மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


தோல்வியை அலட்சித்து
ஆரம்பத்தில் சின்ன வெற்றிகள்
நினைத்தபடியே நடந்தது
எண்ணிய காரியம் பலித்தது


கொஞ்சம் வளர்ந்தபின்
மனதில் அச்சம் வந்தது
உயரத்திலிருந்து விழுந்தால்
எழுந்து நிற்பது எப்போது...
பாதுகாப்பாக.....
இறைவனிடம் வேண்டுதல்கள்


இன்னும் உயரம் கூடிய 'நான்'
வெற்றி வசப்பட்ட பிறகு....
கண்ணுக்கு தெரியாத கடவுள்
சில சமயம் நினைவில் வந்திட(?)
எப்போதாவது நன்றி அறிவிப்பு


திகட்டத் தொடங்கிய வெற்றி
அடுத்த கட்ட வெறுமையை
வெளிச்சமிட்டு காட்டிய போது.
ரொம்ப உயரத் தனிமையில்...


ஆகாயம் நோக்கிய பார்வைக்கு
ஆண்டவன் கிட்டவில்லை
பூமியை நோக்க மனிதர்களும்
காணாமல் போயிருந்தனர்.
இல்லை... இல்லை....
இப்போது உண்மையில்
காணாமல் போனது '
நான்'தான். 

5 comments:

அசத்தலா இருக்கே...

அய் வடை'யையும் நானே சுட்டாச்சி....

கருத்துரைக்கு நன்றி திரு.மனோ.

ஆழ்ந்தக் கருத்துக்கள் . எளிமையான வார்த்தைகள்

நன்றி திரு.எல்.கே.