மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

   முந்தைய பதிவில் நான் கேட்டகேள்விகளை இரண்டுவிதமாக அணுகலாம். ஒன்று சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்துவது அல்லது அடக்குதல். இந்த இடத்தில் நம்மை கட்டுப்படுத்துவதுடன் சூழ்நிலையையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இதனை கையாளுவது எப்படி? இரண்டாவது, இது போன்ற மறைப்புகள் இன்றி ஒருவரிடம் நம்மால் எப்போதெல்லாம் பேச முடியும்?

   முதலில், தன்னை மறுத்தல். மறைத்தல் என்றே சொல்லலாமே ஏன் மறுத்தல் என்று சொல்லவேண்டும். நமக்குள் எப்போதுமே இரண்டு குணதிசயங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதை முதலில் உணரவேண்டும். ஃப்ராய்டு சொன்ன மூன்று குணதிசயங்களில் - இட், ஈகோ, சூப்பர் ஈகோ- ஏதாவது இரண்டு மட்டுமே ஒரே சமயத்தில் செயல்படும். இட் என்பது ஆசை மனம். லௌகீக விசயங்களுக்கு முதலில் இதுதான் ரியாக்ட் செய்கிறது. ஒரு சந்தோசமான விசயம் நடக்கும்போது, ஜாலியாக எம்பி குதிக்கத் தோன்றும் அல்லது சின்னதாக விசில்கூட அடிக்கத் தோன்றும். இது இட்'ன் செயல்பாடு. நம்முடைய ஈகோதான், ஆழ்மனம், இதனை கட்டுப்படுத்தும். நடு ரோட்டில் வைத்து விசிலடிக்கக்கூடாது, இத்தனை பேருக்கு முன்பு குதிக்கக்கூடாது, தனிமையில் இதையெல்லாம் செய்து கொள் என்று நாம் இட்'ன் செயல்பாட்டிற்கு போகும் முன் அழுத்தமான குரல் கொடுத்து நம்மை கட்டுப்படுத்தும். மறுத்தல் என்பது, ஈகோவின் வேலை. நமக்கு நாமே சொல்லி கட்டுப்படுத்துகிறோம்.


   தளர்ந்துபோன சில வேளைகளில் , என் பெயரை நானே சொல்லி - மெல்லிய குரலில்தான் ஆனால் அழுத்தமாக - " விடுப்பா, இன்னும் சந்தர்ப்பம் இருக்கு, ஜெயிப்போம். அது வரைக்கும் முயற்சிப்போம்." என்று தேறுதல் சொல்லி இருக்கிறேன். நம் பெயரை சொல்லி ஒரு விசயத்தை நமக்குள் பதியவைப்பது நல்ல பலன் தரும். யாரோ நம்முடன் துணைக்கு இருப்பது போன்ற உணர்வினை தரும். புதிய சக்தி கிட்டும். இங்கெல்லாம் நாம் ஈகோவை பயன்படுத்துகிறோம்.


உண்மையில் ஈகோவிற்கு இதையெல்லாம் யார் கற்றுத்தருவது. நாம்தான். பார்த்து, படித்து, கேட்டு மனதில் பதிய வைத்த விசயங்கள்தான் நம்மை ஒரு சூழ்நிலையில் இயங்க வைக்கின்றன. நல்ல வெளிப்பாடு, தவறான வெளிப்பாடு என்பன நாம் மனதில் இருத்திக் கொண்ட விசயங்களால்தான். சொல்லப்போனால் நம்முடைய சில வெளிப்பாடுகள் , யாராலோ நடிக்கப்பட்டு நமக்குள் ஒத்திகை பார்க்கப்பட்டவைதான். அதனால்தான் முற்றிலும் புதிதான ஒரு சூழ்நிலையில் செயலற்று போய் நிற்போம். திகைத்த பார்வையுடன் , அதிர்ச்சியாய் உறைந்து நிற்போம். இந்த சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வது என்பது இட்'ற்கும், ஈகோவிற்கும் தெரியாது. இட் சந்தர்ப்பத்தை உணர்ந்தால், ஈகோ சூழ்நிலையை எடைபோடும். 

