணங்களை விளக்கவேண்டியிருக்கும். பெரும்பாலும் அவர்களை முதலில் பேசவிட்டு அவர்களின் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒப்புதல் இல்லாமல் போனால்கூட குறுக்கிட்டு பேசக்கூடாது (எத்தனையோ முறை நம்முடைய அலுவலக அதிகாரிமுன் செய்திருப்போமே அதுபோலத்தான்). . அவர் பேசிமுடித்தபின் நம்முடைய சிரமங்கள், பின் விளைவுகள் ஆகியவற்றை கூறவேண்டும். அதற்கும் சில சமயம் செவி மடுக்கப்படாது. விவாதம் என்பதே பிரச்சினையை தலைகீழ் ஆக்கிவிடும்.  

             இந்த வகை பெரியோரிடம் அடிக்கடி கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டும் - ஒரு நாளிற்கு ஒரு முறையாவது. எப்போதுமே தொடர்பிலிருப்பது நம்முடைய பிரச்சினைகளை சட்டென புரிந்து கொள்ள உதவும். குடும்பம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது - அப்படி ஒரு தோற்றமாவது இருக்கவேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லதாக இருக்கும். அவர்களோடு கை கோர்த்து நடப்பதுதான் நல்லது. உண்மை என்னவென்றால் பிள்ளைகளின் நலனுக்காக பெரிய போராட்டமே நடத்தி அவர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்திருப்பார்கள். நாமும், அவர்கள் கடந்து வந்த பாதையின் சாதனை, வேதனைகளை புரிந்து வைத்திருப்போம். அதனை நம் துணையிடமும் பிள்ளைகளிடமும் தெளிவுபடுத்தி மரியாதையை பெற்றுத்தருவதும் நம் கடமை. " அவர் பிள்ளைதானே நான் எனக்கும் பிடிவாதம் உண்டு" என்றேல்லாம் போட்டிபோடாமல் விட்டுக்கொடுத்து பழக வேண்டும். எந்த நேரமும் மரியாதையை தேடிக்கொண்டே இருப்பார்கள்.

             பெற்றோர் எப்படியிருந்தாலும் நம் பராமரிப்பில் இருக்கும்போது, தனி கவனம் தேவை. முதல் பாகத்தில் சொன்னதுபோல "பாசம் காட்டி ஏமாற்ற முடியாது" . தனித்து நின்றல் அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. முதுமையின் காரணமாக அவர்களின் தனிமை பழக்கப்படாத போது தீவிர மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். இன்னும் மரியாதை குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் ஐம்பது வயதில்கூட தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவம் உடையவர்கள். பொதுவாக இது போன்ற aggerssive வகையினரின் கடைசி நாட்கள்கூட போராட்டமாக இருக்கும். அவர்களை மாற்ற முடியாது, நம்மை மாற்றிக்கொள்வதால் இனிய சூழ்நிலையினை உருவாக்க முடியும்.

              எழுதவே தயக்கமாக இருந்தாலும் தேவையிருப்பதால் சொல்கிறேன். ஒரு உயிர் பூமிக்கு வருவதற்கு தரப்படுகிற அத்தனை முக்கியத்துவமும் அந்த உயிர் மண்ணைவிட்டு செல்லும்போதும் தரப்படவேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையின் கடமையுமாகும். அதை சரிவர செய்யாவிட்டால் குற்றம் உள்ள நெஞ்சு நம்முடையதாகிவிடும். பிறகு பரிகாரம் தேடி ராமேஸ்வரம் போகலாமா காசி போகலாமா என்று ஜாதககட்டை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்படும்.

1 comments:

// நமக்கு ஒப்புதல் இல்லாமல் போனால்கூட குறுக்கிட்டு பேசக்கூடாது (எத்தனையோ முறை நம்முடைய அலுவலக அதிகாரிமுன் செய்திருப்போமே அதுபோலத்தான்). . அவர் பேசிமுடித்தபின் நம்முடைய சிரமங்கள், பின் விளைவுகள் ஆகியவற்றை கூறவேண்டும்//

அருமையான உதாரணம்.
பாராட்டுக்கள்.

//நாமும், அவர்கள் கடந்து வந்த பாதையின் சாதனை, வேதனைகளை புரிந்து வைத்திருப்போம். அதனை நம் துணையிடமும் பிள்ளைகளிடமும் தெளிவுபடுத்தி மரியாதையை பெற்றுத்தருவதும் நம் கடமை."//

நல்ல அறிவுரை.

//எழுதவே தயக்கமாக இருந்தாலும் தேவையிருப்பதால் சொல்கிறேன். ஒரு உயிர் பூமிக்கு வருவதற்கு தரப்படுகிற அத்தனை முக்கியத்துவமும் அந்த உயிர் மண்ணைவிட்டு செல்லும்போதும் தரப்படவேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையின் கடமையுமாகும். அதை சரிவர செய்யாவிட்டால் குற்றம் உள்ள நெஞ்சு நம்முடையதாகிவிடும். பிறகு பரிகாரம் தேடி ராமேஸ்வரம் போகலாமா காசி போகலாமா என்று ஜாதககட்டை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்படும்.//

உண்மையே; தாய் தந்தையரை சரிவர கவனிக்காமல் விட்டவர்கள், ஏதோ ஒரு வகையில் கஷ்டப் படுவதைக் கண்கூடாகக் காணமுடிகிறதே!

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி, மேடம்.