பொதுவாகவே நம் சமுதாயத்தில் குறைந்து வருகின்ற மனிதாபிமானத்தினால் பாதிக்கப்படுபவர்கள் முதியோரும், குழந்தைகளும்தான். அனாதரவான குழந்தைகள் மீது செலுத்தும் கனிவு பார்வைகள் முதியோரிடம் இல்லை என்ற கவலை எனக்குண்டு. எப்படி ஒரு உயிரை வரவேற்று வாழவைக்கிறோமோ அது போலவே ஒரு உயிரையும் கடைசி நாள் வரை காப்பாற்றி நல்லபடியாக அனுப்பி வைப்பது மனித சமுதாயத்தின் கடமை என்று நினைத்தேன். அப்படியில்லாத முதியோருடைய வாழ்வியல் சிக்கல்களிடம் சமுதாயத்தின் பார்வையை திருப்ப விரும்பினேன். சில சமயம் personality development வகுப்பில் என் மாணவர்களிடம் எடுத்து சொல்வேன். இன்னும் பரவலாக செய்ய வேண்டும் என்று விரும்பி ஆரம்பித்தது இந்த வலைப்பூ. இந்த ஆரம்பத்திற்காக என் மகன் அன்னை பூமி பதிவர் ராகவிற்கு நன்றி. என் எழுத்துக்களின் முதல் ரசிகர் என் கணவர், அழகிய தமிழ் சொற்களை தெரிந்து கொண்டதாக சொல்லும் என் இரண்டாவது மகன் சிவாவிற்கும் நன்றி. மற்ற அன்னை பூமி ப்ளாக்கர் ப்ரணவன் ஆச்சரியமான மகிழ்ச்சி கலந்த பார்வைகளுக்கு "எப்படிம்மா எழுதுறீங்க?" நன்றிகள்.
கவிதைகளுக்கு பாரட்டு தெரிவித்து ஊக்குவித்த கவிதை வீதி சௌந்தருக்கும், , பதிவர் வேடந்தாங்கல் கருனுக்கும , பதிவர் நாஞ்சில் மனோ அவர்களுக்கும் நன்றிகள்.
ரொம்ப சென்சிடிவான கட்டுரைகள் எழுதி , என்னுடைய நோக்கத்தை -இனிய இல்லறம்- வேறு வகையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் (வயதில் சிறிய) சகோதரர் திரு. சண்முகவேல , அவர்களுக்கு நன்றிகள்
தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் ஆர்வமாக சொல்லும் அருமை மகளாக நான் கருதும் ராஜிக்கு என் நன்றிகள்.
மிக ஆர்வமாக தங்களுடைய பங்களிப்பினை செலுத்தி உற்சாகப்படுத்து சக மதுரை பதிவர்கள் தமிழ் வாசி பிரகாஷ் , ரமணி சார் அவர்களுக்கும்
நன்றிகள்.
தமிழ்தோட்ட நண்பர்கள் யூஜின், சிசு , அரசன், ரஜெப்டீன், அரொனி, ப்ரஷா, நிலாமதி, திரு.ராமனாதன், கவிக்காதலன், கவிதைகள் அனைவருக்கும் நன்றிகள்.
மேலும் பதிவர்கள் நா. மணிவண்ணன, VELU.G ராஜராஜராஜன்,, ஆரூர்.மூணா. செந்திலு, நையாண்டி மேளம் , பாட்டு ரசிகன் ,ஜீவன் சிவம் , ரங்கன், உழவன் , ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி , அவர்கள் உண்மைகள் சக பெண்பதிவர்கள் முத்து லெட்சுமி , லட்சுமி மேடம் , மாலதி , விஜி மேடம் அனைவருக்கும் நன்றிகள்.
இன்றுடன் நூறு இனி எத்தனை என்று தெரியாது, ஆனால் அத்தனையிலும் மகிழம்பூச்சரத்தின் நோக்கம் மாறாது , இன்னும் தெளிவான கருத்துக்களுடன் உங்களுடன் பதிவுலகில் என் காலடித்தடங்களும் தொடரும். நன்றி.