மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்




முகச்சுளிப்புடன் வெளியான
சில வார்த்தைகளின் கசப்பு
அறையில் நிரம்பி வழிந்து
வானம் வரை நிறைக்கிறது.
விழி உயர்ந்த பார்வையில்
கூச வைக்கிறது வெறுப்பு !
மேக தேவதை கை வீசி
மழை பொழிய வைக்க,
சில வார்த்தைகள் கரைந்து
வீட்டின் மேலேயே விழ
முடிந்துபோன அத்தனையும்
மறுபடியும் ஆரம்பிக்கும்
பயம் வர, நல்ல வேளையாக
சேமிக்கப்படாத மழை நீர்
குழாய் வழியாக வழிந்து
வீதியில் ஓடி கலக்கிறது.

37 comments:

வானம் வரை நிறைக்கிறது.
விழி உயர்ந்த பார்வையில்
கூச வைக்கிறது வெறுப்பு !// ஒரு நல்ல வார்த்தை பிரயோகம் சகோ..

சில வார்த்தைகளை கண்டுக்காமல் போனால் நல்லது தான்.... சிம்ப்ளி சூப்பர்


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

நல்ல அர்த்தமுள்ள கவிதை. வானம் வரை நாம் அனுப்பி வைத்த கசப்பு வார்த்தைகளே நமக்கு மழை நீராய்த் திரும்ப வருவதால் தானோ என்னவோ, மழைநீரை சேமிக்காமல் மக்கள் வீணாக்குகிறார்கள் என்று வஞ்சப்புகழ்ச்சி அணி போல இந்தக் கவிதையில் அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
தமிழ்மணம்: 2 vgk

வார்த்தை ஆளுமையும் உவமைப் பிரயோகங்களும் விழி விரிய வைக்கும்படி உள்ளது.தவறாமல் இலக்கை நோக்கி பயணிக்கும் கருத்தடங்கிய கவிதையாய் ஒரு விதை.

மனதினுள் அந்த வார்த்தை சேர்த்து வைத்து வெறுப்பை வளர்க்காமல் அக்கணமே மறக்க வேணும எனும் அர்த்தம் தரும் பதிவு அருமை சகோ

த.ம 3

http://thulithuliyaai.blogspot.com/2011/11/blog-post_10.html

சில வார்த்தைகள் கரைந்து
வீட்டின் மேலேயே விழ
முடிந்துபோன அத்தனையும்
மறுபடியும் ஆரம்பிக்கும்/

ஆழமுள்ள அர்த்தம் நிரம்பி வழியும் கவிதை. பாராட்டுக்கள்..

உங்கள் கவிதை அருமை அதற்கு வை.கோபாலகிருஷ்ணன் சார் சொன்ன கருத்தும் அருமை இருவருக்கும் எனது வாழ்த்துகள்

மழை நீர் சேமிக்காதவர்களை மறைமுக சாடலாகவும் பார்க்கலாம் போலிருக்கிறது கவிதை... அருமை

வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு, வெறுப்புக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமோ என்கிற பயம் குறையும் பொழுது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கும்... மனதை கவர்ந்த கவிதை

சில வார்த்தைகள் - பல அர்த்தங்கள்.

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

சங்கர பாஷ்யத்தில் ஒரு விதி படித்த நினைவு
சூன்யத்திலிருந்து ஒரு பொருளை புதியதாக உருவாக்கவும் முடியாது
உருவான பொருளை உருமாற்ற முடியுமே ஒழிய
முற்றிலுமாக அழிக்கமுடியாது என்று
வெறுப்பில் உருவான வார்த்தைகளுக்கும்
இந்த விதிகளுக்கும்தான் எத்தனைப் பொருத்தம்
மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

த.ம 8

அர்த்தமுள்ள கவிதை

வார்த்தைப் பிரயோகங்கள் அருமையாயிருக்கு.. அசத்தல் கருத்தும் கூட.

மனதை நிறைத்த கவிதை அருமை.வார்த்தைகள் சீராக அமைந்திருக்கிறது.

மிக்க நன்றி. திரு. கருண்

கருத்துரைக்கு மிக்க நன்றி பிரகாஷ்.

தங்களின் விளக்கம் வேறு கோணத்தை தொட்டு கவிதையின் மற்றொரு பரிமாணத்தை காட்டிவிட்டது. மிக்க நன்றி சார்.

மிக்க நன்றி ராஜி.

மேலும் வெளிப்படுத்திய வார்த்தைகளின் பாதிப்பும் மிக நீண்டு இருப்பதையும் உணர வேண்டும். நன்றி திரு.M.R

புரிதலுக்கு மிக்க நன்றி தோழி.ராஜேஸ்வரி.

மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

தங்கள் கருத்து சரிதான் ராஜேஷ். மிக்க நன்றி.

@Rathnavel
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்.

அருமையாக சொல்லிவிட்டீர்கள் ரமணி சார். எனக்கு பட்டிணத்தாரின் பாடல்கள்தான் தூண்டுதல். மிக்க நன்றி.

பாராட்டிற்கு நன்றி அமைதிச்சாரல் மேடம்.

மிக்க நன்றி திரு. சண்முகவேல்.

@அர்த்தமுள்ள கவிதை
நன்றி திரு குமார்.

//முகச்சுளிப்புடன் வெளியான
சில வார்த்தைகளின் கசப்பு
அறையில் நிரம்பி வழிந்து
வானம் வரை நிறைக்கிறது.
விழி உயர்ந்த பார்வையில்
கூச வைக்கிறது வெறுப்பு//


நல்ல கவித்துமான வரிகள்!
பாராட்டுக்கள்!

புலவர் சா இராமாநுசம்

வெறுப்பை உமிழ்ந்த முகங்களை மனக்கண்ணில் காட்டி, அதன் மறுசுழற்சியை மிக அழகாகப் புரியவைத்துள்ளீர்கள். வீதியில் ஓடும் நீரோடு சில அன்புவார்த்தைகளும் கலந்து அதன் வீரியம் குறைக்கட்டும். அற்புதமாய் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் சாகம்பரி.

great madam

அருமையான கவிதை சாகம்பரி மனசை ஊடுருவியது

அருமையான சொல்லாடல் உங்கள் கவிதையில்க்
கண்டேன் .வாழ்த்துக்கள் மிகக் நன்றி சகோதரி
பகிர்வுக்கு .

எளிமையான வரிகளில் வலிமையான கருத்துக்கள் ...

nalla kavithai.... please read my blog www.rishvan.com