மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்
கண்ணை மறைக்குது .....
மற்றுமொரு பனித்திரை!
மூடிய மறுபக்கம்.....
பாதை தொடரணும்...
மூச்சு வாங்கும் ஏற்றமோ,
முடிவிலா கிடுகிடு பள்ளமோ,
ஏதுமறியா சம தளமோ,
 பயணி,  நான் கவனிக்கனும்
 தடையில்லாம செல்லணும்.
வழிச்செலவுக்கு மேல...
பிற்பாடு தேவைக்கு
அங்க போய் கணக்கு சொல்ல
இன்னும் கொஞ்சம் சேக்கணும்!
பயணமோ பாதியிலதான்
மிச்சத்தையும் மூட்டை
கட்டிக் கொண்டு ....
எப்படியிருந்தாலும்
ஈசன் அருளால்
ஊர் போய் சேரணும்.

16 comments:

கவிதை செம சூப்பர்

ம்.. அசத்தல் கவிதை..
வாழ்த்துக்கள்..

கருத்துரைக்கு நன்றி திரு.பிரகாஷ்

வழக்கம் போல அசத்தல் கவி வரிகள்....

நன்றி பாட்டு ரசிகன

கருத்துரைக்கு நன்றி நாஞ்சில் மனோ

எப்படியிருந்தாலும்...
மிகச் சரியான இடத்தில் மிகச் சரியான வார்த்தை
படைப்பை உச்சத்திற்கு இட்டுச்செல்கிறது
அருமை அருமை
தொடர வாழ்த்துக்கள்

வணக்கம் வருகைக்கும் பாரட்டிற்கும் நன்றி திரு. ரமணி.

ஆஹா! தத்துவம் காட்டுகிறது சகோ நன்று

//ஆஹா! தத்துவம் காட்டுகிறது சகோ நன்று// நன்றி திரு. சண்முகவேல்

அருமை கவிதை..வாழ்த்துக்கள்

குட் ஒன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜேஸ்வரி.

//குட் ஒன்// நன்றி திரு. எல் கே

வாழ்க்கைப் பயணத்தை வடிவாய்ச் சொல்லியிருக்கிறீகள். கவிதை நன்று.

பாராட்டிற்கு நன்றி கீதா.