மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

செல்ல மகளுக்கு,

       இங்கு அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலமா? உன் மாமியாரிடம் திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்னதாக தெரிவித்துவிடு. எப்படி தெரியும் என்கிறாயா? புதிய உறவுகளிடம் பேசும்போது பிடித்தமானவை மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட இனிய நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
மற்றவர்களை பற்றி வீண் பேச்சு பேசுவது தவிர்க்கப்படும். அவர்களூக்கும் நம்மிடம் மரியாதை கிட்டும். பிற்பாடு தேவையில்லாத பிரச்சைகளில் நம்மை பற்றி யாரும் பேச முடியாது. " அவங்க இதுபோல பேசியிருக்க மாட்டார்களே" என்ற பதில்தான் கிட்டும்.

   நீ உன்னை நல்லபடியாக கவனித்துக் கொள்ளவேண்டும். கண்டிப்பாக நம்மை சுற்றி இருப்பவர்கள் கவனித்துக் கொண்டாலும் ஒருவித ஜாக்கிரதை உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு மருத்துவர் ஆலோசனைபடி நடந்து கொள். மூத்த பெண்மணியான உன் மாமியாரும் சொல்வார்கள். ஆனால்
மனம், எண்ணங்கள் சம்பந்தப்பட்ட விசயம் நீதான் கவனமாக இருக்க வேண்டும. வயிற்றில் குழந்தை இருக்கும்போது பய உணர்வு இருக்கக்கூடாது. மிகவும் பதட்டமாகவும் சிறிய விசயகளுக்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் - அவர்கள் தாயின் வயிற்றில் இருந்தபோதே பயத்தால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று மருத்துவம் சொல்கிறது. சற்று வயதாகும்போதே எளிதாக இரத்த அழுத்தம், பதட்டம் இவற்றிற்கு ஆளாகி விடுகிறார்கள். இன்னும் கூட பல பிரச்சினைகள் குழந்தைக்கு எதிர்காலத்தில் வரலாம். எனவே தனியாக எங்கும் செல்லாதே, இரவில் அடுத்த அறைக்கு சென்றாலும் விளக்கை போட்டுவிட்ட செல். குழந்தைகள் ஓடி விளையாடும் இடத்தில் பாதுகாப்பான தொலைவில் நில். திடீரென்று ஓசை எழுந்தால் அதிர நேரிடலாம். வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் இவ்வளவு பார்க்கமுடியாது. அதனால் மன தைரியத்திற்காக நல்ல விசயங்களை படிக்கலாம். சிந்திக்கலாம். ஆன்மீக விசயங்களை மனதில் பதிய வைக்கலாம். வயிற்றுக் குழந்தை விழிப்புடன் உன்னுடைய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளும். சில குழந்தைகள் சமர்த்து என்பதன் அடிப்படை கருவில் இருக்கும்போதே தரப்படும் உள்ளீடுகள்தான். ஆழமாக பதிக்கப்படும் கருத்துக்கள் காலம் முழுமைக்கும் அவர்களுக்கு நாம் தரப்போகும் பாதுகாப்பு பத்திரம் - இன்றியமையாத சொத்து.

    அபிமன்யு அன்னையின் வயிற்றில் இருந்தபோது சக்கரவியூகம் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தார். போர் முனையில் போராளிகள் எதிரிகளை அதிர் கொள்ளவும் அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவும் சில அமைப்புகளில் நிறுத்தப்படுவார்கள். தாமரை மலர் விரிந்தது போன்ற அமைப்பு, சுருள் வடிவ சக்கர அமைப்பு, சர்ப்ப வடிவ அமைப்பு போன்றவை அவற்றில் சில. இதில் சக்கர வியூகம் என்பது மிக தந்திரமானது வட்டவடிவ அமைப்பில் நடுவேதான் எதிரியின் தலைமை வீரன் இருப்பான். சக்கர வியூகம் நகர நகர இந்த பக்கத்தில் யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. ஒரு அடிகூட முன்னேறமுடியாமல் மலைத்து நிற்க வேண்டியதுதான். இதன் அமைப்பை விவரித்து கொண்டிருந்த போது அர்சுனனின் மைந்தன் அபிமன்யும் கேட்டுக்கொண்டிருந்தான். வியூகத்தை உடைத்து உள்ளே புகும் மட்டும் கேட்டுவிட்டிருந்தவன், ஏதோ ஒரு அயர்ச்சியினால் அன்னை உறங்க ஆரம்பிக்க ஸ்ரீகிருஷ்ணர் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் சக்கர வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. பின்னாளில்
அர்சுனன் சக்கர்வியூகம் பற்றி சொல்லும்போது, ஏற்கனவே தெரிந்த விசயம் போல இருந்ததாம். அதனலேயே அந்த விசயம் முதலில் தெளிவான தோற்றம் காட்டி பின்னர் வரக்கூடிய தெளிவில்லாத முடிவை மறைத்தது. அதுவே அபிமன்யூவின் முடிவிற்கும் காரணமானது. உண்மையில் இது கர்ப்பிணி பெண்கள் கேட்க வேண்டிய கதையாகும். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே நிறைய விசயங்களை உள்வாங்குகிறது என்பதுதான்.

