மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இடறி விழுந்த போது
கால் நகம் பெயர்த்து
குருதி முகம் காட்டிட
மண் போர்த்திட.....

தலைக்கு சுமை தந்த
தட்டு கவிழ்ந்திட .......
உறக்கம் கலைந்த செங்கல்
பல்லகிலிருந்து இறங்கிட...

திடீரென்ற அதிர்வில்
கூலித் தொழில் நிறுத்தி,
பார்வைகள் திரும்ப
இரக்கம் வரும்முன்....

கட்டிடத்தையும் மனதையும்
கல்லால் கட்டியதை சொல்லும்
அதிகாரப் பார்வை மாறி
போலியாய் பதறியது.


இன்று மாலை கையில்
பணத்தை வாங்கு முன்
பார்வைக்கு சம்பந்தமில்லா
பரிவுடன் கேள்வி எழும்

பிஞ்சு வயிற்றின் பசியெனும்
பள்ளத்தாக்கில் வாழ்க்கையோடு
மானத்தையும் புதைக்க பயந்து
போர்களத்து வீரனாய்

கண்ணில் வலி மறைத்து
தன்னிலை மறுத்து
மற்றுமொரு போராட்டம் தேடி
சுமை நோக்கி நகர்ந்தாள்.

11 comments:

இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க

நன்றி. மாலதி.

நன்றி.உழவன

good one

நன்றி திரு.எல்.கே

சுமை நோக்கி நகர்தல் என்பது
நிறையச் சொல்லிப்போகிறது
நிறைவான பதிவு
தங்கள் பதிவைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

வணக்கம் வருகைக்கு நன்றி திரு.ரமணி. மகிழம்பூச்சரத்தை நீங்கள் தொடர்வதில் நான்தான் பெருமிதம் கொள்ள வேண்டும். நன்றி.

பிஞ்சு வயிற்றின் பசியெனும்
பள்ளத்தாக்கில் வாழ்க்கையோடு
மானத்தையும் புதைக்க பயந்து
போர்களத்து வீரனாய்

கண்ணில் வலி மறைத்து
தன்னிலை மறுத்து
மற்றுமொரு போராட்டம் தேடி
சுமை நோக்கி நகர்ந்தாள்.
நல்ல சிந்தனை.

//பிஞ்சு வயிற்றின் பசியெனும்
பள்ளத்தாக்கில் வாழ்க்கையோடு
மானத்தையும் புதைக்க பயந்து
போர்களத்து வீரனாய்//

இதை விட சிறப்பாய் இந்த நிலையை
உணர்த்த இயலாது மேடம்

வணக்கம், வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம்.

ஹலோ, ஊரிலிருந்து வந்தாச்சா. சுட சுட கருத்துரை. நிறைய பெண்களை கட்டிப்போடுவது, காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடவிடுவது (குழந்தைகளின்) வயிற்றுப்பாடுதானே. நன்றி ராஜி.