மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

ஒரு ஞாயிற்று கிழமை காலை
    அன்னையும் தந்தையுமாய்
சின்னஞ்சிறிய அழகு குடும்பம்
   குடிவந்தபோது் சுவாசம் எடுத்தது.

நோயில் படுத்தாலும் படுத்தாத
     தென்றலுக்கும் விசிறி விடும்
வஞ்சினம் பேசாத மொழியோரால்
     இதயம் இருந்ததை உணர்ந்தது.

பூக்குவியலென குட்டி தெய்வம்
     மழலை குரல் குழலென
விடியல் பூபாளம் பாடியது
    ஐம்புலனில் ஒன்றை சரி செய்தது

ஆணும் பெண்ணுமாய் இயற்றிய
    அன்பின் மதமும் அதன் நெறியும்
காற்றலையில் வெளியெங்கும் பரவி
   செங்கலுக்குள்ளும் இரத்தம் பாய்ந்தது

குட்டி தெய்வங்கள் ஓடி ஒளிந்திட
   பார்த்துவிடாமலிருக்க கண்ணை
கைவைத்து மூடிக் கொண்டது
   உயரத்திலிருந்த வீட்டின் நெற்றிக்கண்

தாத்தா பாட்டியினை பயமுறுத்தி
    அம்மாவினை சீண்டி எழுப்பி
அப்பாவை தூண்டிவிட்டு ஓடி
    அண்ணன் கையிலும் சிக்காமல்
படி தாண்டி தடுக்கி விழுந்திட..

 'கடவுளே" என்று அலறியது 
வீடு என்றொரு தேவதை

13 comments:

இது புதுக்கவிதையா? மரபுக்கவிதையா? நல்லாருக்கு !

அருமை

அசத்தல்....

புதுக் கவிதைதான். கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்.

எல் கே said...

அருமை// நன்றி திரு.எல் கே

பாரட்டிற்கு நன்றி திரு.மனோ.

”வீடு என்றொரு தேவதை”
அழகாக இருந்தது.
பாராட்டுக்கள்.

வணக்கம் . வருகைக்கும் முதல் கருத்துரைக்கும் நன்றி ஐயா. தங்கள் கருத்துரைகள் இந்த பதிவுகளை வளப்படுத்தும்.

கவிதை அருமை...

ஒட்டு பட்டைகள் இணைக்கலாமே?

நன்றி திரு.பிரகாஷ். முதலில் இணைத்திருந்தேன். வலைப்பூவின் டிசைனை மாற்றியமைத்தபின் மீண்டும் இணைக்க முடியவில்லை.

தென்றலுக்கும் விசிறி விடும்//
இதமான வார்த்தைப் பிரயோகம்.மனதை வருடுகிறது.பாராட்டுக்கள்.

//தென்றலுக்கும் விசிறி விடும்//
இதமான வார்த்தைப் பிரயோகம்.மனதை வருடுகிறது.பாராட்டுக்கள்.// நன்றி இராஜராஜேஸ்வரி