     உதாரணமாக, நாம் ஒரு காட்சிக்குள் நுழையும்போது, அதற்கேற்ப சில எதிர்பார்ப்புகளையும், பாவனைகளையும் இட் உருவாக்கும். ஈகோ தன்னுடைய நினைவுப்பதிவுகளை திருப்பி, இது போன்ற காட்சியில் எப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படுவோம் என்பதை பட்டியலிட்டு தயாராக இருக்கும். உதாரணமாக , ஒரு பிரச்சினை சம்பந்தமாக முக்கியமான நபரை சந்திக்கப்போகிறோம் என்று கொள்வோம். நம் உயர் அதிகாரியாக இருக்கலாம். அவர் கேட்கப்போகும் கேள்விகளுக்கு நாம் மனதளவில் தயாராக இருப்போம். கோபம் மூட்டும் வகையில் பேசினால், எப்படி கையாளுவது என்ற முன்மாதிரி திட்டத்தை மனம் தயார் செய்யும். அதன் படியே காட்சியும் சென்றால், நல்லது. எதிர்பாராத விதத்தில் சூழ் நிலை மாறினால் - நாம்  உணர்ச்சி வசப்படும் நிலை வந்தால், ஈகோ உடனே செயலுக்கு வந்து விடும். நம்மை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈகோவிற்கும், சூப்பர் ஈகோவிற்கும் உண்டு சூப்பர் ஈகோ நம்முடைய உயர்வான எண்ணங்களின் பிரதிநிதி. கடவுள் மாதிரி. ஆனால் நிறைய சமயங்களில் ஈகோ அளவிற்கு விரைவாக செயல்படுவதில்லை. இட் அல்லது ஈகோவின் செயல்பாடு முடிந்தபின் மெதுவாக ஆனால் தெளிவாக நம்மை பாராட்டும் அல்லது குற்றம் சாட்டும். சூப்பர் ஈகோவை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம்.


 உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையில் - கண் சிவந்து உரக்க கத்துவது, கட்டுபாடின்றி நடந்து கொள்வது, வேண்டியவர்கள் முன்னிலையில் சில சமயம் ஆதங்கமாய் கண்ணில் நீர்கூட வரும் என்பது இட்'ன் விளைவு ஆகும். " இவர்கள் முன்னிலையில் கட்டுப்பாடு இழக்காதே, இப்போது என்ன நடந்துவிட்டது அமைதியாக இரு. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். " இது போன்ற கட்டுப்பாட்டு திட்டங்களை  ஈகோ செயல்படுத்தும். விரைவாக செல்லும் வண்டியை பிரேக் போட்டு நிறுத்துவது போல், கட்டுபாடு வரும். இதன் விளைவாகவும் அனிச்சையாக கண்ணில் நீர் வரும். ஆக நம்மை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஈகோவிற்கு நல்ல விசயங்களை பதிவு செய்ய வேண்டும். அதிகம் படித்தல், அதிக விசங்களை பகிர்ந்து கொள்ளுதல், தொலைகாட்சியில் நல்ல நிகழ்ச்சிகள்கூட நம் ஈகோவிற்கு நிறைய சொல்லித்தரும். டிஸ்கவரி சேனலில் , ஒரு ஓட்டப்பந்தைய வீராங்கனை எதிர்பாரா
த விபத்தில் சிக்கி முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்ட நிகழ்ச்சி எனக்கு நிறைய விசயங்களை சொல்லித் தந்தது. நம்மை கட்டுப்படுத்தும் ஈகோவை நல்லபடியாக உருவாக்கினால், அது வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உறுதி.
                                                                                                                - இன்னும் மீதி நாளை


தன்னை மறத்தல் அல்லது மறுத்தல் -3

11 comments:

இட்-ஈகோ விளக்கம்
எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படியாக இருந்தது
தொடர்ந்து வருகிறோம் தொடர வாழ்த்துக்கள்

கருத்துரைக்கு நன்றி திரு.ரமணி. தொடர்ந்து exam schedule. எனவே இந்த பதிவு கொஞ்சம் தாமதமாகி விட்டது.

அருமையான தெளிவான விளக்கம் மேடம்.
உங்கள் பதிவுகள் இன்னும் நிறைய பேரை சென்றடைந்து பல பேர்
பயனடைய வேண்டும் என்பது எனது விருப்பம்.நீங்கள் உங்கள்
பதிவுகளை இண்ட்லி, தமிழ்மணம் போன்றவற்றில் சப்மிட் செய்தால்
இன்னும் பலர் படித்துப் பயன் பெற வாய்ப்புகள் அதிகம்.
இதைப் பற்றி யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

appurm varen

எனக்கு ஓட்டை வாயின்னு வீட்ல சொல்றாங்க, மனசுல ஒன்னும் வைக்காம [[ரகசியம் கூட]] எல்லாத்தையும் சொல்லி புடுறேனாம். ம்ம்ம் உங்க பதிவை படிச்சி கொஞ்சம் புருஞ்சிகிட்டேன்....நன்றி....

எனது பதிவில் தங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்

http://suharaji.blogspot.com/2011/04/blog-post.html

இட் அன்பது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உடனடுக்குடன் பதில் அளிக்கும் (உணர்ச்சிவசப்படுதல்). ஈகோ இதைக் கட்டுப்படுத்தும்

ஒரு ரகசியம் சொல்லட்டுமா ராஜி. நான் தமிழ் மணத்தில் பதிவுகளை இணைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். பாரட்டிற்கு நன்றி ராஜி.

அதேதான் , உங்களுடைய ஈகோவை கொஞ்சம் பலப்படுத்த வேண்டும். ஆனால் , அப்படி செய்யும்போது உங்களுடைய நண்பர்கள் எண்ணிக்கை குறையலாம். கவனம் தேவை. நன்றி திரு.மனோ.

சரிதானே , நானும் அப்படித்தான் கூறியுள்ளேன் என்று நினைக்கிறேன். நன்றி.திரு.எல்.கே.

ஆமாம்