மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இலக்கில்லாமல் சுற்றும்
உலகத்திற்குத் தெரியுமா
இதுவரை சுற்றிய கணக்கும்
இனி சுற்றப்போகின்ற கதையும்

என்றைக்கு ஆரம்பித்ததோ
கவலைப்படாமல் சுற்றுகிறது
தன்னை சுற்றிக் கொள்வதுடன்
பிள்ளை வரம் வேண்டி
அரச மரம் சுற்றும் பெண்போல்
சூரியனையும் மூச்சு வாங்க
உருண்டு உருண்டு சுற்றுகிறதே
எனக்குதான் மெத்த கவலை

சூரியனிற்கு அருகில் நின்று
சுற்றிக் கொண்டிராமல்
ப்ளூட்டோ நெப்டியூன் போல
பதின் வயதுப் பெண் பின்
சுற்றும் வாலிபனைப்போல
இடைவெளிவிட்டு சுற்றலாமே?
ஒவ்வொரு சுற்றிற்கும்
எனக்கு கணக்கு இருக்கிறதே

ஒரு சிட்டையில் குறித்து கொண்ட
மளிகைக் கடைக்காரன் போல
வரவும் செலவும் சரியாகிறதே
உலகத்திற்கு கணக்கில்லையா?




15 comments:

அடடடடா அருமை அருமை....

//சூரியனிற்கு அருகில் நின்று
சுற்றிக் கொண்டிராமல்
ப்ளூட்டோ நெப்டியூன் போல
பதின் வயதுப் பெண் பின்
சுற்றும் வாலிபனைப்போல
இடைவெளிவிட்டு சுற்றலாமே?
ஒவ்வொரு சுற்றிற்கும்
எனக்கு கணக்கு இருக்கிறதே///


சூப்பர்.....

கணக்கிருக்கிறதே .. கணக்கில்லாமல் போனால் மாற்றங்கள் எது புவியில்

அருமையான கேள்வியில் முடித்துள்ளீர்கள். எப்படியோ வரவும் செல்வும் சரியானால் சரியே.

கவிதை செம கலக்கல்

//எனக்குதான் மெத்த கவலை //

இதுக்கெல்லாம் எதுக்கு கவலைப்படறீங்க ?கவிதை நல்லாருக்கு .

நம் கவலையெல்லாம் இந்தப் பூமிக்கு எங்கே தெரிகிறது? அதுபாட்டுக்கு மண்டை கிறுகிறுத்துச் சுற்றிக்கொண்டிருக்கிறது.கவலையைக் கவிதையாக்கியவிதம் அழகு, சாகம்பரி.

யுரேனஸில் 30,800 நாட்களும் புளுட்டோவில் 90580 நாட்களும்தான் ஒரு வருடமாம். பாராட்டிற்கு நன்றி திரு.மனோ

ஆமாம், நன்றி திரு.எல்.கே

சரியானானால் சரிதான் // நன்றி ஐயா

//கவிதை செம கலக்கல்//
நன்றி திரு.பிரகாஷ்

//இதுக்கெல்லாம் எதுக்கு கவலைப்படறீங்க ?கவிதை நல்லாருக்கு //வயதாகின்ற கவலை வராதா ? நன்றி திரு.சண்முகவேல்

கீதா said...
நம் கவலையெல்லாம் இந்தப் பூமிக்கு எங்கே தெரிகிறது? அதுபாட்டுக்கு மண்டை கிறுகிறுத்துச் சுற்றிக்கொண்டிருக்கிறது.கவலையைக் கவிதையாக்கியவிதம் அழகு, சாகம்பரி.//
கருத்துரைக்கு நன்றி கீதா.

காரணமான கவலைதான்,,, :)

நல்ல கவிதை.

உலகம் கணக்குல்லாமல் சுற்றட்டும். அதனோடு நாமும்...