மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

   இப்போது இன்னும் சில சந்தேகங்களை தெளிந்து கொள்ளலாமா?  இதுபோன்ற வருமானத் துரத்தல்களினால் மன அழுத்தம் கூடுகிறது என்றால், சிலர் எல்லோரையும் புறந்தள்ளிவிட்டு முன்னே ஓடி, பொருளாதார வசதியுடன் நல்ல மகிழ்ச்சியாக இருக்கிறார்களே? எப்படி? ( மனைவியோ , பிள்ளைகளோ என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாது). என்று தோன்றும். ஒரு மலையுச்சிக்கு வந்து திரும்பி பார்க்கும்போது அருகில் யாரும் இல்லாத தனிமை எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இது போல என் நண்பனுக்குத் தோன்றவில்லையே என்று சந்தேகம்கூட வரும். கடைசிக்கு தனிக்காட்டு ராஜாவாக நிம்மதி குறையாமல் இருக்கிறார்களே என்ரு கேள்வி எழும்.  விடு விடு அவனுக்கெல்லாம் மனசாட்சி இருந்தால்தானே மன அழுத்தம் வருவதற்கு என்று சமாதானம் சொல்லிக் கொள்வோம். அப்படியெல்லாம் இல்லை. இது வேறு விசயம்.  நிம்மதியின் அளவுகோல் வேறுபடும் காரணத்தை விளக்க , நான் ஹோமியோபதியின் தத்துவங்களைத்தான் உதவிக்கு அழைக்க வேண்டும்.

  மருத்துவ ரீதியாகவும் , மனோவியல் ரீதியாகவும் மனிதர்களை அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கலாம். தாவரவகை, மிருக வகை மற்றும் கனிம வகை மனிதர்கள் (Plant, animal, mineral). ஒருவரின் குணாதிசயம்தான் நோய்க்கு காரணமாகிறது. அதை புரிந்து கொண்டால்தான் சரியான மருந்து கொடுக்கமுடியும். அவரவர் வகைக்கு ஏற்ற மருந்தை பயன்படுத்துவதே வியாதியை குணப்படுத்தும். ( நம்முடைய பழங்கால முறைப்படிகூட அகஸ்தியர் மூலிகை மருந்துகளையும், புலிப்பாணி மிருகங்களிலிருந்து மருந்துகளையும் - இரத்தம் குடிக்கும் அட்டைகூட மருந்துதான், போகர் கனிம வகையில் மருந்துகளையும் தயாரிக்கும் ரகசியங்களை கொண்டிருந்ததாக படித்திருக்கிறேன்.)

நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் பழிசுமத்துகிறார் என்று கொள்வோம். இதற்கு பதிலாக - ஒன்று .நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று மனம் வருந்தி நமக்குள்ளேயே குமைந்து போவோம். இரண்டு, கோபமாக மறுதலித்து அவர்களை மீது மேலும் சில பழிகளை நம் பங்கிற்கு திருப்பிவிடுவோம். என்னை அவமதித்தற்கு பதிலடி என்பதன் விளைவு இது. மூன்றாவதாக பொறுமையாக அதனை விளக்க முற்படுவோம். நம்மை யாரும் தவறாக நினைக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பின் விளைவு இது மூன்றில் ஏதாவது ஒன்று நம்முடைய எதிர் செயலாக இருக்கும். பொதுவான ஒரு சூழ்நிலையை மூன்று விதமாக எதிர் நோக்குவது புரிகிறது அல்லவா?. இதுதான் முறையே தாவரவகை, மிருகவகை, கனிம வகை மனிதர்களின் செயல்பாடாக இருக்கும்.

    இப்போது நம்முடைய பதிவிற்கு வருவோம். மனிதர்களை விட்டு விலக்க முடியாமலும், முன்னேற்றம் கை விட்டு நழுவுவதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஒரு மன உளைச்சலில் சிக்கினால் நாம் தாவர வகை. உறவுகளையும் , முன்னேற்றத்தையும் விட்டுகொடுக்கும் முறைகளை பின்பற்றி தக்க வைத்துக் கொண்டால், கட்டுக்கோப்பாக வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் கனிம வகை மனிதர்களாவோம். எதையும் கண்டுகொள்ளாமல், தன் முன்னேற்றமே குறியாக சுய நலமாக செயல் பட்டால் அவர் மிருக வகை. பணம் இருந்தால் போதும் அத்தனையும் அடைந்து விடலாம் என்பார்கள். ( அம்மா, அப்பாவைத் தவிர அனைத்தையும் வாங்கி விடலாம் என்றுகூட சொல்லுவார்கள்.)

இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் எந்த வகை என்று புரிந்து அது போல முடிவெடுங்கள். உதாரணமாக தாவர வகையாக இருந்தால், கண்டிப்பாக உறவுகளை விட்டுப் பிரிந்து ஒரு வாழ்க்கையை விரும்பமாட்டீர்கள், தனிப்பட்ட அடையாளத்தை அடைய முடியாது. கனிம வகையாக இருந்தால் சமன் செய்ய முயற்சிப்பீர்கள்(negotiations), குடும்பத்தையும், தனி மனித முன்னேற்றத்தையும் பாலன்ஸ் செய்ய முயற்சிக்கலாம். இரண்டில் ஒன்று என்பது மன உளைச்சலைத் தரும். . மிருக வகை என்றால் சாதனை மனிதர்களாவீர்கள், சாதிக்கவிட்டால்தான் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

  இப்போது மற்றவர்களுடன் நம்மை ஒப்பு நோக்கி ஒரு முடிவெடுப்பது தவறு என்று புரிகிறதல்லவா? நமக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மன அழுத்தத்தை தவிர்த்து நிம்மதி என்னும் தென்றல் மனதிற்குள்ளேயும் வீசி மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.

13 comments:

ஏதோ கொஞ்சம் புரிகிறது. உதாரணங்களை இன்னும் ஒருசில சம்பவங்களின் மூலமோ சிறு கதைகள் மூலமோ [case study]போல விளக்கினால் நன்கு மனதில் பதியலாம் என்பது எனது கருத்து.

பதிவுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

//நமக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மன அழுத்தத்தை தவிர்த்து நிம்மதி என்னும் தென்றல் மனதிற்குள்ளேயும் வீசி மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம். //

சத்தியமான வார்த்தைகள்.

மனிதர்களின் வகை பிரித்து
பதிவிட்ட உங்களை
வகை தொகை இல்லாமல்
பாராட்டலாம்

ஐயா வை கோ சொன்னபடி சிறு கதை மூலமாக சொன்னீர்களேயானால்
புரிவதற்கு இன்னும் இலகுவாக இருக்கும் உங்களின் முயற்சியும் முழுமை அடையும்

மிக அருமையாகத் துவங்கி
மிக அழகாகத் தொடர்ந்து
மிகச் சரியான முடிவுரையோடு
முடித்துள்ளீர்கள்
நல்ல பயனுள்ள தொடர்
மேக்ரோ அனலிஸிஸ்
மைக்ரோ அனாலிஸிஸ் என்பதைப்போல
கணியன்பூங்குன்றனார் கூட
முதலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என
மிக விரிவான விஷயத்தை சொல்லி
மறு அடியில் தீதும் நன்றும் பிறர் தர வார என
மிக அழகாக சொல்லி முடிப்பார்
தங்கள் பதிவுமதை நினைவுறுத்திப் போனது
சூப்பர் பதிவு அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

case study? தயார் செய்கிறேன் சார். ரொம்பவும் விளக்கினால் ஹோமியோபதிக்குள் செல்ல வேண்டியதிருக்கும் என்று அப்படியே நிறுத்திவிட்டேன். நன்றி VGK சார்.

சத்தியமான வார்த்தைகள்.//கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்.

பாராட்டிற்கு நன்றி சார். எனக்கு சிறுகதை எழுதும் திறமை கிடையாது. ரொம்பவும் ஒரே கதாபாத்திரத்தில் ஆழ்ந்துவிடுவேன். அப்புறம் கதை எங்கே நகரும். ஆனால் கேஸ் ஸ்டெடி செய்கிறேன். நன்றி ராஜகோபாலன் சார்.

என்னுடைய சில கட்டுரைகளுக்கான ஒரே மாதிரியான தீர்வுகள் சங்ககால இலக்கியத்திலும் , இணையத்தில் பரவி கிடக்கும் ஆங்கில வழி சார்ந்த அனாலிசிஸ்களிலும் கிடைக்கிறது என்னை ஆச்சரியப்படுத்தும் விசயம் சார். இது பற்றிய தங்கள் பகிர்விற்கும் நன்றி ரமணி சார்.

http://www.atheetham.com/story/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D

antha link parkavum

தென்றல் இன்னும் கூட கொஞ்ச நாள் வீசி இருந்திருக்கலாம் போல இருக்கே

இன்னும் கொஞ்சம் சூழ்நிலை மேற்கோள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன, ராஜி. வருகைக்கு நன்றி.

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....