மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

எப்போதாவது தனிமையில்
திரும்ப வரும் கேள்வி இது
ஆராய்ச்சி செய்யும் அறிவு
தேடலை ரகசியமாய் வைத்தது
சூழ்நிலை ஓட்டத்தில் நான்
சில வேளைகளில்...
நொடிகளின் வலையில் சிக்கி..
சில வேளைகளில்...
கடிகார முள் தொண்டையில்...
அந்த நேர துடிப்பில்
கேள்வி மறைந்திட நிம்மதியாய்
மாய உறக்கத்தில் நான்.
மறந்து போன கேள்விக்கு
விடை கிட்டாவிடினும்
கடைசியில்.......
கேள்வியாவது கிட்டுமா?


 

9 comments:

வடை எனக்குத்தானே....

ஆம். ஆனால், மறந்து போன கேள்வி இதுவல்ல. நன்றி திரு.மனோ

கேள்விகள் கிட்டாது
காரணம்..
பதிலென்று ஏதுமில்லை இங்கு..!!

தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை

வணக்கம். வருகைக்கு நன்றி திரு.ரங்கன்.

ஒருவேளை கிடைத்தால்கூட தேடியது அதுதான் என்பதை உணரக்கூட முடியாதே. நன்றி. திரு.எல்.கே

கேள்வியே மறைந்திட்டால் பதிலே தேவையிருக்காதே.

எதையோ மற்ந்துவிட்ட உள்ளுணர்வு உறுத்திக்கொண்டேயிருக்கிறதே. ராஜேஸ்வரி.

எப்போதாவது விழித்துக் கொள்ளும்போது , தேவைப்படுமோ என்ற உள்ளுணர்வுதான். ஊருக்கு கிளம்பும்போது தோன்றுமே, அதுபோல.
எதற்கு பிரச்சினை ஒரு பத்து கேள்வி கேளுங்கள் நினைவு வருகிறதா என்று பார்க்கிறேன்.