மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

உயிரான சிலை ஒன்று
வடிக்க நினைத்து....
கருவிலே பிண்டம் சுமந்து,
கடவுளிடம் இரவல் வாங்கி,
உயிர் மூச்சு கொடுத்து
உலவ விட்டவள், அன்னை!
இறக்கி வைத்துவிட்டாலும்
இறக்கி வைக்க மனமில்லாமல்,
மனதில் பிரியம் சுமந்து
கடைசி மூச்சு விட்டவளை
பிரிந்தாலும் பிரியாமல்
நினைவு சுமந்து அலைகிறேன்
கண்ணீரில் கலைகிறேன்
நினைவுகளின் கர்ப்பகாலம்
எத்தனை வருடங்களோ?

18 comments:

ரொம்ப நல்லாருக்கு

இண்லியில் இணையுங்கள் அதிக மக்களுக்கு சென்று சேரும்

அசத்தல், சூப்பர் கவிதை...

//பிரிந்தாலும் பிரியாமல்
நினைவு சுமந்து அலைகிறேன்//

ஆஹா, அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.

**!!!!!**

//கடவுளிடம் இரவல் வாங்கி,உயிர் மூச்சு கொடுத்து உலவ விட்டவள், அன்னை//
அருமையான வரிகள்.....

//கடவுள் ஒவ்வொருவரிடமும் வந்து இருக்க முடியாதால்தான் அவர் வாழும் தெய்வாமாக அன்னையை படைத்து நம்மிடம் அனுப்பி வைத்துள்ளார் // ( மேலும் படிக்க இங்கே செல்லவும் http://avargal-unmaigal.blogspot.com/2011/05/blog-post_08.html )
இது எனது பதிவில் வந்த வரிகள். அன்னையாகிய உங்களுக்கும் இந்த வரிகள் மிகவும் பொருந்தும். உங்களுக்கு எனது இதயப் பூர்வமான அன்னையர் தின வாழ்த்துக்கள்

நினைவுகளின் கர்ப்பகாலம்
எத்தனை வருடங்களோ?//
என்றென்றும் மறக்க முடியாத வரிகள்.

அருமையான வரிகள். நல்ல கவிதை...

மனதில் பிரியம் சுமந்து
கடைசி மூச்சு விட்டவளை
பிரிந்தாலும் பிரியாமல்
நினைவு சுமந்து அலைகிறேன்
அருமை அம்மா. . .
வாழ்க்கை ஓட்டத்தில்
மேகக்கூட்டங்களின் மத்தியில் நினைவில் நீங்காத வானம் அம்மா. . .

//ஆஹா, அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.// நன்றி சார்

பாராட்டிற்கு நன்றி திரு. சண்முகவேல்.
வருகைக்கு நன்றி திரு.சதீஷ்குமார்
கருத்துரைக்கு நன்றி திரு.மனோ

//thirumathi bs sridhar said...

**!!!!!**//

Thank you

Avargal Unmaigal said...

//கடவுளிடம் இரவல் வாங்கி,உயிர் மூச்சு கொடுத்து உலவ விட்டவள், அன்னை//
அருமையான வரிகள்.....

Thank you.

Thank you C-SU sir

நன்றி இராஜராஜேஸ்வரி

//வாழ்க்கை ஓட்டத்தில்
மேகக்கூட்டங்களின் மத்தியில் நினைவில் நீங்காத வானம் அம்மா. . .// ஆமாம் பிரணவன்.

நினைவுகளின் கர்ப்பகாலம்?
எத்தனைப் பொருள் பொதிந்த வாக்கியம்!
அவை ஆயுள்கால கர்ப்பம் அல்லவா?
தொப்புள் கொடியறுந்தபின்னும் தொடரும் உணர்வுக்கொடியின் மேன்மை சொல்லும் கவிதை வெகு அருமை.