   நல்ல எண்ணங்கள் ஒரு நல்ல மகவை உனக்கு தரும். ஒரு தாய் வயிற்றுக்குழந்தைகளிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் இருக்க இதுவே காரணம். அவை கருவறையில் இருக்கும்போது வெவ்வேறு சூழ் நிலைகள் அமைந்திருக்கலாம். எல்லோரும் சொல்வதுபோல்
ஒரு குழந்தை நம் தேவையல்ல. நல்லவனாக வலம் வரப்போகும் மனிதனை தருவதுதான் முக்கியம். சின்ன விசயங்களுக்கெல்லாம் மனதை பாதிக்க விட்டோமெனில் பெரிய இழப்பு நம் குழந்தைக்கும்தான். எனவே கவனமாக இந்த பத்து மாதங்களையும் கடக்க வேண்டும்.

உன்னிடத்தில் இருக்கும் எங்கள் வீட்டுப்பெண் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள். நீட்டிகின்ற கரத்தை பற்றிக் கொண்டு உடன் வருகிறாள். மகிழ்ச்சி. மீதி அடுத்த கடித்ததில்
அன்புடன்
ஒரு மகளின் மகளான அன்னை. 6. ஒரு மகளின் மகளான அன்னை 

20 comments:

மிகவும் சுவாரஸயம்....

அடுத்த கடிதத்தில் சந்திப்போம்..

ஒரு தாயின் பாசம், அட்வைஸ், கண்டிப்பு, நேசம், எச்சரிக்கை உணர்வு என அசத்தலான கடிதம்....!!!

அருமை அருமை....

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. திரு.சௌந்தர்.

விரிவான கருத்துரைக்கு நன்றி திரு.மனோ

நல்ல வழிகாட்டல்

Dear Sakambari,
Your wards are 100% correct.
I narrated the same to my daughterinlaw and took propercare while she was in pregnant last year.
Now i am enjoying the fruit by having my Siddhu(grandson) a healthy baby and very cute.
This write up is a must to a tobe mother.
Thanks dear.
viji

சக்கர வியூகம் சூப்பர் .வாழ்த்துக்கள்.

கடிதம் அருமையாக செல்கின்றது . என் மனைவி கர்ப்பமாக இருந்த பொழுது அதிகம் கர்னாடக இசையும், ராமாயண கதா காலட்சேப சி டி கேட்பாள் அதன் விளைவு, என் மூன்று வயது மகள் கர்னாடக இசையில் இப்பொழுதே ஆர்வம காட்டுகிறாள்

படிக்கும் அனைத்துப் பெண்களுக்குமே பயன்படும்படியான நல்ல பயனுள்ள அழகான கருத்துக்கள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது, குறிப்பிட்ட வேத மந்திரங்களும், வீணை இசையும் அந்தப்பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே இன்றும் பல இடங்களில் இதற்கான ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்கின்றனர்.

அருமையான கடிதம்... இனி அடிக்கடி வருகிறேன்.

உங்கள் கடிதங்கள் அருமை. நீங்கள் சொல்லுபவைகளெல்லாம் உதட்டில் இருந்து வராமல் உள்ளத்தில் இருந்து வருவதால் எல்லா நல்ல இதயங்களையும் தொட்டு செல்கின்றது.உங்களுக்கு நல்ல சிந்தனைகள் அதனால் உங்களிடம் இருந்து வருபவைகள் மிகவும் நல்ல பதிவுகளாக வருகின்றன. உங்கள் பிள்ளைகள் மட்டுமில்லை நாங்களும் உங்கள் நல்ல கருத்துகளை பின்பற்றுவர்களாக இருக்கின்றோம். வாழ்க வளமுடன்.

அடுத்த அடுத்த கடிதங்கள் ஒவ்வொன்றிலும்
சுவையும் விஷய கனமும் கூடிக்கொண்டேபோகிறது
எங்கள் வீட்டுப்பெண் உன்னிடத்தில்....
கடைசி வரிகள் மிக அருமை
அடுத்த கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து...

//நல்ல வழிகாட்டல்// நன்றி திருமதி.ஸ்ரீதர்

Thank you very much madam. comments from such a lovingly grandmother gives golden lines to this post.

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. சண்முகவேல்

உங்களுடைய கருத்துரை இந்த பதிவிற்கு வலு சேர்க்கிறது. நன்றி திரு.எல்.கே

உண்மைதான் சார். தங்கள் கருத்துரைக்கு நன்றி.

வாங்க பிரகாஷ். கருத்துரைக்கு நன்றி.

நன்றி என்கிற வார்த்தையை தவிர வேறு நான் என்ன சொல்ல.. இளையவர்களின் ஆதரவு என்னை மகிழ்விக்கிறது.

கடிதம் எழுதுவதும் ஒரு வகையான் இலக்கியம். அதனை பயன்படுத்தி சில கருத்துக்களை முன் வைக்கிறேன். நன்றி திரு.ரமணி சார்.