சிவந்த கண் கண்டு .....
சற்றே கவனம் கொண்டேன்!
சினம் கொண்ட எதுவோ சீறிட
கூரிய நகம் கண்டு
பாதுகாப்பாக மரம் ஏறினேன்!
மற்றொன்றோ தலை தூக்கி
விஷப் பற்கள் நீட்டியது
பத்தடி தள்ளி ஓடினேன் !
சில மிதிக்க வரும்போது
காலடியில் சிக்காமல்
பாறையின் பின் ஒளிந்தேன்!
எதுமே இல்லாத நேரத்தில்
- ஆனந்தமாய் தேன் குடித்து
- வேர் உண்டு, உறங்கி களித்தேன்
- பயம் இல்லாதபோது
- சிறிது பாசம் பரிமாறினேன்
வானம், பூமி மாறாத
கால ஓட்டத்தில் சிக்கி
ஒரு கணப் பொழுதும்
நிம்மதி உறக்கத்தில்
இமை மூடமுடியாத
கட்டிடங்களின் காட்டில்
மரங்களை இழந்து
தனித்து நிற்கிறேன்.
பார்வையில் பேச்சில்
செயலில் தெரியாத
மனித தோல் மிருகங்கள்
என் கவனம் சிதற்றாமல்
ஒளிய இடம் தேடவிடாமல்
ஓடி செல்ல அவகாசம் இன்றி
நொடிக்கும் நேரத்தில்
என் உலகத்தை கலைத்திட
காட்டு வாழ்க்கையை
மீண்டும் வேண்டினேன்.